சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சூப்பர்.. சத்தம் போடாமல் சாதித்த வானதி.. குறி வைத்தது ஒரே தொகுதி.. லட்டு போல வந்து சேர்ந்த கோவை!

கோவை தெற்கு பகுதியில் வானதி சீனிவாசன் போட்டியிட உள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: சாதித்தே விட்டார் வானதி.. எப்படி எப்படியோ போராடி கோவை தெற்கு தொகுதியை வாங்கிவிட்டார்.. இதையடுத்து தமிழக பாஜகவினர் ஏக குஷியில் உள்ளனர்.

கொங்கு மண்டலத்தில் அதிமுகதான் பலமாக இருந்தாலும், பாஜகவுக்கும் அங்கு செல்வாக்கு ஓரளவாவது இருந்து வருகிறது..

அதேபோல, இந்து அமைப்புகளும் சற்று பலத்துடனேயே உள்ளன.. அதனால்தான், கொங்கு மண்டலத்தில் பெருவாரியான சீட்டுகளை வாங்கினால் நிச்சயம் ஜெயித்து விடலாம் என்ற நம்பிக்கை பாஜகவுக்கு இருந்து வந்தது.

 பாஜக

பாஜக

இந்த அடிப்படையில் கொங்கு மண்டலத்தில் 3 தொகுதிகளை பாஜக குறி வைத்திருப்பதாகவும் சொல்லப்பட்டது.. அண்ணாமலை, கிணத்துக்கடவு தொகுதியை குறி வைப்பதாகவும், பாஜக தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியை குறி வைத்திருப்பதாகவும், சிபி ராதாகிருஷ்ணனும் கோவையிலேயே போட்டியிட திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

 வேட்பாளர் லிஸ்ட்

வேட்பாளர் லிஸ்ட்

ஆனால், சில தினங்களுக்கு முன்பு அதிமுக சார்பில் வெளியான உத்தேச வேட்பாளர் லிஸ்ட்டில் பாஜகவுக்கு கோவை தெற்கை தரவில்லை.. மாறாக வடக்கு தொகுதியை மட்டும் கொடுத்திருந்தது.. கூடுதலாக புறநகரான சிங்காநல்லூரை ஒதுக்கியிருந்தது.. இதனால் பாஜகதான் அதிர்ந்து இருந்தது.. வானதி முதல் ராதாகிருஷ்ணன் வரை இந்த தொகுதி மீது குறியாய் இருந்த நிலையில், கூட்டணியில் விரிசல் வந்துவிடுமோ என்ற கலக்கமும் எழுந்தது. ஆனால், இன்றைய தினம் பாஜக மகளிரணி மாநில தலைவரான வானதி சீனிவாசனுக்கு கோவை தெற்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான லிஸ்ட்டும் வெளியாகி உள்ளது.

 வானதி

வானதி

இப்போது மட்டுமில்லை, எப்போது தேர்தல் வந்தாலும் இந்த தொகுதியை வானதி குறி வைத்து கேட்பார்.. இம்முறையும் அவர் கேட்டதுபோலவே, தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.. இந்த தொகுதி முழுக்க வானதியின் செல்வாக்கு நிரம்பி காணப்படுகிறது.. சமீபத்தில் இவர் தேசிய அளவில் பொறுப்பேற்ற பிறகு, சொந்த தொகுதிக்கு வந்து ஆன்மீக பெரியவர்களை சந்தித்து ஆசிபெற்றார்.

 நெருக்கம்

நெருக்கம்

அதுமட்டுமல்ல, தன்னுடைய சொந்த கிராமமான உப்பிலிபாளையத்திற்கும் வானதி சென்று, அங்கு பட்டியலின மக்களின் கோவிலில் சாமி கும்பிட்டதுடன், பட்டியலின பெண்களின் காலில் விழுந்தும் ஆசி பெற்றார்... அந்த பட்டியலின பெண்களுக்கு ஸ்வீட்டுகளையும் வழங்கி தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். இந்த அளவுக்கு தொகுதியில் நெருக்கமானவர் வானதி சீனிவாசன். கொங்கு மண்டலத்தை தன் கைப்பிடியில் அதிமுக வைத்திருந்தாலும், வானதிக்கு கோவை தெற்கு பகுதியை ஒதுக்கியதில் மொத்த கூட்டணிக்கும் சந்தோஷம்தான்..!

English summary
BJP Vanathi Srinivasan will contest in Kovai South Constitution
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X