அண்ணாமலை அன்னைக்கே அப்படி சவால் வேற விட்டாரே? ஆனால் திமுக விடாது போலயே? பிளேட் திரும்புதே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் மிகுந்த பரபரப்புகள், அதிமுகவில் நிலவி கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.. இத்தனை எதிர்பார்ப்புகளையும் எடப்பாடி முறியடித்து வருவாரா? என்ற ஆர்வமும் எகிறி வருகிறது.

சிறுபான்மை ஓட்டுக்களுக்கு குறி வைத்தே, பாஜகவை இந்த முறை கூட்டணியிலிருந்து கழட்டிவிட்டு, களம் கண்டார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. திமுகவுக்கு வலுவாக இருக்கும் சிறுபான்மை ஓட்டுக்களை, எதிர்பார்த்த அளவுக்கு அதிமுக பக்கம் எடப்பாடி கொண்டு செல்வாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவியபடியே உள்ளது.

Can Tamil Nadu BJP Overtake AIADMK and Will Edappadi Palanisamy overcome the challenge of Annamalai What is DMK going to do

அண்ணாமலை: அதேபோல, கோவையில் அண்ணாமலை, தேனியில் டிடிவி தினகரன், ராமநாதபுரத்தில் ஓபிஎஸ், 2வது இடத்துக்கு வரவே கூடாது என்று அதிமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தாராம் எடப்பாடி பழனிசாமி..

ஆனால், அதிமுக நிச்சயமாக 3வது இடத்தையே பிடிக்கும், பல இடங்களில் டெபாசிட் பறிபோகவும் வாய்ப்புள்ளதாகவும் பாஜக கூட்டணிகள் கூறி, அதிமுகவை சீண்டி கொண்டிருக்கின்றன. எனவே, கோவை, தேனி, ராமநாதபுரத்தில் அதிமுகவுக்கான வாக்கு வங்கி எப்படியிருக்க போகின்றன என்று அடுத்த எதிர்பார்ப்பு நிலவியபடியே உள்ளது.

எடப்பாடி பழனிசாமி: எம்பி தேர்தலைவிட, சட்டமன்ற தேர்தலையே எடப்பாடி பழனிசாமி பிரதானமாக எதிர்நோக்கியிருப்பதாக செய்திகள் கசிந்தன.. அப்படியிருக்கும்போது, அதிமுக அணியில் ஏற்கனவேயிருந்த பாமக, ஜிகே வாசன், ஜான்பாண்டியன், சரத்குமார் போன்றோரையும் தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டு, எடப்பாடிக்கு ஷாக் தந்தது பாஜக.. இதே கூட்டணி சட்டமன்ற தேர்தலிலும் தொடருமானால், இது அதிமுகவுக்கு மேலும் சறுக்கலை தந்துவிடும் என்கிறார்கள்..

எனவே, இனி அமைய போகும் கூட்டணியையாவது, வலுவாக அமைத்தால்மட்டுமே, அதிமுகவுக்கான எதிர்காலம் வலுவாக இருக்கும் என்பதால், இதற்கான எதிர்பார்ப்பும் நிலவியபடியே உள்ளது.

கொங்கு மண்டலம்: தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொஞ்சம் சேதாரம் ஏற்பட்டிருந்தாலும் கூட அதிமுகவின் கட்டமைப்பு அப்படியே இருப்பதை பாஜக உணர்ந்தது. உதாரணத்துக்கு, பாஜக வலுவாக இருக்கும் என நம்பிய கொங்கு மண்டலத்திலேயே அதிமுக பெரும் ஆதிக்கம் செலுத்துவதை கண்டுகொண்டனர்.

அதேபோல வடமாவட்டங்கள், தென்மாவட்டங்கள் என எல்லா பக்கமும் அதிமுக, இரட்டை இலைக்கான செல்வாக்கு இன்னும் குறையவில்லை என பாஜக தெரிந்துகொண்டது.

