கொடைக்கானலில் போதை காளான் விற்பனை அமோகம்.. பகீர் கிளப்பும் பா.ஜ.க.வின் நாராயணன் திருப்பதி!
சென்னை: கொடைக்கானலில் போதை காளான் விற்பனை அதிக அளவில் உள்ளது என்றும் இதனால் இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாராயணன் திருப்பதி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-
போதை காளான் (Magic Mushroom) என்ற போதை தரும் காளான் விற்பனை கொடைக்கானலில் அதிக அளவில் பெருகிவருகிறது Psilocybin என்கின்ற ஒரு வேதிக் கலவைகள் நிறைந்த இந்த காளான்கள் கொடைக்கானலில் அதிக அளவில் விளைகிறது.

போதை காளான்
பல்வேறு இடங்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள், குறிப்பாக இளைஞர்கள், ஆம்லெட்டில் இந்த காளான்களை வைத்து உண்கிறார்கள். இதை உட்கொள்பவர்களை 15 மணிநேரம் வரை போதையில் தள்ளுகிறது. மேலும், அடர்ந்த காட்டுப்பகுதிக்குள், விளையும் இந்த காளான்கள் மற்ற மாநிலங்களுக்கும் கடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

இடைத்தரகர்கள்
பல விடுதிகள் மற்றும் தங்கும் அனுமதியில்லாத பல இல்லங்களில் பல ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த காலங்களில் ஒரு சிலர் இதை உட்கொண்டு இறந்தும் போயிருப்பது கொடுமை. மிக மோசமான இந்த செயல்பாடுகளில், பல இடைத்தரகர்கள் இருப்பதோடு அரசியல் பின்பலமும் உள்ளதாக தெரிகிறது.

பணியிட மாற்றல்
இது குறித்து மூன்று வருடங்களுக்கு முன்னரே நான் என் கருத்தை, கண்டனத்தை தெரிவித்திருந்தேன். சில வருடங்களுக்கு முன், காவல் துறை ஆய்வாளர் ஒருவர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்த போதும், அவர் பணியிட மாற்றல் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கொடைக்கானல் கே.ஆர்.ஆர் கலையரங்கம்,செட்டியார் பூங்கா ,சின்ன பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் வெளிப்படையாக போதை காளானை ஒரு கும்பல் விற்பனை செய்வதால் சுற்றுலா பயணிகளுக்கு தட்டுப்பாடின்றி கிடைப்பதாகவும் கூறப்படுகின்றது.

கைது செய்ய வேண்டும்
இது குறித்து தீவிரமாக விசாரணை செய்து காவல் துறை நடவடிக்கை எடுத்து குற்றம் செய்பவர்களை கைது செய்ய வேண்டும். அடுத்த தலைமுறையை படுகுழியில் தள்ளும் கொடுமையான செயல் இது. இந்த காளான் போதை பொருள் என்று அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட வேண்டும். முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து மாநில கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications