“புதுசு புதுசா”.. பாஜக ஆட்சியில் வேலைக்கு செல்லும் பெண்கள் குறைந்தது நல்லதாம் - சொல்கிறார் நாராயணன்
சென்னை: பாஜக ஆட்சியில் வேலைக்கு செல்லும் பெண்கள் குறைந்துவிட்டதாக கனிமொழி கூறியது உண்மைதான் என்றும், அது நாடு வளர்ச்சிப்பாதையில் செல்வதை குறிப்பதாக பாஜக நாராயணன் தெரிவித்து உள்ளார்.
"பாஜக ஆட்சியில் இந்தியாவில் வேலைக்கு செல்லும் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 15 சதவீதத்திலிருந்து, 8 சதவீதமாக குறைந்து விட்டது. ஆனால், இந்தியாவிலேயே அதிகமாக தமிழகத்தில் தான் 43 சதவீத பெண்கள் வேலைக்கு செல்லும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள் என்று பெருமையாக பேசக்கூடிய நிலை உள்ளது" என்று நேற்று திமுகவின் கனிமொழி அவர்கள் கூறியுள்ளார். அவர் சொன்னது உண்மை தான். ஆனால், அவர் சொன்ன வேலையானது பெண்கள் தினசரி தங்களின் உழைப்பை செலுத்தி வருவாய் ஈட்டும் தற்காலிக அல்லது கூலி வேலை என்பதே உண்மை.

அவர் குறிப்பிட்டதை விட அதிக அளவில் பெண்கள் வேலைக்கு செல்வது தற்போது குறைந்து விட்டது. திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சி இருந்த போது, 31 சதவீத இந்திய பெண்கள் வேலைக்கு சென்று கொண்டிருந்த நிலையில் தற்போது 19 சதவீதத்தினரே கூலி வேலைக்கு சென்று கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் வேலைக்கு செல்லும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் குடும்பத்தினருக்காக கடுமையாக உழைத்து தங்கள் குழந்தைகளை பாதுகாத்து வளர்க்கும் ஒப்பற்ற கடமையை செய்து கொண்டிருக்கும் பெண்கள், தங்களின் குடும்பங்கள் நிதி சுமையில் இருக்கும் போதெல்லாம் அன்றாட வேலைக்கும் சென்று குடும்ப பாரத்தை தாங்குவதற்காக பொருளீட்டும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
ஆனால், கனிமொழி அவர்கள் கூறியது போல் கடந்த பத்து வருட பாஜக ஆட்சியில் பெண்கள் இந்த வேலைகளுக்கு செல்லும் நிலை குறைந்துள்ளது என்பது, நிதி சுமையில் இருந்து இந்தியப் பெண்கள் விடுவிக்கப்பட்டு உள்ளார்கள் என்பதையும், நம் நாடு வளர்ச்சி பாதையில், பொருளாதார முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பதையுமே குறிக்கிறது. மேலும், குடும்ப ஏழ்மையின் காரணமாக கல்வி கற்பதை நிறுத்தி வேலைக்கு செல்வதற்காக பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று கல்வி பயில்வதை இடையில் நிறுத்திய மாணவிகள் தற்போது படிப்பை தொடர்ந்து, கல்வி கற்ற பின்னர் தொழில் முனைவோராக, பெரு நிறுவனங்கள், அரசு பணிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் இணைந்து ஊதியம் பெறுகிறார்கள் என்பதை பல்வேறு ஆய்வுகள் தெளிவுபடுத்துகிறது.
அதே போல், இந்தியாவிலேயே அதிகமாக தமிழகத்தில் தான் 43 சதவீத பெண்கள் வேலைக்கு செல்லும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள் என்று கனிமொழி அவர்கள் கூறியது வியப்பளிக்கவில்லை. மாறாக வருத்தத்தையே அளிக்கிறது. தமிழகத்தில் உள்ள குடும்பங்களில் கடும் நிதி சுமை இருப்பதையே இது உணர்த்துகிறது. மது மட்டுமே இந்நிலைக்கு காரணம் என்று சிறு குழந்தை கூட சொல்லி விடும். குடிமகன்களின் அன்றாட வருமானத்தில் பெரும்பகுதி 'டாஸ்மாக்கில்' செலவிடப்படுவதால், குடும்ப நிதி நிலை சீரழிந்து, அக்குடும்பத்தின் அன்றாட செலவுகளை எதிர்கொள்ள பெண்கள் வெளியில் வேலைக்கு செல்லும் நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகிறார்கள் என்பதை கனிமொழி புரிந்து கொள்வாரா?

பெண்கள் தாராளமாக வேலைக்கு செல்லட்டும். ஆனால், படித்து, பட்டம் பெற்று அதிகாரிகளாக, ஆசிரியர்களாக, அரசு பணியாளர்களாக, கனிமொழி அவர்களை போன்று அரசியல்வாதிகளாக ஆகட்டும். குடும்ப பாரத்தை சுமக்கும் அவர்கள் நிதி சுமையை சுமப்பதற்காக கடினமான வேலைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை அகலட்டும். இந்தியாவிலேயே அதிக இளம் விதவைகள் தமிழகத்தில் தான் உள்ளனர் என்று மதுவினால் ஏற்படும் தீமையை உணர்ந்து விளக்கிய கனிமொழி அவர்கள், 43 சதவீத தமிழக பெண்கள் வேலைக்கு செல்வது பெருமை அல்ல கொடுமை என்பதை உணர்வாரா? தமிழக அரசுக்கு உணர்த்துவாரா?" என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications