கேரளாவில் அபாரமாக நுழைந்த பாஜக.. தகர்ந்த கோட்டை.. இடதுசாரிகள் தோல்விக்கு காரணம் என்ன?
திருவனந்தபுரம்: கேரள மாநில உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரிகள் இதுவரை இல்லாத அளவிற்கு பின்னடைவை சந்தித்துள்ளார்கள். அவர்களின் கோட்டைகள் தகர்க்கப்பட்டிருக்கிறது. இதனால் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் இடதுசாரிகளின் கனவு தகர்ந்துள்ளது. காங்கிரஸ் பெரும்பாலான இடங்களில் வென்றுள்ளது. அதேபோல் வரலாற்றில் இல்லாத ஒன்றாக, அங்கு பாஜக இதுவரை இல்லாத அளவிற்கு வளர்ந்துள்ளது. கேரளாவில் உள்ளாட்சி தேர்தலில் கம்யூனிஸ்டுகள் தோல்வி அடைந்தது ஏன் என்று பார்ப்போம்.
கேரள அரசியலில் இடதுசாரிகளுக்கு இந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் மிகவும் கடுமையான ஒரு பின்னடைவு என்றுதான் சொல்ல வேண்டும். இன்று வெளியாகி உள்ள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு எச்சரிக்கை மணி தான்.

கேரள மாநில முதல்வர் விஜயனைப் பொறுத்தவரை, மக்களவைத் தேர்தல் தீர்ப்பு மாநில அரசுக்கு எதிரானது அல்ல, ஆனால் அது மோடி அரசின் மீதான மக்களின் அதிருப்தியின் பிரதிபலிப்பு என்று கூறியிருக்கிறார். அத்துடன் வாக்காளர்கள் இயல்பாகவே காங்கிரஸ் ஆட்சியை பரிசீலிக்கும் மனநிலையில் இருந்ததாகவும், இடது முன்னணிக்கு எதிராக உள்ளார்ந்த எதிர்ப்பு எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.
15 வருடங்களில் இல்லாத சரிவு
இருப்பினும், தேசிய அரசியல் பெரிய பிரச்சினையாக இல்லாத உள்ளாட்சித் தேர்தல்களில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரிகள் முன்னணி கடந்த 15 வருடங்களில் இல்லாத மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளன.
கோட்டைகள் தகர்வு
கொல்லம் மாநகராட்சியில் வரலாற்றிலேயே முதல்முறையாகத் தோல்வியடைந்திருக்கிறது. திருவனந்தபுரம் மாநகராட்சி கைவிட்டுப் போயிருக்கிறது. இடதுசாரிகள் வசம் இருந்த ஏராளமான நகரங்கள் காங்கிரஸ் கூட்டணி (யூடிஎப்) வசம் வந்துள்ளது. கடந்த முறையைவிட இந்த முறை இடங்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு இருமடங்கு கிடைத்துள்ளது. இடதுசாரி முன்னணி ஒட்டுமொத்தமாக 25 இடங்களை இழந்தது.
திருச்சூர் மாநகராட்சி பறிபோனது
திருச்சூர் மாநகராட்சி பறிபோயிருக்கிறது. கோழிக்கோடு மட்டுமே இடதுசாரிகள் பெரும்பான்மைக்கு ஒரு இடம் குறைவாக முன்னிலை வகிக்கும் ஒரே மாநகராட்சியாக இருக்கிறது. பெரும்பத்தமன்னா நகராட்சி, 30 வருடங்களுக்கு பிறகு கைமாறியிருக்கிறது. செங்கன்னூரில் உள்ள புதனூர், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள தலக்கலத்தூர், நென்முண்ட் மற்றும் பாலுச்சேரி போன்ற வரலாற்று ரீதியாக இடதுசாரிகள் வசம் இருந்த பஞ்சாயத்துகளும் வீழ்ந்தன. மாவேலிக்கரை நகராட்சியில் இடதுசாரிகள் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். மாநகர மேயர் பதவிகளுக்குக் கருதப்பட்ட பல முக்கிய இடதுசாரி பிரமுகர்கள் தோல்வியைச் சந்தித்தனர்.
