தமிழகம் கேட்டது ஒன்னு! மத்திய அரசு கொடுத்தது இன்னொன்று! பட்ஜெட்டில் ஸ்டாலின் கோரிக்கை நிராகரிப்பு
சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு நிதியுதவி, மதுரை, கோவை உள்ளிட்ட மாநகரங்களுக்கு மெட்ரோ ரயில் சேவை குறித்த அறிவிப்புகள் இன்றைய பட்ஜெட்டில் வெளியாகும் என எதிர்பார்த்து ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது.
2026- 2027-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை இன்றைய தினம் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கு சில திட்டங்களையும் வெளியிட்டிருக்கிறார்.

அதில் பொதிகை மலையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மலையேற்ற திட்டங்கள் அறிமுகப்படுத்தும். பழவேற்காடு ஏரியில் பறவை கண்காணிப்பு மையம் அமைக்கப்படும், ஹைதராபாத்- சென்னை, சென்னை - பெங்களூர் இடையே அதி விரைவு ரயில் தடம் உருவாக்கப்படும், ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம் அமைக்கப்படும். தமிழகத்தில் அரிய வகை கனிமங்களுக்கான வழித்தட திட்டம் தொடங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகின.
ஆனால் அவற்றில் தமிழகம் பெரிதும் எதிர்பார்த்த திட்டங்கள் ஏதும் இல்லாததால் தமிழக மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதாவது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
கோவை, மதுரையில் மெட்ரோ திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மாணவர்களுக்கான கல்வி நிதி ரூ 3548 கோடி இன்னும் விடுவிக்கப்படவில்லை. நிதி ஆணையம் பரிந்துரைத்தபடி மத்திய அரசின் வரி பகிர்வு வருவாயில் மாநிலங்களுக்கு 50 சதவீத வரி பகிர்வும் நிறைவேற்றப்படவில்லை.
இதுகுறித்து ஸ்டாலின் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: #UnionBudget2026: வழக்கமாகச் சொல்லும் திருக்குறளோடு சேர்த்து, தேர்தலை மனதில் வைத்தேனும் தமிழ்நாட்டுக்கான பின்வரும் அறிவிப்புகள் இடம்பெறுமா?
📚 விடுவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் படிப்புக்கான 3,548 கோடி ரூபாய் கல்வி நிதி
🚉 கோவை, மதுரை மெட்ரோ இரயில்,
💧 தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுத்தி வரும் #JalJeevan திட்டத்துக்கான 3,112 கோடி ரூபாய் நிதி,
🛤️ புதிய இரயில்வே திட்டங்கள்,
💼 நிதி ஆணையம் பரிந்துரைத்தபடி ஒன்றிய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% நிதிப் பகிர்வு.
இன்னும் பட்டியல் இருக்கிறது. தேர்தலை மனதில் வைத்தாவது இம்முறை தமிழ்நாட்டுக்கான அறிவிப்புகளைத் தவறாமல் வெளியிடுவீர்கள் என எதிர்பார்க்கிறோம். அவை மதுரை #AIIMS போல அறிவிப்போடு நின்றுபோகாமல், முறையான நிதி ஒதுக்கீட்டுடன் குறித்த காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கோருகிறோம்.இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அது போல் மாற்றம் இல்லாத ஏமாற்றம் என்றும் தேர்தலை மனதில் வைத்துக் கூட மத்திய அரசு, தமிழகத்திற்கு எந்த திட்டங்களையும் ஒதுக்கவில்லை என்றும் திமுக எம்பி கனிமொழி பதிவில் தெரிவித்துள்ளார்.
மதுரை தொப்பூரில் கோ.புதுப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை கடந்த 2019 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் மொத்த பரப்பளவு 2,31,782 சதுர அடி, திட்ட மதிப்பீடு ரூ 2,021 கோடியாகும். இங்கு மருத்துவக் கல்லூரி கட்டடம், நர்சிங் கல்வி வளாகம், நிர்வாகம், ஆடிட்டோரியம், பிரதான மருத்துவமனை, புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு ஆகியவையும் கட்டப்படுகிறது.
முதற்கட்ட கட்டுமான பணிகள் 2026 ஜனவரியில் முடிவடையும் என சொல்லப்பட்டது. ஆனால் இதுவரை முடியவில்லை என்றும் போதிய நிதியை இன்னும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அது போல் சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. 2 கட்டங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது 3ஆவது பூந்தமல்லி- போரூர் வரை நடைபெற்று வருகிறது. இது இந்த மாதம் பயன்பாட்டுக்கு வரும் என சொல்லப்படுகிறது.
அந்த வகையில் மாநகராட்சிகளான கோவை, மதுரையிலும் மெட்ரோ திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் அவை குறித்தும் இந்த பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications