வைகோ ஏன் அப்படி ஓடுனாரு.. திமுகவை கொஞ்ச நஞ்சம் பேச்சா.. அம்மா தந்த 39 எம்பிக்கள் எங்கே: மருது அழகுராஜ்
மருது அழகுராஜ் எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்
சென்னை: எடப்பாடி பழனிசாமியுடன் இருப்பவர்களுக்கு மனசாட்சி வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது.. தொண்டர்களும் தெளிவாக இருக்கிறார்கள்.. எடப்பாடியை தவிர, விரைவில் கட்சி ஒன்றுசேரும் என்று, ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைந்த அதிமுகவை பாஜக மேலிடம் விரும்புவதால், அதற்கான அறிவுரைகளும் சிக்னல்களும் தொடர்ந்து எடப்பாடிக்கு தரப்பட்டு வந்தது.. மறைமுக அழுத்தங்களும், சிக்னல்களும் தரப்பட்ட நிலையில், அதை கடைசிவரை எடப்பாடி பழனிசாமி கண்டுகொள்ளாமலேயே விட்டுவிட்டார்.
நெடுஞ்சாலை துறை ஊழல், சம்பந்தி ஊழல் விவகாரம், கொடநாடு விவகாரம், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை, என பல்வேறு விவகாரங்களில் எடப்பாடி பழனிசாமியின் பெயர் அடிபட்டு வரும்நிலையில், பாஜக எதிர்ப்பு அரசியலையும் அவர் கையில் எடுத்துள்ளதாக சலசலக்கப்படுகிறது.. இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ், நம் ஒன் இந்தியா தமிழுக்கு ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில், நம்மிடம் பல விஷயங்களை மருது அழகுராஜ் பகிர்ந்து கொண்டார். அதன் சுருக்கம்தான் இவை:

பண்ருட்டியார்
"தனித்து நிற்கிறோம்" என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறாரே தவிர, தனித்து நின்று வெற்றி பெறுவோம் என்று சொல்லியதேயில்லை.. தனித்து யார் வேண்டுமானாலும் நிற்கலாமே.. அதற்கு ஒரு சுயேச்சையாக நின்றாலே போதும்.. எப்படி பார்த்தாலும், எடப்பாடி அரசியலில் தனித்துதான் நிற்க போகிறார்.. அவருடைய அரசியல் என்பது, எதிர்ப்பவர்களை எல்லாம் அப்புறப்படுத்துவேன், யாரையும் கிட்ட சேர்க்க மாட்டேன். என் கருத்தை ஒப்புக் கொண்டால் உள்ளே இருங்கள், இல்லாவிட்டால் வெளியே போய்விடுங்கள் என்பதுதான் அவரது அரசியல்.. பண்ருட்டி ராமச்சந்திரனே என்றாலும்கூட, கிளைச்செயலாளர் என்று இழிவாக பேசுவார்..

கெட்ட வார்த்தை
என்னைக் கேட்டால், எடப்பாடி என்ற இடிஅமீன் இல்லாத அரசுதான் இங்கு உருவாக வேண்டும்.. ஒற்றுமை என்று சொன்னால் அது கெட்ட வார்த்தையா? அப்படி தான் அவர் நினைக்கிறார்.. ஒற்றுமை என்ற வார்த்தை எடப்பாடிக்கு பிடிக்கவில்லை.. ஒன்றிணைத்து, அனைவரையும் சேர்த்து கொண்டு சென்று வழிநடத்தும் திறமை என்பது எடப்பாடிக்கு கொஞ்சமும் கிடையாது.. பிரிந்த சென்றவர்களை, மறுபடியும் அழைத்து ஒட்டவைத்தால் அது சரிவருமா என்று கேட்கிறார்கள்.. ஆனால், இதைவிட மோசமாக இருந்தது திமுகவின் அன்றைய நிலைமை..

வைகோ
வைகோ பிரிந்து சென்றபோது, திமுகவில் இருந்தவர்களும், மதிமுகவில் இருந்தவர்களும் எப்பேர்பட்ட பிரச்சனைகளில் எதிர்கொண்டார்கள் என்பது அனைவருக்குமே தெரியும்.. அப்படியெல்லாம் இருந்துவிட்டு, பிறகு திமுகவில் வைகோ, இணைந்து பிரகாசமான எதிர்காலத்துக்கு போகவில்லையா? திமுகவுக்கு முட்டுத்தரக்கூடிய பிரதான கட்சியாக மதிமுக இன்று விளங்கவில்லையா? வைகோவுடன் இருந்து கொண்டு, திமுகவை விமர்சித்தவர்கள், எத்தனையோ பேர் பேர் திமுகவுக்கு போனார்களே.. அவ்வளவு ஏன், அதிமுகவில் இருந்து கொண்டு, இதே செந்தில்பாலாஜி, திமுகவை விமர்சிக்காத விமர்சனமா? ராஜகண்ணப்பன் திமுகவை பேசாத பேச்சா? சேகர்பாபு பேசாத பேச்சா?

