Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏமனில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த முகேஷ் அம்பானியை உலகின் பெரும் செல்வந்தராக மாற்றிய குணங்கள் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி இன்று, உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். ஏமனில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த முகேஷ் அம்பானி, உலகின் மிகப்பெரிய செல்வந்தராக மாறுவதற்கு அவரது குணம் தான் காரணம். அதனை பற்றி அறிய, அவரது கடந்த கால வாழ்க்கையை பற்றி பார்ப்போம்.

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபரான முகேஷ் அம்பானி, உலகத்தில் பல நாடுகளில் பரவி விரிந்து கிடக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் ஆவார்.

Mukesh Ambani reliance jio

திருபாய் அம்பானியின் மகனாகிய முகேஷ் அம்பானி ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். ஆமாங்க.. முகேஷ் அம்பானி பிறக்கும் போது எல்லாம் திருபாய் அம்பானி பணக்காரர் இல்லை.. முகேஷ் அம்பானி ஏமனில் பிறந்தார். அவரது அப்பா திருபாய் அம்பானி ஏமனில் ஒரு எரிவாயு நிலையத்தில் வேலை செய்தார். முகேஷ் அம்பானி பிறந்த ஒரு வருடம் கழித்து குடும்பத்துடன் திருபாய் அம்பானி இந்தியாவுக்கு வந்தார்.

திருபாய் அம்பானி வெறும் 500 ரூபாய்களுடன் இந்தியாவுக்கு வந்து மும்பையில் ஒரு சிறிய குடியிருப்பில் வசித்திருக்கிறார். ஆனால் அம்பானி எப்போதும் பெரிய கனவு காண்பதுடன், அதனை நோக்கி பயணிப்பவராக இருந்தார். எல்லாரையும் விட வித்தியாசமாக யோசித்த அம்பானி, "ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்" என்ற பெயரில் ஜவுளித் தொழிலைத் தொடங்கினார். அதுதான் இன்று உலகப்புகழ் பெற்ற நிறுவனமாக உள்ளது.

முகேஷ் அம்பானி, உலகின் புகழ் பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் 1980களில் எம்பிஏ படித்துக் கொண்டிருந்தார். ஆனால் வகுப்பறைகளை விட நிஜ வாழ்க்கை அதிகம் கற்றுக் கொடுக்கும் என்று நம்பிய அவர், அதனாலேயே படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வெளியேறினார். அத்துடன் தனது தந்தை திருபாய் அம்பானிக்கு உதவ அவரது நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.

முகேஷ் அம்பானி அடுத்த 10 வருடங்கள் எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து அதற்கு தகுந்தாற் போல் முடிவுகளை எடுக்க தொடங்கினார். அதன்படியே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை விரிவுபடுத்த விரும்பினார். அதற்காக அவர் பல்வேறு துணிச்சலான முடிவுகளை எடுத்தார். யாரும் செய்ய தயங்கும் செயல்களை செய்த முகேஷ் அம்பானி, அன்றைய லாபத்தை பற்றி யோசிக்காமல், எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதை யோசித்தே பல தைரியமான முடிவுகளை எடுத்தார். அதனால்தான் அவரது எண்ணெய் நிறுவனம் இன்று கோடிகளை சம்பாதிக்கிறது.

பெட்ரோலிய துறையில் மட்டுமின்றி, இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையிலும் முகேஷ் அம்பானி மிகப் பெரிய புரட்சி செய்தார். 2016ம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ என்ற தொலைத்தொடர்பு சேவையைத் தொடங்கினார். இது இந்தியாவில் தொலைத் தொடர்பு துறையை மொத்தமாக ஆட்டம் காண வைத்தது. தொழில் துறையில் மிகப் பெரிய புரட்சிக்கு காரணமாக அமைந்தது.

தொலைப்பேசியில் பேச காசு, இண்டர்நெட் பயன்படுத்த காசு என்பதை அடியோடு மாற்றி, அளவற்ற குரல் அழைப்பு, அன்லிமிடெட் டேட்டா திட்டத்தை பல மாதங்களுக்கு இலவசமாக வழங்கிய முகேஷ் அம்பானியின் புரட்சி தான், இன்று பல இந்தியர்கள் மிகவும் மலிவான விலையில் இணையதள சேவை மற்றும் தொலைத்தொடர்பு சேவை பெற காரணமாக அமைந்தது.

இந்தியாவின் மும்பையில் அமைந்துள்ள மிகவும் ஆடம்பரமான மாளிகையான ஆன்டிலியாவில் முகேஷ் அம்பானி வசிக்கிறார். இந்த ஆடம்பர மாளிகையின் மதிப்பு 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாகும். இந்திய மதிப்பில் சுமார் 8350 கோடி ரூபாய்க்கு அதிகமாகும்.

