அக்கப்போருக்கு ஒரு அளவில்லையா.. மதுரைக்காரரால் தெறித்து ஓடும் தேமுதிக நிர்வாகிகள்! பின்னணி என்ன?
சென்னை: தேமுதிகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகிச் செல்வதற்கு காரணம் மதுரைக்காரர் என கைகாட்டுகிறார்கள் கேப்டனின் ரசிகர்கள்.
தலைமையிடம் தனக்கு மிகுந்த செல்வாக்கு உள்ளதாக கூறி கட்சிக்காரர்களை கசக்கி பிழிவதால் தான் தேமுதிக நிர்வாகிகள் மாற்றுக் கட்சிகளை தேடிச் செல்கிறார்களாம்.
அண்மையில் பனப்பட்டி தினகரன் கட்சியிலிருந்து விலகிய அதிர்ச்சியிருந்து மீளாத தேமுதிக தலைமை, இனி அடுத்தடுத்து நிர்வாகிகள் பறந்துவிடாமல் கூண்டு போட்டு வருகிறதாம்.

தேமுதிக
ஒரு காலத்தில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக அசுர வேகத்தில் வளர்ந்து வந்த தேமுதிக இன்று இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வருகிறது. இதற்கு காரணம் அக்கட்சியின் முக்கிய முன்னணி நிர்வாகிகள் பலர் மாற்றுக் கட்சிகளுக்கு பறந்து சென்றதே. இதனிடையே இருக்கும் நிர்வாகிகளையாவது தலைமை அணுசரித்து கொண்டு செல்லும் எனப் பார்த்தால் மதுரைக்காரர் ஒருவரின் அக்கப்போருக்கு அளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

மதுரைக்காரர்
தலைமையிடம் தனக்கு மிகுந்த செல்வாக்கு உள்ளதாக கூறி கட்சிக்காரர்களை மதுரைக்காரர் கசக்கி பிழிவதால் தென் மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் பலர் வரிசையாக ஜூட் விட ஆயத்தமாகிவிட்டார்கள். நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளதால் தேமுதிக நிர்வாகிகளுக்கு தேசியக் கட்சி ஒன்றும் மாநிலக் கட்சி ஒன்றும் ஆஃபர்களை அள்ளித் தர தயாராக இருக்கிறதாம். இதனால் நிர்வாகிகளை தக்க வைக்க தேமுதிக தலைமை போராடி வருகிறதாம்.

சம்பாதிக்க வழியில்லை
தேமுதிகவில் மாவட்டச் செயலாளராக இருக்கும் பலரும் சம்பாதிக்க வழியில்லாமல் தவித்து வரும் நிலையிலும், மதுரைக்காரர் கொஞ்சம் கூட தயங்குவதில்லையாம். உடல் நலிவடைந்து விஜயகாந்த் வீட்டில் ஓய்வெடுத்து வரும் சூழலில், கட்சியும் நலிவடைந்து வருவது கேப்டனின் உண்மையான ரசிகர்களை கலங்க வைத்துள்ளது. தேமுதிக மீண்டும் அரசியல் வானில் பறக்க வேண்டும் என்றால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிக்கூட்டணியில் இணைந்தால் மட்டுமே சாத்தியம் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்போது பதவி?
இதனிடையே விஜயபிரபாகரனுக்கு தேமுதிகவில் எப்போது புரோமோஷன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது. இதேபோல் பிரேமலதா விஜயகந்துக்கும் தேமுதிகவில் செயல் தலைவர் பதவி எப்போது கிடைக்கும் என்ற விவாதம் நடந்து வருகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications