நாளை நடைபெறும் ரேஷன் கடை முகாமில் மகளிர் உரிமை தொகை பெற விண்ணப்பிக்க முடியுமா? உண்மை என்ன
சென்னை: சனிக்கிழமையான நாளை நடைபெறும் ரேஷன் கடை முகாமில் மகளிர் உரிமை தொகை பெற முடியுமா? உண்மை என்ன தெரியுமா? பொது வினியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை, மண்டல அலுவலகங்களில் நடைபெறும். இந்த முகாம்களில் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க முடியும் என்று பரவும் தகவல் உண்மை இல்லை.
சென்னையில், பொது வினியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை, மண்டல அலுவலகங்களில் நடைபெறும். இந்த முகாமில், ரேஷன் கார்டில் பெயர் திருத்தம், பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் போன்ற கோரிக்கைகள், மற்றும் பொது வினியோக கடைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களைத் தெரிவிக்கலாம். அந்த வகையில் வரும் சனிக்கிழமை முகாமில் பங்கேற்று குறைகளை தீர்க்கலாம்.

இதுபற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடும்ப அட்டைதாரர்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் சென்னையை பொறுத்தவரை மண்டல அலுவலகங்களிலும் மக்கள் குறைதீர் முகாம் பிரதி மாதமும் இரண்டாம் சனிக்கிழமை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி ஜூன் 2025 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 10.05.2025 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெற இருக்கிறது.
குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் மற்றும் அங்கீகாரச்சான்று உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் குறித்து சில தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதாவது மகளிர் உரிமை தொகை பெற நாளை நடைபெறும் முகாமில் விண்ணப்பிக்க முடியும் என்று தகவல்கள் பரவுகிறது. அது உண்மையில்லை..
அதேபோல் புதிய ரேஷன் கார்டு பெறவும் நாளை முகாமில் விண்ணப்பிக்க இயலாது. ஆன்லைனில் அல்லது நேரில் தான் ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்க முடியும். புதிய ரேஷன் கார்டு பெற தேவையான விஷயங்களை செய்து கொள்ளலாம். உதாரணமாக புதிதாக திருமணம் ஆனவர்கள், தங்கள் ரேஷன் கார்டில் பெயரை நீக்கலாம்.
திருமண சான்றிதழ் அல்லது திருமணம் நடந்ததற்கான பத்திரிக்கையை இணைத்து, ஆதாரை இணைத்து பெயரை நீக்க முடியும். அதேபோல் ஏற்கனவே உள்ள கார்டில் புதிதாக திருமணம் ஆன பெண்ணின் பெயரை சேர்க்க முடியும். அதேபோல் இறந்தவர்களின் பெயரை நீக்க முடியும். குழந்தைகளின் பெயரை சேர்க்க முடியும்" இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications