“எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அண்ணன் பன்னீர்செல்வம் நலமாக வேண்டும்".. அண்ணாமலை வாழ்த்து
ஓபிஎஸ் நலம்பெற வேண்டும் என்று அண்ணாமலை வாழ்த்து ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஓபிஎஸ், விரைவில் பூரண நலம் பெற வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது.. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் நேற்று ஆண்கள் 1,275,பெண்கள் 1,037 என மொத்தம் 2,312 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 13,121 ஆக அதிகரித்துள்ளது.

வைத்திலிங்கம்
இதற்காக தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. 10 நாட்களுக்கு முன்பு, அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற வைத்திலிங்கம் உள்ளிட்ட பலருக்கும் கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது... அதேபோல, எடப்பாடி பழனிச்சாமியின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது... இதையடுத்து, தமிழக முதல்வர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்...

நாசர்
தமிழக பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசருக்கு உடல் சோர்வு இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து, மருத்துவர்களின் ஆலோசனைப்படி சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்த நிலையில், ஓபிஎஸ்ஸுக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.. இந்த ஒரு மாத காலமாகவே, அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தலைதூக்கி வருகிறது..

காய்ச்சல்
தொடர் ஓய்வு இல்லாத காரணத்தினால், ஓபிஎஸ் உடல்நிலை 2 நாட்களாக பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. லேசான மயக்கம், உடல்வலியும், காய்ச்சலும் இருந்த நிலையில், சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் டாக்டர்களிடம் சென்று நேற்று பரிசோதித்துள்ளார்.. அப்போதுதான் அவருக்கு கொரோனா டெஸ்ட் உடனடியாக எடுக்கப்பட்டு, தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது... தீவிரமான தொற்று இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்திருந்தாலும், மருத்துவமனையிலேயே சிகிச்சை பெறுவது நல்லது என்று அட்வைஸ் கூறியுள்ளனர்.. அதனால், ஓபிஎஸ், இதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வாழ்த்து
இதனிடையே, ஓபிஎஸ் பூரண நலம்பெற வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அந்த பதில், "முன்னாள் முதல்வர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான திரு ஓ. பன்னீர்செல்வம் அண்ணன் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்தேன். அவர் பூரண நலம் பெற்று மக்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்! என்று தெரிவித்துள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!












Click it and Unblock the Notifications