ஜாமீன் வாங்குறதுதான் முக்கியம்.. விஜயை கண்டுக்காத புஸ்ஸி ஆனந்த்? பின்னணி காரணமே.. வேறு மேட்டராமே!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஜாமீன் பெறுவதில் தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார். இப்போதைக்கு அவர் தலைமறைவாக இருக்கிறார்.
கரூர் துயரச் சம்பவ வழக்கில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார். விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கரூர் போலீஸ் எப்ஐஆர்
கரூரில் நடைபெற்ற அரசியல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த கோர சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில், "அரசியல் பலத்தை காட்டும் நோக்கில் கூட்டம் திட்டமிட்டு 4 மணி நேரம் தாமதமாக துவக்கப்பட்டது. தொண்டர்கள் மரங்கள் மற்றும் கடைகள் மீது ஏறி அமர்ந்தனர். இதில் மரக்கிளைகள் முறிந்து கீழே நின்றவர்கள்மீது விழுந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து எச்சரிக்கைகளையும் புறக்கணித்ததாக, ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் மீது குற்றச்சாட்டு விதிக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரம் காத்திருத்தல், குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளின் இல்லாமை, கூட்ட நெரிசலில் ஏற்பட்ட அழுத்தம் ஆகியவற்றால் மக்கள் உடல் நிலை சோர்ந்து கீழே விழுந்ததாகவும், அவர்கள் மிதிபாடுகளில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததாகவும் எஃப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகின்றது.
புஸ்ஸி ஆனந்த் கைது முயற்சி
இந்த நிலையில்தான் கரூர் விஜய் பிரச்சாரத்தில் 41 பேர் பலியான வழக்கில் புஸ்ஸி ஆனந்த் விரைவில் கைதாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை விரைவில் கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஜாமீன் பெறுவதில் தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார். இப்போதைக்கு அவர் தலைமறைவாக இருக்கிறார். கைதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்று புஸ்ஸி ஆனந்த் தீவிரமாக இருக்கிறாராம். புஸ்ஸி ஆனந்த் தமிழக வெற்றிக் கழகம் உள்ளே என்ன நடக்கிறது.. இப்போது நடக்கும் பிரச்சனையை எப்படி சரி செய்வது.. விஜய்க்கு ஆதரவாக என்ன நடவடிக்கை எடுப்பது என்று எதை பற்றியும் புஸ்ஸி ஆனந்த் கவலைப்படவில்லை என்று கூறப்படுகிறது.
விஜயை அவர் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழக கரூர் அசம்பாவிதத்திற்கு பின் திருச்சி செல்லும் வழியிலேயே.. புஸ்ஸி ஆனந்த்தை விஜய் கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. உங்களால்தான் இவ்வளவு பிரச்சனை ஏற்பாடு சரி இல்லை என்று புஸ்ஸி ஆனந்த் மீது விஜய் கடுமையாக கோபம் அடைந்து உள்ளார்.
இதையடுத்தே புஸ்ஸி ஆனந்த் அன்று வேறு காரில் மாறி சென்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே புஸ்ஸி ஆனந்த் இப்போது கட்சிக்குள், கரூர் விவகாரத்தில் நடக்கும் விஷயங்களை பற்றி கவலையே படவில்லை என்று கூறப்படுகிறது. தனக்கு முதலில் பெயில் கிடைக்க வேண்டும்.. அதுதான் முக்கியம் என்று விஜய் தீவிரமாக இருக்கிறாராம்.
-
மாறுவேடத்தில் நள்ளிரவு ரவுண்ட்ஸ் போகிறாரா முதல்வர் விஜய்? தவெக ஆனந்த்ஜீத் உடைத்த அதிரடி ரகசியம்! -
திருச்சி கிழக்கு விஜய் வென்ற தொகுதி.. அங்கு காங்கிரஸ் போட்டியிடாது.. ராஜேஷ் குமார் திட்டவட்டம்! -
பெண்களின் பாதுகாப்பிற்கு புதிய அரண்.. ஜூன் 9ல் சிங்கப்பெண் அதிரடி படையை களமிறக்கும் முதல்வர் விஜய்! -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
7 நாட்கள் 7 அறிக்கைகள்.. விஜய்யின் தூக்கத்தை கெடுக்கும் திமுக.. சொல்ல வருவது ஒரே மேட்டர் தான் -
"சுடுகாடு பக்கத்துல டாஸ்மாக் வையுங்க CM சார்!" – விஜய்யிடம் பார்த்திபனின் 'சைக்கலாஜிக்கல்' அஸ்திரம் -
கள்ளச்சாராயம் ஒழிக்க தனிப்படை.. கள்ளக்குறிச்சியில் விஜய் அரங்கேற்றும் மாற்றம்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் -
விஜய் அதிரடி.. தமிழக தனியார் பள்ளிகளுக்கு ₹3 லட்சம் அங்கீகார கட்டணம் ரத்தா? உண்மை என்ன? -
இரக்கமே காட்டாதீங்க.. கேஸை போடுங்க.. திமுக மாஜி அமைச்சர்களுக்கு விஜய் செக்.. வரிசையாக ஆக்சன் -
நீட் தேர்வு ரத்து மசோதா நிறைவேற்றப்படுமா? அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த முக்கிய பதில்! -
கள்ளச் சாராயத்தை ஒழிக்க விஜய் போட்ட மெகா பிளான்.. நேரடியாக களத்தில் இறங்கிய ஆதவ் அர்ஜுனா! -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்










Click it and Unblock the Notifications