கொரோனா கட்டுப்பாடுகள்.. தமிழக அரசு நடவடிக்கைக்கு பாஜக முழு ஒத்துழைப்பு தரும்- நயினார் நாகேந்திரன்
சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு எடுக்க கூடிய அனைத்து நடவடிக்கைகளுக்கும், பாஜக ஒத்துழைப்பு அளிக்கும் என்று அந்தக் கட்சியின் சட்ட சபை குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக இன்று மருத்துவ வல்லுநர்கள் உடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தியிருந்தார். இந்த ஆலோசனையின்போது ஊரடங்கு உத்தரவை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்க வேண்டும் என்று மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து சட்டமன்ற குழு உடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதில் சட்டசபை அனைத்து கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

பாஜக பங்கேற்பு
பாஜக சார்பில் அதன் குழு தலைவரான நயினார் நாகேந்திரன் பங்கேற்றார். ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, அவர் கூறியதாவது: கொரோனா நோயை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கக் கூடிய அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாஜக ஆதரவு தெரிவிக்கும்.

மருந்துகள் இருப்பு
ரெம்டிசிவர் மருந்து மற்றும் கருப்பு பூஞ்சை நோயை தடுக்க கூடிய ஊசி ஆகியவற்றை போதிய அளவு இருப்பு வைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதேநேரத்தில் பொருளாதாரரீதியாக மக்கள் பாதிக்கப்படாத வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

கிராம நிலவரம்
கிராமப்புறங்களில் தற்போது தொற்று அதிகமாக இருக்கிறது . கிராமப்புறத்தில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை இருக்கிறது. இதற்காக அங்குள்ள பள்ளிகளில் தனிமைப்படுத்துதலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பாஜக சார்பில் கோரிக்கையை முன்வைத்தோம்.

பணியாளர்கள்
மின்சார வாரியத்தை சேர்ந்தவர்கள், தீயணைப்பு படையினர் , வீடுகளுக்கு எரிவாயு டெலிவரி செய்பவர்கள், ஆகியவற்றை முன் களப்பணியாளர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கேட்டு உள்ளோம். இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications