சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

1..2..3.. "மாஸ்டர்" எடப்பாடி.. "விட முடியாதுங்க".. ஒரே செகண்டில் நொறுங்கிய ஓபிஎஸ் கணக்கு..செம பிளான்

ஓபிஎஸ் டீமுக்கு எடப்பாடி பழனிசாமி வருவதற்கு சாத்தியமே இல்லை என்கிறார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் அறைகூவல் விடுத்துள்ள நிலையில், அதை நிராகரித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி... அதிலும் அந்த அழைப்பை கிண்டல் செய்து நிராகரித்துள்ளார்.. அப்படியானால் இதன் நோக்கம் என்ன? எடப்பாடி என்ன பிளானில் இருக்கிறார்?

Recommended Video

    DMK-வுடன் இணைந்து செயல்பட்ட OPS உடன் இணைந்து செயல்பட முடியாது - EPS அறிவிப்பு

    பொதுக்குழு குறித்து நேற்றைய தினம் நீதிமன்றம் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவான தீர்ப்பை தெரிவித்துள்ளது.. இது எடப்பாடிக்கு பின்னடைவாகவும் பார்க்கப்பட்டு வருகிறது.

    அதனால் அப்பீலுக்கு சென்றுள்ளார் எடப்பாடி பழனிசாமி.. எனினும், நேற்றைய தினம் தீர்ப்பு வந்ததில் இருந்தே, ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமியை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளார்.. வெளிப்படையாகவே அழைப்பும் விடுத்துள்ளார்.

    சரி போறேன்! கிளம்பிய எடப்பாடி! திமுக பற்றி கேட்டதும் பட்டென திரும்பி சரமாரி அட்டாக்.. என்ன சொன்னார்?சரி போறேன்! கிளம்பிய எடப்பாடி! திமுக பற்றி கேட்டதும் பட்டென திரும்பி சரமாரி அட்டாக்.. என்ன சொன்னார்?

    சூறையாடியவர்

    சூறையாடியவர்

    கடந்தவை கடந்தவையாகவே இருக்கட்டும் ,நடப்பவை நல்லவையாக இருக்க வேண்டும் எனக் கூறிய ஓபிஎஸ் அன்பு சகோதர் எடப்பாடி பழனிசாமி நானும் இணைந்து சிறப்பாக அதிமுகவை சிறப்பாக வழிநடத்தினோம்.ஆகவே மீண்டும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வருமாறு எடப்படி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார்.. எனினும் இந்த அழைப்பை உடனடியாகவே மறுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி..

     கெத்து + மாஸ்

    கெத்து + மாஸ்

    இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, சிலர் அதிமுகவை தங்கள் வசம் கொண்டுபோக நினைக்கின்றனர்.. ஓபிஎஸ்ஸுக்கு பதவிதான் முக்கியம்.. உழைக்காமல் ஓபிஎஸ் பதவி வேண்டு மஎன்கிறார்.. ரவுடிகளோடு சென்று அதிமுக அலுவலகத்தை ஓபிஎஸ் சேதப்படுத்தினார்.. அலுவலகத்தை சூறையாடியவர்களோடு எப்படி இணைய முடியும்? ஓபிஎஸ்ஆல்தான் அதிமுக ஆட்சி பறிபோனது.. பதவிக்காக ஓபிஎஸ் எதையும் செய்ய துணிவார் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்கு என்ன காரணம்?

     பாயிண்ட் + 1

    பாயிண்ட் + 1

    முதலாவதாக, எடப்பாடியிடம் உள்ள 90 சதவீத மெஜாரிட்டிதான் முக்கிய காரணம்.. ஓபிஎஸ் கடைசி வரை நம்பியது நீதிமன்றத்தையும், மேலிடத்தையும்தான் என்றாலும், எடப்பாடி மக்களை நம்பினார்.. தன் தொண்டர்களை நம்பினார்.. தன் ஆதரவாளர்களை நம்பினார்.. இது ஏதோ திடீரென அவருக்கு கிடைத்த ஆதரவு இல்லை.. கடந்த ஒரு வருடமாகவே இதற்கான களப்பணியில் எடப்பாடி ஈடுபட்டு வந்தார். தனக்கு எதிரானவர்கள் என்றாலும் அவர்களிடம் பேச்சு நடத்தினார்.. அதனால்தான், ஓபிஎஸ்ஸின் தென்மண்டலங்களில்கூட எடப்பாடியால், முக்கிய ஆதரவாளர்களை பெற முடிந்தது. அந்தவகையில் எடப்பாடியிடம் உள்ள, ஆதரவாளர்கள் + நிர்வாகிகள் ஆதரவே அவரது ஆகச்சிறந்த முதல் பலமாக உள்ளது.

     பாயிண்ட் + 2

    பாயிண்ட் + 2

    இரண்டாவது காரணம், ஓபிஎஸ்ஸிடம் இணைய வேண்டிய கட்டாயமோ, நெருக்கடியோ, அவசியமோ எடப்பாடிக்கு இல்லை.. ஏற்கனவே பலவித அதிருப்திகளில் எடப்பாடி உள்ளார்.. அதிலும், பொதுக்குழு அன்று நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், அதிமுக ஆபீசில் ஓபிஎஸ் நடந்து கொண்ட முறையை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை.. சட்டப்படி அனைத்தையும் செய்து வரும் நிலையில், திடீரென வன்முறையில் இறங்கி, டாக்குமெண்ட்களை அள்ளிக் கொண்டு போனது, எடப்பாடியே எதிர்பார்க்காத ஷாக் ஆகும்.. நீதிமன்றத்தை மதிப்பவர் என்று சொல்லிக் கொள்ளும் ஓபிஎஸ் இப்படி செய்துவிட்டாரே என்ற கோபம் இன்றுவரை தணியவில்லை என்பதே இன்றைய எடப்பாடி பேச்சில் அறிய முடிகிறது.

     பாயிண்ட் + 3

    பாயிண்ட் + 3

    மூன்றாவதாக, பொதுக்குழு செல்வாக்கு எடப்பாடியிடம்தான் உள்ளது.. அதனால், எடப்பாடி ஓபிஎஸ்சுடன் இணைய வாய்ப்பே இல்லை.. கோர்ட்டும் பொதுக்குழுவில் ஓபிஎஸ் பங்கேற்க வேண்டும் எனக் கூறியுள்ளது.. அதாவது, புதிதாக கூட்டப்படும் அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ் பங்கேற்க மறுத்தால், எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தை நாடலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது, எடப்பாடிக்கே பிளஸ் ஆக உள்ளது.. எப்படியும் ஓபிஎஸ், எடப்பாடியை நாடிச் செல்ல வாய்ப்பில்லை என்கிறார்கள்.. இல்லாவிட்டால், எடப்பாடிக்கு இப்போதுவரை அழைப்பு விடுத்துக் கொண்டிருக்க மாட்டாரே.. அந்தவகையில், எடப்பாடியும் ஓபிஎஸ்ஸை தேடி செல்ல வேண்டிய நிலைமையில் இல்லை.

     பாயிண்ட் + 4

    பாயிண்ட் + 4

    நான்காவதாக, கட்சிக்குள் 2ம் கட்ட தலைவர்கள் யாரும் ஓபிஎஸ் செல்வதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை... காரணம், 23ம் தேதி பொதுக்குழு கூட்டத்திற்கு முன்பேயே, ஒற்றை தலைமையை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயாராகிவிட்டார்கள்... ஒருவேளை, அந்த பொதுக்குழு கூட்டத்தில் யாராவது, ஓபிஎஸ் 2வது தலைமையாக இருந்து விட்டு போகட்டும் என்று கருத்து கூறியிருந்தால், அன்று எடப்பாடி கேட்டு இருக்க வாய்ப்பு இருந்து இருக்கலாம். .. ஆனால், இப்போது கைமீறி போய்விட்டது.. ஆதவாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பலம் போதுமான அளவுக்கு இல்லாமல் போட்டி பொதுக்குழுவை கூட்ட இத்தனை நாளும் இழுத்தடித்துக் கொண்டே வந்ததும் ஓபிஎஸ் பலவீனமாக பார்க்கப்படுகிறது.

    ராஜ்சத்யன்

    ராஜ்சத்யன்

    இதைதான் நேற்று, எடப்பாடி ஆதரவாளர் ராஜன் செல்லப்பாவின் மகனும், அதிமுகவின் மதுரை மண்டல ஐடி விங் செயலாளருமான ராஜ் சத்யன் ட்வீட் போட்டு ஒரு கேள்வியை கேட்டிருந்தார்.. "மொத்தமுள்ள 2663 பொதுக்குழு உறுப்பினர்களின் 2532 உறுப்பினர்களால் அண்ணன் எடப்பாடியாரின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒன்னரை கோடி தொண்டர்களுக்கான ஒருமித்த குரலாய் ஒலித்து வருகிறார், தேவைப்பட்டால் 15 நாட்களில் அல்ல, நாளையே பொதுக்குழுவை கூட்ட எங்களால் முடியும், உங்களால் முடியுமா என்று கேட்ட கேள்விக்கு ஓபிஎஸ் தரப்பிடமிருந்து இப்போது வரை பதில் இல்லை.

     + பாயிண்ட்கள்

    + பாயிண்ட்கள்

    ஆக மொத்தம் இந்த தலைவர்கள் ஒன்றிணைய மாட்டார்கள் என்றே தெரிகிறது.. நீதிமன்றமும், தன்னுடைய தீர்ப்பை இப்போதைக்கு முடிவுக்கு கொண்டு வராது என்றும் தெரிகிறது.. இந்த வழக்கு இப்படியே இழுத்துக் கொண்டு போகும் என்றும் அரசியல் நோக்கர்கள் ஏற்கனவே சொல்லி வருகிறார்கள்.. இப்படியே இந்த நிலைமை நீடித்தால், 2024ம் ஆண்டு நடக்கும் எம்பி தேர்தலில், அதிமுக கட்சி தொடர்பாக அனைத்து முடிவுகளும் பாஜக எடுக்கும் நிலை உருவாகிவிடும் என்பதையும் நம்மால் இங்கு சொல்லாமல் இருக்க முடியவில்லை..

    English summary
    Can't Edappadi Palanisamy accept the request of OPS and What are the strengths of Edappadi Palaniswami ஓபிஎஸ் டீமுக்கு எடப்பாடி பழனிசாமி வருவதற்கு சாத்தியமே இல்லை என்கிறார்கள்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X