• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆரம்பிச்சுட்டாங்கல்ல. விஜய்யின் “வாரிசு”க்கும் எதிர்ப்பு! அது என்ன சிலுவை? பற்ற வைத்த பாஜக ஆதரவாளர்

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் விஜய் நடிக்கும் "வாரிசு" திரைப்படத்தின் 2வது சிங்கில் தொடர்பான அறிவிப்பு போஸ்டர் வெளியாகி இருக்கும் நிலையில் அதை வைத்து தற்போது சர்ச்சை பதிவை வெளியிட்டு இருக்கிறார் பாஜக ஆதரவாளரும் தயாரிப்பாளருமான ஜேஎஸ்கே கோபி.

நடிகர் விஜய் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து முன்னணி தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து இருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர்கள் சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.

சென்னையில் குவிந்த லீடர்கள்.. 19 மா.செக்களுடன் 'திடீர்’ மீட்டிங்.. ஓபிஎஸ் கொடுத்த 'சிக்னல்’ என்ன? சென்னையில் குவிந்த லீடர்கள்.. 19 மா.செக்களுடன் 'திடீர்’ மீட்டிங்.. ஓபிஎஸ் கொடுத்த 'சிக்னல்’ என்ன?

முதல் பாடல்

முதல் பாடல்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் வாரிசு படம் பொங்கலை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று உள்ளன. தற்போது கடைசி கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. நடிகர் விஜய் தோன்றும் வாரிசு படத்திற்கான காட்சிகளின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இசை வெளியீட்டு விழா

இசை வெளியீட்டு விழா

பொங்கலுக்கு படம் வெளியாவதால், டப்பிங், ரீ ரெக்கார்டிங், எடிட்டிங் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படத்தின் டிரைலர் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவை நடத்தவும் படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

சிங்கிள் வெளியீடு

சிங்கிள் வெளியீடு

இந்த படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் தமன் இசையமைத்து இருக்கிறார். இதன் முதல் சிங்கில் பாடலான ரஞ்சிதமே கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் வாரிசு படத்தின் 2 வது சிங்கில் தொடர்பான அறிவிப்பை படக்குழு நேற்று போஸ்டருடன் வெளியிட்டது.

தீ பாடல் போஸ்டர்

தீ பாடல் போஸ்டர்

படத்தை தயாரித்து வரும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம், நடிகர் விஜய் சினிமாவுக்குள் நுழைந்து 30 ஆண்டுகளை கொண்டாடும் வகையில் வரும் டிசம்பர் 4 ஆம் தேதி மாலை 4 மணியளவில் தீ என்ற 2 வது சிங்கில் பாடலை வெளியிடப்போவதாக அறிவித்து போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறது.

தயாரிப்பாளர் ஜேஎஸ்கே கோபி

தயாரிப்பாளர் ஜேஎஸ்கே கோபி

அந்த போஸ்டர் சதுரங்கத்தின் ராஜா காயில் தீ பற்றி எரிவதைபோன்று வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இது தான் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. பாஜக ஆதரவாளரும் பிரபல சினிமா தயாரிப்பாளருமான ஜேஎஸ்கே கோபிதான் தற்போது சர்ச்சையை கிளப்பி இருப்பவர். இந்த போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு குற்றச்சாட்டை அவர் முன்வைத்து உள்ளார்.

சிலுவை ஏன்?

சிலுவை ஏன்?

அதில், "எல்லா படத்துலயும் சிலுவைய எப்படியாவது கொண்டு வர்றதுதான் விஜய்ணாவோட ஸ்பெஷல்..... கடைசில வம்சி மாம்ஸ்ம் அண்ணாகிட்ட சரண்டர் ஆய்ட்டாப்ல......" என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். ஜேஎஸ்கே கோபியின் இந்த பதிவுக்கு கீழே பாஜக ஆதரவாளர்கள் சிலர் விஜய்யை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

ரசிகர்கள் கருத்து

ரசிகர்கள் கருத்து

விஜய் ரசிகர்களோ, இந்த பதிவுக்கு கீழே சென்று பாஜக எதிர்க்கத் தொடங்கிவிட்டதால் வாரிசு படம் ஹிட் என்று பதிவிட்டு வருகிறார்கள். இந்த ஜேஎஸ்கே கோபி தனது பதிவுக்கு கீழே வெளியிட்ட கருத்தில், "நியாயமா பாத்தா அண்ணா Fans எனக்கு நன்றி சொல்லனும்.... ஆனா திட்றானுவ.... ஐடியா இல்லாத பசங்க.." என்று விவேக்கின் நகைச்சுவை காட்சி படத்தை பகிர்ந்து பதிவிட்டு உள்ளார்.

பாஜக VS விஜய்

பாஜக VS விஜய்

இதற்கு முன்பாக மெர்சல் படத்தில் ஜிஎஸ்டிக்கு எதிரான வசனங்கள் இடம்பெற்றதாக பாஜக குற்றம்சாட்டியது. இதனை தொடர்ந்து அந்த படத்துக்கு ஆதரவு பெருகியது. அதேபோல் பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய்யின் கழுத்தில் சிலுவை செயின் அணிந்திருந்ததை சுட்டிக்காட்டி அவரை மத ரீதியாக பாஜகவினர் விமர்சித்தனர். மாஸ்டர் படப்பிடிப்பின்போது வருமான வரி சோதனை நடத்தப்பட்டதால் பாஜகவுக்கு எதிராக விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

English summary
BJP supporter and producer JSK Gopi has released a controversial post on the announcement poster of the 2nd single of the movie "Varisu" starring actor Vijay.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X