‛எங்களை அடிமைபோல் நடத்துறாங்க’.. ரகசிய இடத்தில் ராகுலிடம் புலம்பி தள்ளிய பாஜக எம்பி.. என்ன நடந்தது?
சென்னை: பாஜகவில் அடிமைத்தனம் செய்வது போன்ற போக்கு மனநிலை உள்ளதாக அந்த கட்சியின் எம்பி ஒருவர் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியிடம் புலம்பி தள்ளியுள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் உள்பட 28 கட்சிகள் இணைந்து ‛இந்தியா' கூட்டணியை உருவாக்கி உள்ளன.

இந்த கூட்டணி சார்பில் தலைவர்களின் 4 ஆலோசனை கூட்டம் நடந்து முடிந்துள்ளது. விரைவில் மாநிலங்கள் வாரியாக தொகுதி பங்கீடு மேற்கொள்ளப்பட உள்ளது.
இதற்கிடையே தான் ராகுல் காந்தி நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கி உள்ளார். அதாவது காங்கிரஸ் கட்சியின் தொடங்கியதன் 139வது ஆண்டு விழாவான இன்று ராகுல் காந்தி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் பாஜகவில் தொண்டர்கள், தலைவர்கள் அடிமைத்தனம் செய்யப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக ராகுல் காந்தி கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்த நிறையபேர் தற்போது எம்பிக்களாக உள்ளனர். அப்படியாக காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்த ஒருவர் லோக்சபாவில் என்னிடம் நடுக்கத்துடனும், ஒருவித பயத்துடனும் தனியாக பேச வேண்டும் என கூறினார். ரகசியமாக நான் அவரை சந்தித்தேன். அப்போது நீங்கள் பாஜகவில் இருக்கிறீர்கள். நான் காங்கிரஸை சேர்ந்தவன். என்னிடம் ஏன் நீங்கள் பேச வேண்டும் என பதிலுக்கு கேட்டேன்.
இதை கேட்டதும் அவரது முகத்தில் பயம் தொற்றி கொண்டது. இதையடுத்து நான் எல்லாம் சரியாக தானே இருக்கிறது எனக்கேட்டேன். அத்க அவரிடம் இருந்து பதில் வரவில்லை. இருப்பினும் பாஜகவில் இணைந்தை தற்போது என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. நான் பாஜகவில் தற்போது இருக்கிறேன். ஆனால் என் மனம் முழுவதும் காங்கிரஸிடம் இருக்கிறது என்றார்.
இதை கேட்ட நான் உங்களின் உடல் பாஜகவில் உள்ளது. மனம் காங்கிரஸ் கட்சியில் உள்ளது. உங்களிடம் பயம் உள்ளது என்றேன். அதோடு ஏன் பயப்படுகிறீர்கள் என வினவினேன். அதற்கு அவர் பாஜகவில் அடிமைத்தனமான போக்கு உள்ளது. இவர் இப்படி தெரிவிக்க என்ன காரணம்? என்பதையும் விளக்கினார். அதாவது பாஜகவில் மேலிடத்தில் இருந்து தான் உத்தரவுகள் வரும். அந்த உத்தரவுகளை தான் பின்பற்ற வேண்டும். மாறாக கட்சி தொண்டர்களின் குரல்கள் கேட்கப்படுவது இல்லை. மேலிட முடிவு நமக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் கூட நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.
ஒரு காலத்தில் அரசர் போடும் உத்தரவுகளை மக்கள் அப்படியே பின்பற்ற வேண்டிய சூழல் இருந்தது. இது தற்போது பாஜகவில் நிலவி வருவதாக கூறி புலம்பினார்'' என ராகுல் காந்தி கூறினார். இந்நிலையில் தான் ராகுல் காந்தியை ரகசியமாக சந்தித்து புலம்பிய பாஜக எம்பி யார் ? என்பது பற்றி நெட்டிசன்கள் குழம்பி வருகின்றனர்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications