சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனாவுக்கு அடுத்து கருப்பு பூஞ்சை தாக்குதல்...போராட அரசு ஆயத்தமாக வேண்டும் - வைகோ

கருப்பு பூஞ்சைக்கு எதிராக போராட அரசு ஆயத்தமாக வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார். கருப்பு பூஞ்சை அறிகுறிகள் தமிழ்நாட்டிலும் தெரியத் தொடங்கி இருப்பதாகவும் வைகோ கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் சிலர் மியூக்கோர்மைகோசிஸ் என்ற கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். கருப்பு பூஞ்சைக்கு எதிராக போராட அரசு ஆயத்தமாக வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Recommended Video

    தமிழகத்தில் அதிகரிக்கும் Black Fungus.. அறிவிக்கப்பட வேண்டிய நோய் பட்டியலில் சேர்த்த TN Government

    இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் குறைந்தது 30000 ஆயிரம் பேர் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி, மருத்துவமனைகளைத் தேடி அலைந்து கொண்டு இருக்கின்றார்கள்.

    Black fungus attack after corona TN Government must be ready to fight - Vaiko

    இந்த நிலையில், ஏற்கனவே கொரோனா தாக்கி, மருத்துவம் செய்து நலம் பெற்று மீண்டு வந்தவர்களை, கருப்பு பூஞ்சை என்ற புதிய தொற்று தாக்குவதாக செய்திகள் வருகின்றன. மராட்டிய மாநிலத்தில் 64 பேர் இறந்து விட்டார்கள்; தில்லி மற்றும் கர்நாடகாவிலும் தாக்கி இருக்கின்றது. இதன் அறிகுறிகள் தமிழ்நாட்டிலும் தெரியத் தொடங்கி இருக்கின்றது.

    நேற்று கோவில்பட்டியில் இரண்டு பேர், கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகத் தகவல் வந்தது. ஏற்கனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களை, கருப்பு பூஞ்சை உடனடியாகத் தொற்றுகின்றது.

    இந்த பூஞ்சைத் தொற்று இது கண்கள், பற்கள் வழியாக குருதியில் கலந்து, உயிரைப் பறிக்கும் தன்மை உடையது. இந்த நோய்க்கு, Lipsomal Amphotericin B Injection மருந்தை, இந்தியா முழுமையும் பரிந்துரைக்கின்றார்கள்.

    மதுரையில் வேகமாக பரவும் கருப்பு பூஞ்சை - ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க மருத்துவர்கள் அறிவுரை மதுரையில் வேகமாக பரவும் கருப்பு பூஞ்சை - ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க மருத்துவர்கள் அறிவுரை

    கொரோனா மருந்துகள், உயிர்க்காற்று உருளைகளுக்குக் கடுமையான தேவை ஏற்பட்டு இருப்பதுபோல, அடுத்து இந்த மருந்தும் தேவைப்படுகின்றது. எங்கே கிடைக்கும் என மக்கள் தேடுகின்றார்கள்.

    எனவே, தமிழக அரசு, இதுகுறித்துக் கவனம் செலுத்தி, ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்; இந்த மருந்து கிடைக்கும் இடங்கள், இருப்பு குறித்த தகவல்களை, தமிழக அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை இணையத்தில் வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

    பொதுமக்கள், சமூக விலகலைக் கடைப்பிடித்து, வாய் மூக்கு மூடிகளை அணிந்து, மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஐரோப்பிய நாடுகளில் கொரோனா இல்லை என அறிவித்து விட்டார்கள். அதுபோல, அனைவரும் தடுப்பு ஊசி குத்திக் கொள்ளுங்கள்; அடுத்த ஆறு மாதங்களுக்குள் கொரோனாவை ஒழிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    MDMK General secretary Vaiko has said that the Tamil Nadu government should be ready to fight against the black fungusSome people with corona become infected with a black fungal infection called mucormycosis. .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X