சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழ் என்ன பிரியாணி அண்டாவா? சங்கித்வா தூக்கிச்செல்ல.. காவி பிராண்ட் சங்கம் -கொதிக்கும் டிஆர்பி ராஜா

Google Oneindia Tamil News

சென்னை: தமிழை இந்தி, சமஸ்கிருத சேற்றில் தள்ள சதி செய்யும் காசி தமிழ்ச் சங்கம் என்று மன்னார்குடி திமுக எம்.எல்.ஏவும் அக்கட்சியின் தொழில்நுட்ப அணி தலைவருமான டிஆர்பி ராஜா தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது, "தமிழ்நாட்டுக்கும் உத்தரபிரதேசத்து காசிக்கும் பண்பாட்டை வளர்ப்பதாகக் கூறி, காசித் தமிழ்ச்சங்கமம் என்ற நிகழ்வு ஒன்றிய அரசின் வாயிலாக நடத்தப்படுகிறது.

சென்னை ஐ.ஐ.டி. இதனை முன்னெடுத்துள்ளது. நவம்பர் 16ந் தேதி தொடங்கி டிசம்பர் 19 வரை ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு மேலாக காசி, அயோத்தி என அங்குள்ள பல இடங்களில் இந்த சங்கமம் நடைபெறும்.

 45 விநாடிகள் சமஸ்கிருத கிரிக்கெட் வர்ணனை.. உச்சி முகந்து பாராட்டி தள்ளிய பிரதமர் மோடி! 45 விநாடிகள் சமஸ்கிருத கிரிக்கெட் வர்ணனை.. உச்சி முகந்து பாராட்டி தள்ளிய பிரதமர் மோடி!

ஏமாந்துவிட வேண்டாம்

ஏமாந்துவிட வேண்டாம்

இதற்காக தமிழ்நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்களை ஒன்றிய அரசாங்க செலவில் (அதாவது, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிருந்து வசூலித்த வரியில்) அழைத்துச் செல்கிறார்கள். தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் வளர்ப்பதற்கு செலவு செய்வது நல்லது தானே என்று தோன்றக்கூடும். ஏமாந்து விட வேண்டாம். ஏனென்றால், நல்லபடியாகத் தோன்றுகிற எதையும் ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்ததே இல்லை என்பது

சமஸ்கிருத அறிஞர் தலைமை

சமஸ்கிருத அறிஞர் தலைமை

கடந்த 8 ஆண்டுகளாக நாட்டு மக்களுக்குத் தெரியும். காசித் தமிழ்ச் சங்கமும் அதே போலத்தான். இதனை ஒருங்கிணைப்பவர் பெயர் சாமு சாஸ்திரி. சமஸ்கிருத அறிஞரான இவர் ஒன்றிய அரசின் பாரதிய பாஷா சமிதியின் அமைப்பாளர். இப்படிப்பட்டவர் எத்தனை தமிழறிஞர்களை இந்த சங்கமத்திற்கு ஒருங்கிணைத்திருக்கிறார் என்று தேடினால், தமிழ்நாட்டில் தமிழ் மொழிக்காகத் தொண்டாற்றி வரும் அறிஞர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் யாருமில்லை.

தமிழறிஞர்கள் எங்கே?

தமிழறிஞர்கள் எங்கே?

தமிழுக்குத் தொடர்பேயில்லாத ஐ.ஐ.டி. நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்கிறார்கள். இதில் பங்கேற்கவிருப்ப முள்ளவர்கள் பதிவு செய்யலாம் எனக் கொடுக்கப்பட்ட இணையதள முகவரியும் ஏமாற்று வேலைதான் என்கிறார்கள் அதற்காக முயற்சி செய்து தோல்வியடைந்த தமிழார்வலர்கள்.

சித்த மருத்துவம் எங்கே?

சித்த மருத்துவம் எங்கே?

தமிழறிஞர்கள் இல்லாமல் சமஸ்கிருதத்தை மட்டும் முன்வைத்து அப்படியென்ன தமிழ்ச் சங்கமம் நடத்தப் போகிறார்கள்? ஆன்மீகம், யோகா, ஆயுர்வேதம் கலை உள்ளிட்ட 12 குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. எதிலுமே தமிழ் வல்லுநர்கள் இடம்பெறவில்லை. ஆயுர்வேதத்திற்கு தரப்பட்ட இடம், தமிழ் நாட்டின் பாரம்பரிய மருத் துவமான சித்த மருத்துவத்திற்கு கிடையாது.

காவி பிராண்ட் சங்கமம்

காவி பிராண்ட் சங்கமம்

நிகழ்வு பற்றிய அறிவிப்பில் சிறப்பு விருந்தினர்கள் பெயர்கள் கூட தமிழில் இல்லை. இந்தியில்தான் இருந்தது. முழுக்க முழுக்க காவி பிராண்ட் சங்கமம் இது. அதற்கான விழா மலர் கூட பா.ஜ.க.வின் அலுவலகத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழைப் பற்றி ஐ.நா. சபையில் பிரதமர் மோடி பெருமையாகப் பேசினார்கள் என்று சங்கித்வா கூட்டம் பெருமையடித்துக்ருத கொள்ளும்.

இந்தி திணிப்பு

இந்தி திணிப்பு

ஆனால், அந்த செம்மொழித் தமிழுக்கு எதுவும் செய்யாமல் சமஸ்கிருதத்தைப் போற்றி, இந்தி திணிப்பதுதான் மறைமுக செயல்திட்டம். காசிக்கு கொண்டுபோய் கங்கையில் தமிழைக் கரைத்துவிடலாம் என்று நினைத்து திட்டம் தீட்டுகிறார்கள். அவர்களுக்கு நினைவூட்டுகிறோம். கங்கை கொண்டவன் எங்கள் தமிழ்ச்சோழன்.

 ஆரிய சதி

ஆரிய சதி

கங்கையல்ல.. கடலில் கரைத்தாலும் காலத்தால் மூத்த மொழி, நம் கரையாத தாய்மொழியாம் தமிழ் மொழி, சங்கித்வாகூட்டம் தான் ஆரியப் பண்பாட்டைத் தமிழ்நாட்டில் நுழைத்தது. பல நூறு ஆண் டுகளுக்கு முன்பே பழந்தமிழ் ஓலைச் சுவடிகளை ஆற்று வெள்ளத்தில் அள்ளி 'நெருப்பில் பொசுக்கியும் தமிழை அழிக்க முயற்சித்தது.

இந்தி சமஸ்கிருத சேறு

இந்தி சமஸ்கிருத சேறு

கோயில்களின் ரகசிய பகுதிகளில் ஓலைச்சுவடிகளைப் பூட்டி வைத்து கரையான்களுக்கு இரையாக்கியது. ஆனால், தமிழ் மன்னர்களும் புலவர்களும் புரவலர்களும் அவற்றை மீட்டுத் தமிழைக் காத்தனர். இப்போது மீண்டும் பண்பாடு என்ற வேடம் போட்டு காசி சங்கம விழாவில் தமிழை இந்தி சமஸ்கிருத சேற்றில் புதைத்து விட என மனப்பால் குடிக்கிறார்கள். திராவிட இயக்கம் இருக்கும்வரை ஒரு போதும் அந்த எண்ணம் ஈடேறாது.

மதவாத அரசியல்

மதவாத அரசியல்

சங்கித்வா கூட்டத்தால் தமிழ்நாட்டில் மதவாத அரசியல் செய்ய முடியவில்லை. சாதிக் கலவரங்களைத் தூண்ட முடியவில்லை. மழையை வைத்து பிழைப்பு நடத்த முடியவில்லை. எதிர்பாராதவிதமாக நிகழும் சம்பவங்களைக்கூட அரசியலாக்க முடியவில்லை. திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர் தனது நிர்வாகத் திறத்தாலும் மக்கள் மீதான உண்மையான அன்பாலும் அனைவருக்கும் அனைத்தும் வழங்கும் அரசை நடத்தி வருகிறார்.

பிரியாணி அண்டாவா?

பிரியாணி அண்டாவா?

அதனால், தமிழைத் தூக்கிக் கொண்டு போய் அரசியல் நடத்தலாம் என நினைக்கிறார்கள். அது என்ன பிரியாணி அண்டாவா? சங்கித்வா கூட்டம் எளிதாகத் தூக்கிச் செல்ல! ஒன்றிய பா.ஜ.க அரசு செம்மொழியான தமிழ், தெலுங்கு, மலையாளம். கன்னடம் மற்றும் ஒடியா மொழிகளுக்கு மூன்றாண்டுகளில் ஒதுக்கிய தொகை 23 கோடி ரூபாய் மட்டுமே.

சமஸ்கிருதத்துக்கு நிதி

சமஸ்கிருதத்துக்கு நிதி

ஆனால், மக்களின் பேச்சுவழக்கில் இல்லாத சமஸ்கிரு தத்திற்கு ஒதுக்கிய தொகை 643 கோடி ரூபாய். இது தான் ஐ.நா. சபை வரை தமிழைக் கொண்டு சென்றதாக பெருமையடித்துக்கொள்ளும் சங்கித்வா கூட்டத்தின் உண்மையான முகம். ஒன்றிய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் பயிற்றுவிக்கப்படுவதில்லை.

தமிழுக்கு நிதி

தமிழுக்கு நிதி

டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள தமிழ்ப் பேராசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்பட வில்லை. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கானத் திட்டங்களுக்கு போதிய அளவு நிதி ஒதுக்கீடு செய்வதில்லை. தமிழ்நாட்டிற்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய வரி வருவாயையும் முறையாகத் தருவதில்லை.

சதிகாரத் திட்டம்

சதிகாரத் திட்டம்

தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் தொடர்ந்து துரோகம் செய்து கொண்டே தமிழ்ப் பெருமை பேசுவதும், திருக்குறளை மேடைகளில் மோசமாக உச்சரிப்பதும், திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூசி மதவாதியாக்கப் பார்ப்பதும்தான் சங்கித்வாவின் சதிகாரத் திட்டங்கள். அதனால்தான் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அன்றே சொன்னார்: திருவள்ளுவருக்கு நூல் போட முயற்சித்தவர்கள், திருக்குறளுக்கு நூல் போட பார்க்கிறார்கள் என்று.

திமுக ஐடி விங்

திமுக ஐடி விங்

இவர்களை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். சாத்தான்கள் வேதம் ஒதுவதும், சங்கித்வா நடத்தும் காசித் கூட்டம் தமிழ்ச் சங்கமம் என்பதும் ஒன்றுதான். சமஸ்கிருதத்தின் துணையின்றித் தனித்து இயங்கும் வலிமை கொண்டு நம் தாய்த்தமிழை சிதைத்து, அதை ஆரியப் பண்பாட்டுடன் கலந்து மறைந்திடச் மறைமுகத் திட்டத்தை நேரடியாக வெளிப்படுத்திட சமூக வலைத்தளங்களில்
புதுப் பாய்ச்சலுடன் இந்தியா முழுவதும் பயணிக்க இருக்கிறது. தமிழைக் காத்திடும் அரசை வழி நடத்தும் முதல்வர் கழகத் தலைவர் அவர்களின் ஆணையேற்று செயல்படும் கழகத்தகவல் தொழில்நுட்ப அணி." என்று கூறியுள்ளார்.

English summary
Mannargudi DMK MLA and party's technical team leader TRP Raja has said that the Kashi Tamil Sangh is conspiring to push Tamil into the mud of Hindi and Sanskrit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X