அதிமுக ஆட்டம்: ஆனால், பாஜகவோ இப்போதே சுதாரித்து கொண்டுவிட்டது.. வரப்போகும் சட்டசபை தேர்தலுக்கான வேலையை தற்போதே துவங்கியிருக்கிறது.. நடந்து முடிந்த தேர்தலின்போது, அதிமுக கட்டமைப்பு "பலமாக" இருப்பதை உணர்ந்து கொண்ட பாஜக, அதிமுகவை ஆட்டம் காணவைக்க இப்போதே வியூகங்களை கையில் எடுத்து வருகிறது..

அந்தவகையில் கட்சியின் சின்னத்தை முடக்க வேண்டும் என்பதுவரை இப்போதே காய்நகர்த்த துவங்கிவிட்டதாம். அதிகார பாஜக விஸ்வரூபமெடுக்கும்பட்சத்தில், அதனை எப்படி எடப்பாடி சமாளிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பும் நிலவியபடியே உள்ளது..

எப்போதுமே தென்மாவட்டங்களில் அதிமுகவுக்கு பலம் குறைவுதான் என்றாலும், மேற்கு, மத்திய, வட மாவட்டங்களில், திமுகவுக்கே டஃப் கொடுக்கும்வகையில் இந்த முறை ரிசல்ட் இருக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. அதாவது, 25-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு கடும் போட்டியை உருவாக்கியிருக்கிறதாம் அதிமுக கூட்டணி. அந்தவகையில், அதிமுகவுக்கு செக் வைக்க திமுக தரப்பும் இப்போதே மும்முரமாகி வருகிறதாம்.

திமுக செக்: குறிப்பாக லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை, நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச் என திமுகவும், நெருக்கடிகளை தர நேர்ந்தால், இதனை எடப்பாடி எப்படி எதிர்கொள்ள போகிறார் என்ற எதிர்பார்ப்பும் நிலவியபடியே உள்ளது.

இத்தனை எதிர்பார்ப்புகளையும் எடப்பாடி முறியடிப்பாரா? ஏற்கனவே, ஒதுக்கப்பட்ட பணத்தை, தொகுதிகளில் சரியாக பகிர்ந்தளிக்கவில்லை என்று பல மாவட்ட செயலாளர்கள், மூத்த நிர்வாகிகள் மீது புகார்கள் கிளம்பி உள்ளன.. உட்கட்சியினரே இந்த முறை அதிகமாக சொதப்பிவிட்டார்களாம்..

குளறுபடிகள்: ஏராளமான குளறுபடி நடந்திருப்பதாக வேட்பாளர் தரப்புகளில் சந்தேகம் எழுந்து வருகிறதாம்.. சில இடங்களில் திமுகவுக்கு ஆதரவாகவும் அதிமுக நிர்வாகிகள் செயல்பட்டார்களாம்.. எனவே, தேர்தல் முடிவுகள் எப்படியிருக்க போகிறதோ என்று எடப்பாடி தரப்பு கலங்கி போயிருக்கிறதாம்.

இதற்குநடுவில், பாஜக + ஓபிஎஸ் + டிடிவி தினகரன் + சசிகலா என மொத்த பேரும் கைகோர்த்துள்ளதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.. ஆக, இனி வரும் நாட்களில் எடப்பாடி பழனிசாமிக்கு நிறைய சவால்கள் காத்திருப்பதாகவே தெரிகிறது.

அண்ணாமலை: அதுமட்டுமல்ல, "தேர்தலுக்குப் பின் அதிமுகவே இருக்காது" என்று அண்ணாமலை சவால் விட்டதுடன், ஓபிஎஸ், தினகரன் பக்கம் அதிமுக வரும் என்றும் கூறியிருப்பதை இங்கு நாம் நினைவுகூர வேண்டியிருக்கிறது.. முதலில் ரிசல்ட் வரட்டும்.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+