ரேவடின்னு சொன்னாங்களே.. இலவசங்களை வாரி வழங்கிய நிர்மலா சீதாராமன் பட்ஜெட்.. இதை நோட் பண்ணீங்களா
சென்னை: இலவசங்களை தேசிய அளவில் எதிர்க்கும் மத்திய பாஜக அரசு.. தற்போது மத்திய பட்ஜெட்டில் இலவசங்களை வாரி வழங்கி உள்ளது. முக்கியமாக பெண்கள், இளைஞர்களை கவரும் வகையில் இலவசங்களை அள்ளி தெளித்து உள்ளது. ரேவடி கலாச்சாரம் என்று இலவசங்களை கிண்டல் அதே பாஜகதான் மத்தியில் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் தற்போது எதிர்க்கட்சிகளின் ஸ்டைலான ரேவடி கலாச்சாரம் பக்கம் திரும்பி உள்ளது.
கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளாக இலவசங்களை வழங்குவதை பாஜக தலைவர்கள் பலர் தீவிரமாக எதிர்த்து வருகின்றனர். இலவசங்கள் மூலம் மக்கள் பல அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து கொண்ட நிலையிலும் கூட பாஜக இதை கடுமையாக எதிர்த்து வருகிறது.

அரசியல் கட்சிகள் இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளை வழங்க கூடாது. இலவசங்களை வழங்கும் கட்சிகளின் உரிமைகளை ரத்து செய்ய வேண்டும் என்று பாஜகவை வழக்கறிஞர் அஸ்வினி குமார் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு கூட தொடுத்தார். இந்த வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன் மனு தாக்கல் செய்த திமுக, ரிட் மனு மூலம் தங்களையும் மனுதாரராக சேர்த்துக்கொண்டது. இலவசங்கள் காரணமாக மக்களின் அடிப்படை பொருளாதாரம் உயரும்.
இதற்கு பொருளாதார ரீதியாக சான்றுகள் உள்ளன, என்று திமுக தரப்பு இந்த வழக்கில் வாதம் வைத்து வருகிறது. அதே சமயம் இலவசங்களை வாக்குறுதிகளாக கொடுப்பதை பாஜகவினர் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இலவசங்கள் காரணமாக ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வெற்றிபெறும் நிலையில்தான் பாஜக இந்த வழக்கை தொடுத்தது.அறிவிப்புகள்:
அறிவிப்புகள்: இலவசங்களை தேசிய அளவில் எதிர்க்கும் மத்திய பாஜக அரசு.. தற்போது மத்திய பட்ஜெட்டில் இலவசங்களை வாரி வழங்கி உள்ளது.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024 பட்ஜெட்டில், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, நடுத்தர மக்களின் நலன், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும். உள்நாட்டு கல்வி நிறுவனங்களில் உயர்கல்விக்காக ₹10 லட்சம் வரை கடனுக்கான நிதியுதவியை அரசு வழங்கப்படும்.
அரசின் முன்னெடுப்பால் அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவார்கள். வேளாண் மற்றும் அதுசார்ந்த துறைகளுக்கு ₹1.52 லட்சம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படும். 5 ஆண்டுகளில் 4.1 கோடி இளைஞர்களுக்கான பிரதமரின் 5 அம்சத் திட்ட அமலாக்கத்துக்கு ₹2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் 'பிஎம் கரீப் அன்ன யோஜனா' திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். 2024 பட்ஜெட்டில், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, நடுத்தர மக்களின் நலன், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும். பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள், வேலைவாய்ப்பு, தொழில்துறை வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் வழங்கப்படும்.
தொழில் உற்பத்தி துறையில் முதல்முறையாக பணிக்கு சேரும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி சந்தாவை அரசே செலுத்தும்; அனைத்து துறைகளிலும் கூடுதலாக பணிக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு வைப்பு நிதி சந்தாவில் ₹3000 அரசு செலுத்தும்.
மகளிர் நலன் சார்ந்த திட்டங்களுக்கு ₹3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. முத்ரா கடன் உதவித் திட்டத்தில் கடன் தொகை ₹20 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. ஊரக வளர்ச்சிக்கு ₹2.66 லட்சம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. உள்நாட்டு கல்வி நிறுவனங்களில் உயர்கல்விக்காக ₹10 லட்சம் வரை கடனுக்கான நிதியுதவியை அரசு வழங்கும், என்று பல இலவசங்கள், சமூக நீதி திட்டங்களை பாஜக வாரி வழங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications