ரவுடி நாகேந்திரன் உடல் பிரேதப் பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைப்பு.. இன்று இறுதிச் சடங்கு!
சென்னை: உடல்நலக்குறைவால் உயிரிழந்த ஆயுள் தண்டனைக் கைதி ரவுடி நாகேந்திரனின் உடல் பிரேதப் பரிசோதனை முடிந்து அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஸ்டான்லி மருத்துவமனையில் நாகேந்திரனின் உடல் அவரது மகன் அஸ்வத்தாமனிடம் இன்று ஒப்படைக்கப்பட்ட நிலையில், வியாசர்பாடியில் உள்ள வீட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி சென்னையில் ஒரு கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே சிறையில் இருந்த ரவுடி நாகேந்திரன், அவரது மகன் வழக்கறிஞர் அஸ்வத்தாமன், ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், வழக்கறிஞர் அருள், ராமு, திருமலை, மணிவண்ணன், சிவா, அப்பு என்ற விஜய், கோழி என்ற கோகுல், சந்தோஷ், செல்வராஜ், அஞ்சலை, பொற்கொடி, மலர்கொடி என மொத்தம் 28 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதில் ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். தலைமறைவாக உள்ள சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழக்கின் குற்றப் பத்திரிகையில் முதல் குற்றவாளியாக (A1) ரவுடி நாகேந்திரன் சேர்க்கப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவுடி நாகேந்திரன் கல்லீரல் பாதிப்பு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ரவுடி நாகேந்திரன் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
ஆயுள் தண்டனைக் கைதி பிரபல தாதா நாகேந்திரன் நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது உடலை தங்கள் தரப்பு மருத்துவர் கொண்டு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என அவரது மனைவி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் அவசர முறையீடு செய்யப்பட்டது. அவரது மனைவியின் அவசர முறையீட்டை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்தது.
பிரேதப் பரிசோதனைக்கென நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் மேற்கொள்வார்கள் என நீதிபதி சதீஷ் குமார் பதில் அளித்தார். பின்னர் அவரது உத்தரவின்பேரில் மாதவரம் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு தீபா மேற்பார்வையில் டாக்டர் சாந்தகுமார் தலைமையில் ஸடான்லி மருத்துவ கல்லூரி தடயவியல் துறை தலைவர் பிரியதர்ஷினி, டாக்டர்கள் நாராயணன், ராஜேஷ் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்து முடித்தனர்.
இதற்கிடையில் வியாசர்பாடி சத்யமூர்த்தி நகரில் உள்ள நாகேந்திரன் வீட்டில் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். ஸ்டான்லி மருத்துவமனையில் நாகேந்திரனின் உடல் இன்று அவரது மகன் அஸ்வத்தாமனிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், வியாசர்பாடியில் உள்ள வீட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
நாகேந்திரன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலிக்கு பிறகு மதியம் 2 மணிக்கு வியாசர்பாடி முல்லை நகர் சுடுகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாகேந்திரன் வீடு அருகே பாதுகாப்புக்காக நூற்றுக்கணககான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நாகேந்திரன் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்வதற்காக அவரது மகன் அஸ்வத்தாமன் பரோலில் வந்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications