சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கிட்ட கிட்ட நெருங்கிடுச்சே பாமக.. தூண்டிலை ஆழமா போட்ட திமுக?.. அப்படின்னா விசிக.. ஆஹா "தீப்பொறி"..!

இடைத்தேர்தலில் பாமக ஏன் போட்டியிடவில்லை என்ற உறுதியற்ற தகவல் ஒன்று கசிந்து வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், அரசியல் களம் சூடாகி உள்ளது.. இதில் மற்ற கட்சிகளைவிட, திமுக கூட்டணி மும்முரத்தில் இறங்கிவிட்டது.. இப்படிப்பட்ட சூழலில், புது தகவல் ஒன்று கசிந்து வருகிறது..!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து, ஆரம்பத்தில் தன்னுடைய எந்த கருத்தையும் பாமக வெளிப்படுத்தவில்லை என்றாலும், ஆனால், டாக்டர் ராமதாஸ், இது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாக செய்திகள் கசிந்தன.

இதையடுத்து, பாமக ஆலோசனை நடத்தி, தன்னுடைய நிலைப்பாட்டையும் அறிவித்தது.. "இடைத்தேர்தல்கள் தேவையற்றவை; மக்களின் வரிப் பணத்தையும், நேரத்தையும் வீணடிப்பவை.

அதே ஈரோடு.. அதே இளங்கோவன்.. யாரது? அண்ணாமலையின் “பக்கா டைமிங்”.. அறியப்படாத அதிசய மனிதர் என வாழ்த்து அதே ஈரோடு.. அதே இளங்கோவன்.. யாரது? அண்ணாமலையின் “பக்கா டைமிங்”.. அறியப்படாத அதிசய மனிதர் என வாழ்த்து

 தைலாபுரம்

தைலாபுரம்

அதனால் தான் சட்டமன்ற உறுப்பினர் காலமானதாலோ, கட்சித் தாவியதாலோ சட்டப்பேரவை உறுப்பினர் பதவி காலியானால் அங்கு இடைத்தேர்தல் நடத்தத் தேவையில்லை, அங்கு பொதுத்தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்றதோ அதே கட்சியைச் சேர்ந்த ஒருவரை சட்டமன்ற உறுப்பினராக்கிவிடலாம்" என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு என்று கூறி, எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிப்பதில்லை என்று உயர்நிலைக்குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.. கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளுமே, தேர்தலில் போட்டியிடும் சூழலில், பாமக ஏன் களத்தில் இறங்கவில்லை என்பது குறித்த சந்தேகங்களும் அதையொட்டிய அனுமானங்களும் வட்டமடித்து வருகின்றன..

 1.43%

1.43%

இதற்கு சில காரணங்களும் அலசப்பட்டு வருகின்றன. இடைத்தேர்தல் நடக்க போகும் தொகுதியில் பாமகவுக்கு பெரிய அளவில் ஓட்டு சதவீதம் இல்லை என்கிறார்கள்.. கடந்த 2016-ல் தனித்து போட்டியிட்டபோது, 1.43 சதவீதம் ஓட்டுக்களை பெற்றுள்ளது.. எனினும் இந்த முறை எம்பி தேர்தலில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.. திமுகவுடன் கூட்டணி வைக்கவும் பாமக ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது.. ஆனால், திமுக கூட்டணியில் ஏற்கனவே நிறைய கட்சிகள் இடம்பெற்று, மெகா கூட்டணியாக திகழ்ந்து வருகிறது.. பாமக கேட்கும் தொகுதிகளை திமுக தருமா? என்பதைவிட, பாமக கூட்டணிக்குள் வருவதை அங்குள்ள விசிக உள்ளிட்ட கட்சிகளே விரும்பாத நிலையில், திமுகவும் அமைதி காத்து வருவதாக சொல்கிறார்கள்..

 வோட் ஷேரிங்

வோட் ஷேரிங்

இப்படிப்பட்ட சூழலில்தான், இன்னொரு உறுதிப்படுத்தப்படாத தகவல் வட்டமடித்து வருகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், எதிர்த்து நிற்கிற அதிமுக அணியும், மற்ற கட்சிகளும் டெபாசிட் போக வேண்டும் என்ற மேலிட திமுகவின் உத்தரவையேற்று, ஜரூர் வேலைகள் தொகுதிகள் நடந்து வருகின்றன.. மேலும், இடைத்தேர்தலில் மாஸ் வெற்றியை பெற்றாக வேண்டிய நெருக்கடியும், கட்டாயமும திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.. இந்த இடைத்தேர்தல் தொகுதியை பொறுத்தவரை, சுமார் 3 சதவீதம் வன்னியர் வாக்குகள் இருக்கின்றனவாம்.. இந்த திமுக பக்கம் திருப்பவே பாமகவை 'யாருக்கும் ஆதரவில்லை என்ற நிலைப்பாட்டை எடுக்க வைத்தார்களாம்..

 அச்சாரம்

அச்சாரம்

திமுகவில் உள்ள வன்னியர் சமூகத்து சீனியர் அமைச்சர் ஒருவர் இதன் பின்னணியில் இருப்பதாகவும் சொல்கிறார்கள். இதற்கு முன்பு நடந்த இடைத்தேர்தல்களில் பாமக போட்டியிட்டதுடன், அதிமுகவுக்கும் ஆதரவை தந்திருந்தது.. ஆனால், இந்த முறை, போட்டியிடாமல் ஒதுங்கியுள்ளதற்கு காரணமே, எம்பி தேர்தலுக்கான கூட்டணி அச்சாரம்தான் என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக இருக்கும்படி முக்கிய நிர்வாகிகளுக்கும் பாமக தரப்பில் சிக்னல் தரப்பட்டுள்ளதாம்.. ஒருவேளை, திமுக கூட்டணிக்குள் பாமக இடம்பெற்றால், விசிக என்ன நிலைப்பாடு எடுக்கும் என்று தெரியவில்லை..

திருமாவளவன்

திருமாவளவன்

"வேங்கைவயல் விவகாரம் விவகாரத்தில் இன்னும் ஒருத்தரும் கைது செய்யப்படவில்லையே? எனக்கு வருத்தமாக இருக்கிறது?" என்று திருமாவளவன் தொடர்ந்து ஆதங்கத்தை கொட்டி வரும்நிலையில், அதுதொடர்பாக போராட்டமும் செய்து, "இது தேசத்திற்கு அவமானம்" என்றெல்லாம் கொந்தளித்திருந்த நிலையில், திமுக மேலிடமும் அதை கவனிக்கவே செய்தது. இப்படிப்பட்ட சூழலில்தான், இடைத்தேர்தலில் பாமகவின் நிலைப்பாடும், அதையொட்டி சொல்லப்படும் உறுதிப்படுத்தப்படாத காரணமும், சலசலப்பையும், பரபரப்பையும் கிளப்பி விட்டு வருகின்றன.

 பாலு நறுக்

பாலு நறுக்

கடந்த வாரம் பாமக வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களுக்கு பேட்டி தந்திருந்தார்.. அந்த பேட்டியில், "2021-ம் ஆண்டு நடந்த 9 மாவட்டங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என முடிவெடுத்திருந்தோம். அந்த நிலைப்பாடு இப்போதும் தொடர்கிறது. அதிமுகவுடன் பாமக கூட்டணியில் இருப்பதாக சொல்வது அறியாமையால் ஏற்படும் சந்தேகம்.. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை..பாமகவுக்கு இடம் ஒதுக்கியது கூட்டணி தலைவர்களின் முடிவாக இருக்கும்போது, அதுகுறித்து பேச ஜெயக்குமார் யார்? நுனி மரத்தில் அமர்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுவது போல ஜெயக்குமார் பேசி இருக்கிறார்" என்று விமர்சித்திருந்ததுடன், அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதையும் தெளிவுபடுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது..

English summary
Can PMK form an alliance with DMK in MP election and what will VCK do the next
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X