நீயா நானாவில் வெளிப்பட்ட “பாச மலர்கள்”.. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பார்த்து அழுத அண்ணன்.. நெகிழ்ந்த தங்கை
சென்னை: விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் கிராமத்து அண்ணன் தங்கை VS நகர்புற அண்ணன் தங்கை என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதத்தில் கிராமத்துக்கு அண்ணன் தங்கை பேசியது காண்போரை நெகிழ செய்துள்ளது.
தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணியில் இருந்து வருகிறது விஜய் டிவி. இதில், ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றன. இதில் பணிபுரிந்த பலர் தமிழ் சினிமாவில் உச்சம் தொட்டிருக்கிறார்கள்.
குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன், நீயா நானா, கேபிஒய் சாம்பியன்ஸ், பிக்பாஸ், பிபி ஜோடிகள் என விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து இழுத்து வருகின்றன.

நீயா நாயா
இதில் குறிப்பாக கோபிநாத் தொகுத்து வழங்கி வரும் நீயா நானா விவாத நிகழ்ச்சியில் வாரந்தோரும் ஏதாவது ஒரு வித்தியாசமான தலைப்பை முன்வைத்து விவாதங்கள் நடத்தப்படுவது வழக்கம். சமுதாயத்தில் உள்ள பல பழமைவாதங்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்திருக்கிறது.

காலத்துக்கு ஏற்ற தலைப்பு
குறிப்பாக அழகு, பெண்கள், காதல், திருமணம், குடும்பம், நட்பு, ஆண்கள், பெண்கள், அரசியல், சட்டம், சமுதாயம், கல்வி, விளையாட்டு, சமூக ஊடகம் என பல்வேறு தலைப்புகளை கையில் எடுத்து காலத்துக்கு ஏற்ப நீயா நானா நிகழ்ச்சியில் கோபிநாத் விவாதத்தை நடத்தி வருகிறார்.

அண்மையில் பிரபலம்
குறிப்பாக கடந்த சில வாரங்களாக நீயா நானா நிகழ்ச்சியில் வைக்கப்படும் தலைப்புகள் சமூகத்தில் பெரும் விவாதப் பொருளையும், வரவேற்பையும் பெற்று வருகிறது. குறிப்பாக வீட்டு உரிமையாளர்கள், பணிப்பெண்கள் இடையே நடைபெற்ற விவாதம், படித்த மனைவி, படிக்காத கணவன் இடையே நடைபெற்ற விவாதமும் நல்ல வரவேற்பை பெற்றது.

அண்ணன் தங்கை
இந்த நிலையில் இன்று ஒளிபரப்பாகும் நீயா - நானாவின் கிராமத்து அண்ணன் - தங்கை VS நகர்புற அண்ணன் - தங்கை விவாதத்தின் புரோமோ அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அதில் அண்ணனுக்காக தங்கை அழுவதும், தங்கைக்காக அண்ணன் அழுவதும் கிராமத்தில் நடக்கும் என ஒருவர் பேச, "நகர்புறத்தில் இருப்பவர் அழ மாட்டோம், அதற்கு அடுத்த நிலையை பார்ப்போம்" என்று கூற, அழுகையே ஒரு தீர்வுதான் என பதிலளித்தார்.

அழுத அண்ணன்
மற்றொரு கிராமபுற அண்ணனோ, "நான் படிக்கவோ, வேறு எங்கோ பிரிந்து சென்றுவிட்டால் அது பற்றி என் தங்கை வாயாற சொல்லாமல் ஸ்டேட்டஸ் வைப்பார். அவர் வைக்கும் அந்த ஸ்டேட்டஸ் பார்த்து நான் அழுதுள்ளேன்." என்றார். இதை கேட்ட தங்கை, "அவர் என்னை அரிசிமூட்டை என்றே அழைப்பார். விளையாட்டாகவே பதில் சொல்வார். அழுததே தெரியாது. எனக்கான அவர் அழுதுள்ளார் என்பது முதல்முதலாக இப்போதுதான் எனக்கு தெரியும்." என்றார்.












Click it and Unblock the Notifications