மூன்றாவது முறை ஆட்சியமைக்கும் கனவு தகர்ந்தது
இந்த பின்னடைவு, இன்னும் ஆறு மாதங்களில் நடைபெற உள்ள கேரள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மாநிலம் தயாராகி வரும் நிலையில் வந்திருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க வேண்டும் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் லட்சியத்திற்கு கடுமையான அடியைக் கொடுத்துள்ளது. 2020 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளைத் தெளிவாக இப்படித்தான் இருக்க போகிறது என காட்டின. அதேபோல் 2025 ஆம் ஆண்டு முடிவுகளும் மக்களின் மனநிலையைத் தெளிவாகப் பறைசாற்றி உள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இடது முன்னணி இப்போது பரிசீலிக்க வேண்டிய நடவடிக்கைகளையும் சுட்டிக் காட்டியிருக்கிறது.
மத்திய கேரளாவில் பாதிப்பு
இதற்கிடையில், சபரிமலை தங்கக் கொள்ளை மற்றும் PM ஸ்ரீ சர்ச்சைகள் போன்ற பிரச்சினைகளில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடுகள் வாக்காளர்களின் கருத்தை, குறிப்பாக வட கேரளாவில், பாதித்தது. ஜோஸ் கே மணி தலைமையிலான கேரள காங்கிரஸால் கூட மத்திய கேரளாவில் வெற்றி பெற முடியவில்லை.
சிபிஎம் பலம் எங்கே
வரலாற்று ரீதியாக உள்ளாட்சித் தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு ரீதியான பலம், 2019 மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, தந்திரமாக திட்டமிடுவதன் மூலம் வெற்றிகளை உறுதி செய்தபோது வெளிப்படையாகத் தெரிந்தது. ஆனால் இந்த முறை, சாதகமான வார்டு எல்லை நிர்ணயம் கூட பெரிய அளவில் இழப்புகளைத் தடுக்க முடியவில்லை.
உள்கட்சிப்பூசல்கள்
இதனால், கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் உட்பட மாநிலத் தலைமை குறித்து கேள்விகள் எழுந்திருக்கிறது. இவருடைய பதவிக் காலத்தில் பல தேர்தல் பின்னடைவுகளைக் கட்சிச் சந்தித்திருக்கிறது. வளர்ச்சித் திட்டங்களுக்கு ஊழியர்களின் எதிர்ப்பைக் கையாள்வது மற்றும் உள் கட்சிப் பூசல்கள் தொடர்பான முடிவுகளும் ஆய்வுக்கு உட்பட்டிருக்கின்றன.
பாஜகவின் அபார வளர்ச்சி
இந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், பாரம்பரியமான இடதுசாரிகளின் கோட்டைகளில் பா.ஜ.க.வின் அதிகரித்துவரும் செல்வாக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இது புதிய சவால்களை உருவாக்கியுள்ளது. வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரிகள் இப்போது அவசரமான கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
-
ராகுல் காந்தி தமிழகத்திற்கு வர மறுத்துவிட்டாரா? பிரச்சாரம் தாமதமாவது ஏன்? - கிரிஷ் சோடங்கர் விளக்கம் -
ராகுல் வரலைன்னா.. பெரிய சிக்கலாகிடும்.. டெல்லியில் பதறிய தமிழக காங்கிரஸ் தலைகள்! என்னாச்சு? -
ஹசினா சையத் செயல் முற்றிலும் முறையற்றது.. சசிகாந்த் செந்தில் விமர்சனம் -
ஹசீனா சையத் கீழ்த்தரமான குணத்தை காட்டிட்டாங்க! காங்கிரஸ் மகளிர் அணி தலைவி அட்டாக்! -
காங்கிரஸுக்கு வில்லன் காங்கிரஸ் தான்.. திடீரென டெல்லிக்கு ஓடிய கர்நாடக MLAக்கள்! பதறும் சித்தராமையா -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள்












Click it and Unblock the Notifications