சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஏழைகளுக்கு வரப்பிரசாதம்.. மரக்காளானில் இருந்து புற்றுநோய்க்கு மருந்து.. பேராசிரியர் சாதனை

Google Oneindia Tamil News

Recommended Video

    மரக்காளானில் இருந்து புற்றுநோய்க்கு மருந்து.. பேராசிரியர் சாதனை

    சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் ஒருவர், புற்றுநோயை கட்டுப்படுத்தும் மருந்தை கண்டுபிடித்துள்ளார். இந்த பேராசிரியரின் பெயர் கவியரசன்

    இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள பேராசிரியர் கவியரசன், மரக்காளான் எனப்படும் ஒருவகை காளான்களில் இருந்து புற்றுநோயை கட்டுப்படுத்தும் மருந்தை தயாரித்துள்ளதாக கூறியுள்ளார்.

    cancer drug from the wood Mushroom.. madras university Professors achievement

    மரக்காளான்களின் மூலம் தாம் தயாரித்துள்ள மருந்தானது புற்றுநோயை 80 சதவீதம் வரை கட்டுப்படுத்தும் என்றார். 600-க்கும் மேற்பட்ட காளான்களை ஆய்வு செய்து இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளதாக கவியரசன் கூறியுள்ளார்,

    தாம் கண்டறிந்த மருந்திற்கு மத்திய அரசு வழங்கும் காப்புரிமையை பெற்றிருப்பதாகவும் கூறியுள்ளார் கவியரசன். புற்றுநோய் பாதிக்கப்பட்ட செல்களை தமது ஆய்விற்கு உட்படுத்தியதாக கூறினார்.

    அப்போது நடத்தப்பட்ட ஆய்வில் மார்பக புற்றுநோய் உட்பட சில குறிப்பிட்ட புற்றுநோய் வகைகளை சுமார் 75 முதல் 80 சதவீதம் வரை தாங்கள் கண்டறிந்த மருந்து கட்டுப்படுத்தியதாக கூறினார்.

    விலை மலிவானது என்பதால் ஏழைகளும் வாங்கி பயன்படுத்தும் வகையில் இதன் விலை இருக்கும் என்றார் பேராசிரியர் கவியரசன். அத்துடன் மத்திய அரசுக்கு அதிக வருமானம் ஈட்டி தரும் அம்சமாகவும் இந்த மருந்து இருக்கும் என பேராசிரியர் கவியரசன் கூறியுள்ளார்.

    English summary
    A professor at the University of Chennai has found a medication that controls cancer. This professor's name is the kaviarasan
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X