Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போன வேகத்திலேயே.. திரும்பிய ஸ்டாலின்.. அந்த பேரை விட்டுட்டேன்.. மொத்த கவனத்தை திருப்பிய திமுக லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக வேட்பாளர்கள் லிஸ்ட் வெளியாகி உள்ள நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து பாஜகவின் கவனம் திமுக பக்கம் குவிந்து வருகிறது.

சென்னையிலுள்ள தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னையில் தொகுதிகளில் திமுகவுக்கென்றே சில வரலாறுகள் உள்ளன.. இதில், வடசென்னையை குறிப்பிட்டு சொல்லலாம். 1949லிருந்தே, திமுகவை தாங்கி பிடித்து வருகிறது வடசென்னை. திமுகவுடன் ஒப்பிடும்போது, அதிமுகவுக்கு வடசென்னையில் அவ்வளவாக ஆதரவு இல்லை என்றே சொல்லலாம்.

Can DMK Win in North Chennai and Big Expectations from DMK Candidate lists whats BJP Going to do the next

வடசென்னை: தற்போது வடசென்னையின் அதிமுக வேட்பாளராக ராயபுரம் மனோ அறிவிக்கப்பட்டுள்ளார். திமுகவிலோ, எதிர்பார்த்தபடியே, டாக்டர் கலாநிதி வீராசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக வடசென்னையில் குறியை பாய்ச்சியுள்ளது. ஆனால், பாஜக வேட்பாளர் என்று தெரியாத நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்பு வடசென்னையில் ஏற்பட்டு வருகிறது.

தென்சென்னையை பொறுத்தவரை, அதிமுக, திமுக என இரு கட்சிகளுக்குமே சாதகமான தொகுதி.. இங்கே மக்கள் நீதி மய்யத்துக்கும் ஓரளவு ஆதரவு உள்ளது.. இந்த முறையும் ஜெயவர்தனேவுக்கு இங்கு சீட் கிடைக்கும் என்கிறார்கள்..

அறிவிப்பு: அதன்படியே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த முறையும் தமிழச்சி தங்க பாண்டியனுக்கே சீட் கிடைக்கும் என்றார்கள். அதன்படியே திமுக சார்பில் அவரும் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால், இந்த தொகுதியைதான் பாஜக அளவுக்கு அதிகமாக நம்பி கொண்டிருக்கிறது. காரணம், திமுக, அதிமுகவை போலவே, பெருத்த செல்வாக்கினை பாஜகவும் இங்கு பெற்றுள்ளதால், திராவிட கட்சிகளுக்கு தென்சென்னை தொகுதி மிகுந்த சவாலாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூத்த தலைவர் டிஆர் பாலு, மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் போட்டியிட டிஆர் பாலு ஏற்கனவே அனைத்து ஏற்பாடுகளையும் செய்துகொண்டேயிருந்தார். திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர்களுக்கு இந்த தேர்தலில் அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அடிக்கடி வலியுறுத்தி வந்ததால், ஸ்ரீபெரும்புதூரிலும் புதுமுகங்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

டிஆர் பாலு : ஆனால், 83 வயதாகும் டி.ஆர்.பாலு இப்போதும் சுறுசுறுப்புடன் கட்சி பணியாற்றி வருகிறார். டெல்லி அரசியல் நகர்வு முழுவதையும் அவரே பார்த்துக் கொள்கிறார்... டெல்லி அரசியல் அத்துபடி என்றாலே டிஆர் பாலு என்றாகிவிட்டதால், தற்போது அவருக்கு சீட் தந்துள்ளது, கட்சியின் வளர்ச்சிக்கான நன்மையை டெல்லியிலிருந்து பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காஞ்சிபுரம் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படும் என்றார்கள். அப்படி காங்கிரஸ் போட்டியிட்டால், முன்னாள் எம்பி விஸ்வநாதன் போட்டியிடுவார் என்றும் சொன்னார்கள். ஆனால், மீண்டும் காஞ்சிபுரம் தொகுதியில் தி.மு.க.,வே நேரடியாக களம் காண்கிறது.

ஓட்டு பிரியும்: காரணம் காங்கிரஸ் போட்டியிட்டால், அதிமுக வெற்றி பெறலாம் என்பதுடன், பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினரும் வேட்பாளர்களால் ஓட்டுக்கள் பிரிந்துவிடும். அதனால்தான், திமுகவே போட்டியிட முடிவு செய்து, சீனியரான செல்வத்தை மீண்டும் வேட்பாளராக களமிறக்கி உள்ளது.

அரக்கோணம் தொகுதியில் ஜெகத்ரட்சகன், திருவண்ணாமலை தொகுதியில் சி.என்.அண்ணாதுரை, வேலூர்- கதிர் ஆனந்த் என எதிர்பார்க்கப்பட்ட வேட்பாளர்களே தற்போதும் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேற்கண்ட தொகுதிகளில் பாமகவும் வலுவாக உள்ளது.. எனவே, பாஜக -பாமக கூட்டணியை சமாளிக்க வேண்டிய பொறுப்பு திமுகவுக்கு சேர்ந்துள்ளது என்பதால், வடமாவட்டங்களில் இந்த முறை தேர்தல் படுசுறுசுறுப்பாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனியர்கள்: எப்படி பார்த்தாலும், ஏற்கனவே கணிக்கப்பட்ட வேட்பாளர்களே தற்போதும் திமுகவில் அறிவிக்கப்பட்டுள்ளனர்.. புதுமுகங்கள் என்பது மிகவும் குறைவாகவே உள்ளதாக தெரிகிறது. பெரும்பாலும் சீனியர்களே களமிறங்கி உள்ளது கட்சிக்கு பலம் என்றாலும், இவர்களை அதிமுக, பாஜக வேட்பாளர்கள் எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

அந்த பெயர்: ஆக, திமுக கூட்டணிக் கட்சிகள் 19 தொகுதிகளிலும், திமுக நேரடியாக 21 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. திமுகவின் வேட்பாளர் லிஸ்ட்டை முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்திருந்தார். அப்போது மேடையில் வேட்பாளர்கள் பெயரை சொல்லி முடித்துவிட்டு சென்றவர் மறுபடியும் மைக்கில் பேச தொடங்கினார்.

"இந்த லிஸ்ட்டில் 50%க்கு மேல் புதியவர்கள் (11) என்றும் ⁠3 பெண்கள் என்றும் ⁠அடிமட்ட தொண்டர்கள்/ ஒன்றியச் செயலாளர்கள் 2 பேர் என்றும் ⁠முனைவர்கள் 2 பேர் என்றும் மருத்துவர்கள் 2 பேர் என்றும் ⁠வழக்கறிஞர்கள் - 6 பேர்" என்றார்.

அதுமட்டுமல்ல, முதல்வர் மேடையில் பட்டியலை வெளியிட்டு முடித்துமே, மீண்டும் மைக்கை பிடித்து, "வேட்பாளர் பட்டிலியல் நான் ஒரு பெயரை படிக்காமல் தவறிவிட்டேன்.. காஞ்சிபுரம் தனித்தொகுதி பழைய நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம். அவர் பெயரை தயவுசெய்து சேர்த்துக்கொள்ளுங்கள் என்று பத்திரிகையாளர்களை கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+