பழங்குடியின பெண்ணை செருப்பால் அடிக்கும் திமுக பெண் நிர்வாகியின் கணவர்? அண்ணாமலை வெளியிட்ட வீடியோ
சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் குறிச்சி பகுதியில், திமுக ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் தீபலட்சுமி அவர்களின் கணவர் சுவாமிநாதன் என்பவர், பழங்குடியின சகோதரி ஒருவரை காலணியால் அடிக்கும் காணொளிச் செய்தியைக் கண்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் ஒரு பெண்ணை, பக்கத்தில் நிற்பவர் செருப்பால் தாக்குவது போன்று உள்ளது.

இந்த வீடியோவை பதிவிட்டு அண்ணாமலை கூறியுள்ளதாவது: "தஞ்சாவூர் மாவட்டம் குறிச்சி பகுதியில், திமுக ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் திருமதி தீபலட்சுமி அவர்களின் கணவர் சுவாமிநாதன் என்பவர், பழங்குடியின சகோதரி ஒருவரை காலணியால் அடிக்கும் காணொளிச் செய்தியைக் கண்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.
வீண் விளம்பரத்திற்காக, பொய்களும் புரட்டுகளுமாய், போலி சமூகநீதி பேசிக்கொண்டு, அதிகார மமதையில், பட்டியல், பழங்குடியினர் சமூக மக்களுக்கு எதிராக திமுகவினர் நடத்தி வரும் வன்முறையின் நீட்சியே இது போன்ற தாக்குதல்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் குறிச்சி பகுதியில், திமுக ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் திருமதி தீபலட்சுமி அவர்களின் கணவர் சுவாமிநாதன் என்பவர், பழங்குடியின சகோதரி ஒருவரை காலணியால் அடிக்கும் காணொளிச் செய்தியைக் கண்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். (1/3) pic.twitter.com/SBDiOuEfeF
— K.Annamalai (@annamalai_k) April 24, 2023
மேலும் இது போன்ற வருந்தத்தக்க நிகழ்வுகள் நடக்காத வண்ணம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், பட்டியல், பழங்குடியின சமூக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு பாஜக சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இதனிடையே இந்த வீடியோ பரவிய நிலையில், இதை அறிந்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், திமுக பிரமுகர் சுவாமிநாதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து சுவாமிநாதனை போலீசார் கைது செய்தனர்.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
அரசு பள்ளி முட்டை.. ₹3.70க்கு வாங்கி ₹5.63 விற்பனை. விஜய்க்கு அண்ணாமலை வைத்த கோரிக்கை -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்!












Click it and Unblock the Notifications