பர்சனாலிட்டி
அதனால் ஒரு உட்கட்சி பிரச்சனை என்று வருகிறபோது, அந்த மோதலில் தடித்த வார்த்தைகள் கடுமையான வாதங்கள், வாதி, பிரதிவாதங்கள் கடுமையாக தான் இருக்கும்.. ஆனால், சிலசமயம், இதுபோன்ற பிளவுகள் வரக்கூடாது.. அது, திமுகவுக்கு உறுதியான எதிர்காலத்தை தந்துவிடும் என்பதை உணர்ந்துவிட்டாலே போதும். பிரிந்தவர்கள் ஒன்றுசேர வாய்ப்பு உள்ளது.. தான் என்ற அகந்தையும், தன்னை மட்டுமே முதன்மைப்படுத்த வேண்டும் என்ற தன்னல சீக்கும் பிடித்து அலைகிறார் எடப்பாடி பழனிசாமி.. அவருடன் இருப்பவர்களுக்கு மனசாட்சி வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது.. தொண்டர்களும் தெளிவாக இருக்கிறார்கள்..

பிடுங்கினால் அடங்கும்
பதவிகளுக்காகவும், எடப்பாடி வைத்திருக்கக்கூடிய பணத்துக்காகவும் நிர்வாகிகள் அங்கு உள்ளனர்.. எரிவதை பிடுங்கினால், கொதிப்பது அடங்கும் என்பார்கள், அதுபோல, எடப்பாடியிடம் இருக்கக்கூடிய பணம் கரைந்தால், பலம் குறைந்துவிடும்.. இது நிச்சயம் நடக்கும்.. காரணம் எந்த ஒரு வசீகரமும் அவரிடம் இல்லை.. அண்ணாவை போல அழகு தமிழுக்கு சொந்தக்காரர் இல்லை, புரட்சித்தலைவர் போல வசீகரிக்கும் வடிவம் அவரிடம் இல்லை.. புரட்சித்தலைவி அம்மாவை போல ஆளுமையும் இலைலை.. திராவிடர் இயக்கத்தின் தலைமைக்கு தேவையான எந்த ஒரு தனித்தன்மையும் இல்லாதவர்.

39+ எம்பிக்கள்
நாலரை வருடம் முழுமைப்படுத்திவிட்டார் என்பதற்காகவே அவரை நல்ல முதல்வர் என்றோ, நல்ல தலைவர் என்றோ ஒப்புக் கொள்ள முடியாது.. நல்ல தலைவருக்கும், நல்ல முதல்வருக்கும் வேறுபாடு உண்டு.. தமிழகத்தின் முதல்வராக பக்தவச்சலம் இருந்திருக்கிறார்.. ஆனால் அவரால் நல்ல தலைவராக உருவெடுக்க முடியவில்லை.. அதேசமயம் நல்ல தலைவர்களாகவும், நல்ல முதல்வராகவும் இருக்கக்கூடியவர்கள்தான் சிறந்த ஆளுமையாக பார்க்கப்படுவார்கள்.. எனவே, அதிகாரிகளின் துணையோடுதான் நாலவரை வருஷம் எடப்பாடி நகர்த்திக் கொண்டு போனார்.. அவ்வளவுதான்.. இதோ தொடர்ந்து 10 தேர்தலில் தோற்று போயாச்சு.. அம்மா தந்துட்டு போன 39 எம்பிக்கள் எங்கே? விட்டுக்கொடுக்க மட்டும்தான் ஓபிஎஸ், பெற்றுக்கொள்ள மட்டும்தான் எடப்பாடி என்பதில் கொஞ்சம் கூட நியாயமே கிடையாது என்றார்.
-
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் பரபர சோதனை! -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
"100 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் தயாராக உள்ளனர்".. பரபரப்பைக் கிளப்பிய கிருஷ்ணசாமி! -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
அரசு ஊழியர்கள் கதறல்.. கருணாநிதி கைது.. ’பொடா’வில் வைகோ - 2001 ஆட்சியில் ஆட்டிப் படைத்த ஜெயலலிதா! -
கடைசி நேரத்தில் ‘ட்விஸ்ட்’.. கூட்டணி கட்சியான NR காங்கிரஸில் இணைந்த புதுச்சேரி அதிமுக மாநில நிர்வாகி












Click it and Unblock the Notifications