மீண்டும் ரெய்டு!2015 முதல் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை துரத்தும் சிபிஐ, ஐடி, அமலாக்கப் பிரிவு!
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகனும் லோக்சபா எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் ஆகியோரது வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2015-ம் ஆண்டு முதல் மத்திய அரசின் விசாரணை நிறுவனங்கள் 6-வது முறையாக ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்துகின்றன.
Recommended Video
காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீதான ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு. இந்த வழக்கின் பூர்வோத்திரம் சுமார் 15 ஆண்டுகளுக்கு முந்தையது. அதாவது 2007-ம் ஆண்டு ப.சிதம்பரம், மத்திய நிதி அமைச்சராக இருந்தார்.

வழக்கு என்ன?
ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த காலத்தில் மொரீஷியஸின் மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம் குளோபல் கம்யூனிகேஷன் சர்வீசஸ் ஹோல்டிங் லிமிட்டட், இந்தியாவின் ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் முதலீடு செய்ய வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்தது. நிதி அமைச்சரால் ரூ600 கோடி வரை வெளிநாட்டு முதலீட்டை அனுமதிக்க முடியும்; ஆனால் ரூ3,200 கோடி வெளிநாட்டு முதலீட்டுக்கு சிதம்பரம் அனுமதி அளித்தார்; இதில் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் ஆதாயம் அடைந்தது என்பது வழக்கு. அன்று தொடங்கிய வழக்கு இன்றளவும் நீடித்து கொண்டே இருக்கிறது.

சிபிஐ ரெய்டு
2017-ம் ஆண்டு மே 16-ந் தேதி ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான 14 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். முன்னதாக 2015-ல் 2 முறை சோதனைகள் நடைபெற்றன. சென்னை, டெல்லி, குருகிராம், மும்பை என பல இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. சிபிஐ தொடர்ந்து அமலாக்கப் பிரிவினரும் அன்னிய செலாவணி மோசடி வழக்கு தொடர்ந்தனர்.

கார்த்தி சிதம்பரம் கைது
2018-ம் ஆண்டு ப.சிதம்பரத்தின் சென்னை, டெல்லி வீடுகளில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் 2018-ல்தான் இவ்வழக்கில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யபப்ட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் கார்த்தி சிதம்பரம் விடுவிக்கப்பட்டார். மேலும் இவ்வழக்குகளில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.

மீண்டும் ரெய்டு
2019: சிபிஐ அதிகாரிகள் மீண்டும் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தினர். சென்னை, சிவகங்கை உட்பட 14 இடங்களில் இந்த சோதனை நடந்தது. 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ந் தேதி ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டார். சில மாதங்கள் சிறைவாசத்துக்குப் பின்னர் ப.சிதம்பரம் ஜாமீனில் விடுதலையானார்.

சிபிஐ புதிய வழக்கு
இவ்வழக்கு விசாரணை இன்னும் தொடர்ந்து நடைபெறும் நிலையில் தற்போது 6-வது முறையாக ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தி உள்ளது. ஆனால் இம்முறை சிபிஐ புதிய வழக்கைப் பதிவு செய்திருக்கிறது.2010-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 250 சீன நாட்டவர்கள் இந்தியாவுக்கு வருகை தந்தனர். இவர்கள் இந்தியாவில் பணிசெய்வதற்கு சட்டவிரோதமாக விசா பெற்றுத் தந்தார் கார்த்தி சிதம்பரம்; இதற்காக ரூ50 லட்சம் லஞ்சம் பெற்றார் என புதிய வழக்கு பதிவு செய்துள்ளது சிபிஐ. இந்த வழக்கில்தான் இன்று சிபிஐ சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் சோதனைகள் நடத்தியது. பஞ்சாப்பில் சீனர்கள் பணி செய்வதற்காக சட்டவிரோதமாக விசாக்களை கார்த்தி சிதம்பரம் பெற்று தந்தார் என்கிறது இந்த வழக்கு
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications