சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சல்லி சல்லியா நொறுங்கும் அதிமுக கணக்கு.. திமுகவுக்கு இனி சிக்கல்.. பாஜக? திருமா அன்னைக்கே சொன்னாரே

ரஜினிகாந்த் அதிமுகவில் நுழைந்து தேர்தலை எதிர்கொள்ள முடியுமா என்ற ஐயம் எழுந்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: ரஜினியை அதிமுகவில் முன்னிறுத்தி, தேர்தலை பாஜக சந்திக்க உள்ளதாக தகவல்கள் பரபரத்து வரும் நிலையில், அது யாருக்கு நெருக்கடி உருவாக்க போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

அரசியலுக்குள் நுழையாமலேயே, அரசியலில் இருந்து விலகியவர் ரஜினிகாந்த்.. பாஜகவின் பிம்பம்.. பாஜகவின் நிழல், பாஜகவின் பி-டீம் என்ற பல பெயர்களுடன் சலசலக்கப்படுபவர்.

இன்று ஆளுநரை சந்தித்து பேசியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.. விரைவில் தேர்தலுக்கு பாஜக தயாராகி வரும் நிலையில், தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று சூளுரைத்து வரும் நிலையில், ஆளுநரை ரஜினி சந்தித்து பேசியது பலவித சந்தேகங்களை எழுப்பி வருகிறது.

சட்டென கண்கள் சிவக்க.. நான் உள்ளே போவட்டுமா? பிரஸ் மீட்டிற்கு முன் முகத்தை சுளித்த ரஜினி! என்னாச்சு? சட்டென கண்கள் சிவக்க.. நான் உள்ளே போவட்டுமா? பிரஸ் மீட்டிற்கு முன் முகத்தை சுளித்த ரஜினி! என்னாச்சு?

 ஆளுநர் ரவி

ஆளுநர் ரவி

"மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்தித்தேன்.. தமிழ்நாட்டை மிகவும் நேசிக்கிறார்.. முக்கியமாக தமிழக மக்கள், அவர்களது நேர்மை, கடின உழைப்பு இதெல்லாம் ஆளுநருக்கு மிகவும் பிடித்துவிட்டது.. இங்கே உள்ள ஆன்மீக உணர்வு அவர் மிகவும் நேசிக்கிறார்.. தமிழகத்தின் நல்லதுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறேன் என்று ஆளுநர் சொல்லி உள்ளார். தமிழக ஆன்மீக உணர்வு ஆளுநரை ஈர்த்துள்ளது" என்றெல்லாம் ரஜினி ஆளுநர் ரவியை பற்றி மீடியாவில் வெளிப்படையாகவே சொல்லி உள்ளார்.

 பழனிசாமி

பழனிசாமி

ரஜினி ஆளுநரை சந்தித்து பேசியதுமே, அதிமுகவின் மூத்த தலைவர் கேசி பழனிசாமி, "அரசியல் வர மாட்டேன் என ரஜினி கூறியிருந்தாலும் அவரை பாஜக எப்படியும் அரசியலுக்கு அழைத்து வந்துவிடும்" என்று ஆருடம் சொல்லி உள்ளார்.. அதற்கேற்றார்போல், அதிமுக சின்னத்தை முடக்கி, ரஜினியை அதிமுகவுக்குள் கொண்டு வந்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன.. ஒருவேளை இந்த தகவல் உறுதியாகும்பட்சத்தில் இது திமுகவுக்கு குடைச்சலை தரும் என்றே நம்பப்படுகிறது.

 இந்துத்துவா

இந்துத்துவா

காரணம், ரஜினியை பொறுத்தவரை ஆன்மிக அரசியலை நடத்த போவதாக அன்றே என்று தெளிவாக சொல்லி இருந்தார்.,. திமுக அரசோ, இப்போது திராவிட மாடலை கையில் எடுத்துள்ளது.. அதிமுகவுக்குள் ரஜினி என்ட்ரி ஆகும் பட்சத்தில், சித்தாந்த ரீதியாகவே இவர்களுக்குள் மோதல் வெடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.. ரஜினியை வைத்து தமிழகத்தில் காலூன்றுவதுடன், தன்னுடைய இந்துத்துவா கொள்கைகளையும், ரஜினி மூலமாகவே பாஜக களமிறக்கினாலும், அதுவும் தமிழகத்தில் மேலும் சிக்கலையே ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

 திராவிட மண்

திராவிட மண்

ரஜினி கட்சி ஆரம்பிப்பதாக வலுவான செய்திகள் மீடியாவில் வட்டமடித்து கொண்டிருந்த நேரம் அது.. அதாவது 2018-ம் ஆண்டு, திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு பேட்டியை தந்திருந்தார்.. அப்போது அவர் சொல்லும்போது, "தமிழ்நாட்டில் இருக்கும் திராவிட இயக்கத்தையே அழித்து விடலாம் என்று ஒரு சிலர் திட்டமிட்டு பலருடைய தூண்டுதலால் ரஜினிகாந்த் கட்சி தொடங்கி இருப்பதாக ஒரு உருவகத்தை சிலர் உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். நான் அவர்களுக்கு தெளிவாக சொல்லிக் கொள்கிறேன், இந்த மண் திராவிட இயக்கத்தின் மண். தமிழ்நாட்டு மண் பெரியார், பேரறிஞர் அண்ணா, கருணாநிதியால் பண்பட்டு இருக்கக் கூடிய மண். ஆக அப்படிப்பட்ட திராவிட இயக்கத்தை அழிக்க முயற்சித்துப் பார்த்தவர்கள் எல்லாம் தோற்றக் கதைகள் நாட்டிற்கே நன்றாகத் தெரியும்" என்று ஸ்டாலின் அன்றே எச்சரித்து இருந்ததை இப்போது நாம் நினைவுகூர வேண்டி உள்ளது.

 அசைன்மென்ட்

அசைன்மென்ட்

இன்னொன்றையும் இங்கு நினைவுபடுத்தி பார்க்க வேண்டி உள்ளது.. தமிழக பாஜகவில் ஒரு முக்கிய அரசியல் வியூகம் முன்னெடுக்கப்படுவதாக, 2 மாதங்களுக்கு முன்பு ஒரு செய்தி வட்டமடித்தது.. அதாவது, இந்துக்களுக்கு எதிரான கட்சியாக திமுகவை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.. அத்துடன், அரசியல் கட்சிகள் மூலம் இல்லாமல், மடாதிபதிகள், ஆதீனங்கள், வைத்து, திமுகவுக்கு எதிராக பேச வைக்க வேண்டும்.. இதுதான் அந்த புது அசைன்மென்ட் என்று சொல்லப்பட்டது..

 மடாதிபதிகள்

மடாதிபதிகள்

அதற்கேற்றபடி, இந்த 2 மாத காலமாகவே மடாதிபதிகள், இந்து மதவாதிகள் தொடர்ந்து பேட்டிகளை தந்து வருவதும், அந்த அடிப்படையில்தான் என்றும் சொல்லப்பட்டது. இதே ரூட்டில்தான், ரஜினியையும் ஆன்மீக ரீதியாகவே பாஜக முன்னிறுத்தக்கூடும் என்கிறார்கள்.. இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று சொல்லி சொல்லியே, ரஜினியை திமுகவை டேமேஜ் செய்யவும் பாஜக தயங்காது என்கிறார்கள்.. சில நாட்களுக்கு முன்பு திருமாவளவன், ஒரு முக்கிய தகவலை சொன்னார்..

 திருமா வார்னிங்

திருமா வார்னிங்

"அதிமுக பலவீனப்படுவது, அதிமுகவை மட்டுமில்லை, தமிழ்நாட்டு நலனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில் அதிமுகவின் பலவீனத்தை சங்கப் பரிவார் தங்களை வலிமைபடுத்தி கொள்ள பயன்படுத்துவார்கள். தமிழ்நாட்டில் சங்கப் பரிவார் வலிமை பெறுவது பெரும் தீங்கை விளைவிக்கும்... அதிமுக பலவீனப்படுவது அதிமுகவிற்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தாது. இதை அதிமுக தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதிமுக தலைவர்களுக்காக சொல்லவில்லை.. தொண்டர்களுக்காக சொல்கிறேன்" என்று திருமாவளவன் எச்சரித்திருந்தார்.

திருமாவளவன்

திருமாவளவன்

அதேபோல, தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரியும், இதே கருத்தைதான் சொன்னார்.. "அதிமுக இன்று மூன்றாக உடைவதற்கு ஆர்எஸ்எஸ்தான் காரணம். எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தி உள்ளே நுழைய பார்க்கின்றனர்" கூறியிருந்தார். விசிகவும் சரி, காங்கிரஸும் சரி, அதிமுகவின் எதிர்க்கட்சிகள் என்றாலும்கூட, தமிழகத்தின் நலனை கருதி, அதிமுகவுக்கு அன்றுமுதல் எச்சரிக்கை விடுத்தும், அதை அதிமுக காதில் போட்டுக் கொள்ளவில்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. அதிமுக 3 ஆக உடைந்தும், அது சம்பந்தப்பட்ட யார் கையிலும் சிக்காமல், கடைசியில் பாஜகவின் கையில் செல்ல கூடுமோ என்ற அச்சம், ரத்தத்தின் ரத்தங்களிடம் எழுந்துள்ளதாகவும், இன்றைய ரஜினி - ஆளுநர் சந்திப்பின் சாராம்சமாக அப்படித்தான் எடுத்து கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கிறார்கள்.

 எச்.ராஜா

எச்.ராஜா

ஆக மொத்தம் இதற்கெல்லாம் காரணம், பாஜக என்று மட்டுமே சொல்லிவிட முடியாது.. சாட்சாத் அதிமுக தலைவர்கள் தான் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்ல வேண்டி உள்ளது.. அதுமட்டுமல்ல, "திராவிட கட்சிகளின் அழிவில்தான், தமிழகத்தின் எதிர்காலம் உள்ளது" என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியிருந்ததன் காரணத்தையும் திராவிட கட்சிகள் ஆராய வேண்டி உள்ளது.. எப்படி பார்த்தாலும், தற்போது யூகமாக வரும் தகவல்கள், உண்மையாகும்பட்சத்தில், இதை அதிமுக எப்படி சமாளிக்க போகிறது? அல்லது திமுக எப்படி எதிர்கொள்ள போகிறது? தெரியவில்லை.. பார்ப்போம்..!

English summary
Can BJP take over AIADMK and What is Rajinikanths next move ரஜினிகாந்த் அதிமுகவில் நுழைந்து தேர்தலை எதிர்கொள்ள முடியுமா
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X