முகேஷ் அம்பானி குடும்பம் வசிக்கும் மாளிகை என்பது 27 மாடிகளுடன் 400,000 சதுர அடி பரப்பளவுடன் அரண்மனைகளே தோற்றுவிடும் அளவிற்கு தோற்றம் உடையது. அங்குள்ள வசதிகள் எந்த நட்சத்திர ஓட்டலிலும் இல்லாத ஒன்று. 3 ஹெலிபேட் தளங்கள், 168-கார்களை நிறுத்தும் கேரேஜ்கள், ஸ்பாக்கள், நீச்சல் குளங்கள், தனியார் தியேட்டர் மற்றும் செயற்கை பனியை உருவாக்கும் பனி அறைகள் உட்பட பல வசதிகள் முகேஷ் அம்பானியின் மாளிகையில் இருக்கிறது. ரிக்டர் அளவில் 6 என்கிற அளவில் வந்தாலே உலகின் பல வீடுகள் தரைமட்டம் ஆகிவிடும். ஆனால் முகேஷ் அம்பானியின் இந்த ஆடம்பர மாளிகை, 8 என்கிற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் வந்தாலும் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அம்பானியின் இந்த ஆடம்பர வசதிகளை பராமரிக்க 600 பேர் வேலை செய்கிறார்கள்.

முகேஷ் அம்பானி விளையாட்டில் அளவுக்கடந்த ஆர்வம் கொண்டவர். பள்ளி நாட்களில் ஹாக்கி விளையாடி உள்ளார். ஹாக்கி, கால்பந்து மற்றும் பல்வேறு வகையான விளையாட்டுகளை விளையாடி உள்ள முகேஷ் அம்பானி, 10-15 நாட்கள் கிராமங்களில் போய் தங்கி இருக்கிறார். விளையாட்டின் மீதான ஆர்வம் காரணமாகவே, பல ஐபிஎல் பட்டங்களை வென்ற மும்பை இந்தியன்ஸ் என்ற வெற்றிகரமான கிரிக்கெட் அணியை முகேஷ் அம்பானி சொந்தமாக வைத்துள்ளார். அதுமட்டுமின்றி, இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) மூலம் இந்தியாவில் கால்பந்தை ஊக்குவிப்பதிலும் முதலீடு செய்துள்ளார்.

முகேஷ் அம்பானியை பொறுத்தவரை மிகவும் எளிமையாகவே வாழ விரும்புவார். உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருந்தாலும், இன்று வரை அவர் அடிக்கடி சாதாரண வெள்ளைச் சட்டைகள் மற்றும் அடர் நிற சட்டைகளை அணிகிறார். முகேஷ் அம்பானியின் உணவு முறையும் மிக சாதாரணமானது. பாரம்பரிய குஜராத்தி உணவுகளை விரும்பும் அவர், சைவ வாழ்க்கை முறையை பின்பற்றி வருகிறார்.

முகேஷ் அம்பானிக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது. தினமும் அதிகாலையிலேயே எழுந்துவிடுகிறார். வாழ்க்கையில் தினசரி தான் செய்யும் ஒவ்வொரு செயலிலிலும் ஒழுங்கை கடைபிடிக்கிறார். அத்துடன் மிகவும் கவனமான அணுகுமுறைகளை பின்பற்றுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

முகேஷ் அம்பானி தனிப்பட்ட கிரெடிட் கார்டுகளை வைத்துக் கொள்வதை விரும்ப மாட்டார். அதற்குப் பதிலாக நேரடியாகப் பணம் செலுத்துவதையே வழக்கமாக வைத்திருக்கிறார். சமீபத்தில் தனது மகன் ஆனந்திற்கு உலகின் மிக காஸ்ட்லி திருமணத்தை நடத்தி வைத்தார். ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்டை மும்பையில் நடந்த பிரமாண்டமான விழாவில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண விழா 500 மில்லியன் டாலர் அளவில் நடந்ததாக சொல்கிறார்கள்.

Mukesh Ambani reliance jio

ஆனந்த் அம்பானியின் திருமணத்தில், உலகப்புகழ்பெற்ற நட்சத்திரங்களான ரிஹானா, ஜஸ்டின் பீபர் ஆகியோரின் நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த விழாவில் நடிகர் ரஜினி காந்த், ஷாருக்கான், அட்லி, கிம் கர்தாஷியன் பிரியங்கா சோப்ரா, பாலிவுட் நட்சத்திரங்கள் உள்பட 2000க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் மற்றும் மிகப்பெரிய உலக நாட்டு தலைவர்கள், வணிக நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த தகவலை மணிபிஸ்ட் லார்ட் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+