கரும்பூஞ்சைக்கும் சின்க் மாத்திரைக்கும் தொடர்பா? சந்தேகம் எழுப்பும் வல்லுனர்கள்.. விசாரிக்க கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா நோயாளிகள் அதிகப்படியான சின்க் மருந்துகள் மற்றும் மாத்திரைகளை எடுப்பதும் கூட பிளாக் பங்கஸ் ஏற்பட காரணமாக இருக்கலாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended Video

    Black Fungus எப்படி ஏற்படுகிறது? | எவ்வாறு தடுப்பது? | Treatments & Medicines | Dr VPB Paramasivam

    இந்தியாவில் பிளாக் பங்கஸ் கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 6500 பேர் பிளாக் பங்கஸ் மூலம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    கொரோனாவில் இருந்து மீண்டு வரும் நோயாளிகளுக்கும், தீவிர சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கும் பிளாக் பங்கஸ் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் வேகமாக கேஸ்கள் பரவுவதாலும், இதனால் பலர் அடுத்தடுத்து பாதிக்கப்படுவதாலும், பலியாவதாலும் தற்போது பிளாக் பங்கஸ் எபிடமிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பலி

    பலி

    இந்த நிலையில் கருப்பு பூஞ்சை காரணமாக இந்தியாவில் இதுவரை 212 பேர் பலியாகி உள்ளனர். 90 பேர் மகாராஷ்டிராவில் மட்டும் பலியாகி உள்ளனர். 61 பேர் குஜராத்தில் மட்டும் பலியாகி இருக்கிறார். கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கருப்பு பூஞ்சை கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

     எப்படி?

    எப்படி?

    இந்த கருப்பு பூஞ்சை குறித்து பேசிய கொரோனா தடுப்பு வல்லுநர் குழுவின் தலைவரும், நிதி ஆயோக் உறுப்பினருமான டாக்டர் விகே பால், கருப்பு பூஞ்சை பொதுவாக எதிர்ப்பு சக்தி குறைவதாலும், சர்க்கரை வியாதி கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு இருப்பதாலும் தோன்றுகிறது. அதிக ஸ்டிராய்டு மருந்துகளை பயன்படுத்தினாலும் இது தோன்றும்.

    இளைஞர்கள்

    இளைஞர்கள்

    சில இளைஞர்களிடமும் தற்போது கருப்பு பூஞ்சை தோன்றி உள்ளது. ஆனால் இந்த கருப்பு பூஞ்சை மருத்துவம் குறித்து ஆராய்ந்து வருகிறோம். ஸ்டிராய்டு மருந்துகளை கட்டுப்பாட்டோடு பயன்படுத்தினாலும் கண்டிப்பாக கருப்பு பூஞ்சை பரவலை கட்டுப்படுத்த முடியும். மருத்துவமனைகள் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    விசாரணை

    விசாரணை

    இந்த நிலையில் அதிகப்படியான சின்க் (zinc) மருந்துகள் மற்றும் மாத்திரைகளை எடுப்பதும் கூட பிளாக் பங்கஸ் ஏற்பட காரணமாக இருக்கலாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய மருத்துவ கவுன்சிலின் முன்னாள் தலைவர் டாக்டர் ராஜீவ் ஜெயதேவன், உடலில் அதிகப்படியான சின்க், இரும்பு சேரும் நேரங்களில் அங்கு பூஞ்சை வளர வாய்ப்பு உள்ளது.

    சூழ்நிலை

    சூழ்நிலை

    கருப்பு பூஞ்சை வளர்வதற்கான சூழ்நிலையை இது ஏற்படுத்த வாய்ப்புள்ளது. சின்க் மாத்திரைகள் இது போன்ற பாதிப்பை உண்டாக்க வாய்ப்புள்ளது. இதை உடனே விசாரிக்க வேண்டும். இது தொடர்பாக உடனே ஆராய்ச்சி செய்து முடிவுகளை வெளியிட வேண்டும், என்று டாக்டர் ராஜீவ் ஜெயதேவன் குறிப்பிட்டுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+