CBSE 10ம் வகுப்பு மாணவர்கள் பாஸ் செய்வது இனி கஷ்டம்! மாறும் ரூல்ஸ்.. இவ்வளவு எடுத்தால்தான் தேர்ச்சி!
சென்னை: சிபிஎஸ்இ மாணவர்கள் அடுத்த ஆண்டு முதல் எழுதும் பொதுத் தேர்வில், தேர்ச்சி பெறுவதற்கான அடிப்படை மார்க்குகளில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்பு 33 மார்க் எடுத்தால் தேர்ச்சி என்று நிலை இருந்தது. அதாவது மொத்தமுள்ள 100 மார்க்குகளில், 80 மார்க்குகளுக்கு எழுத்து தேர்வும், 20 மார்க் அகமதிப்பீட்டு (internal) முறையிலும் வழங்கப்படும். ஆனால், இந்த பழைய கணக்கீட்டு முறை தற்போது மாற்றப்பட்டிருக்கிறது.

பழைய முறை என்ன?
பழைய முறைப்படி, எழுத்து தேர்வு மற்றும் அகமதிப்பீடு என இரண்டும் சேர்த்து 33 மதிப்பெண்கள் எடுத்தால் போதுமானது. அதாவது எழுத்து தேர்வில் 13 மதிப்பெண்கள் மட்டும் எடுக்கிறீர்கள் எனில், அகமதிப்பீடு முறையில் 20 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது எனில், மொத்தம் சேர்த்து 33 மதிப்பெண்கள் வரும். எனவே தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு வெளியாகும். ஆனால், இந்த முறையில் மாணவர்களின் கற்றல் திறன் போதுமான அளவில் வளரவில்லை என்று சொல்லப்படுகிறது.
புதிய முறை
இதற்கு மாற்றாக தற்போது புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி இனி மாணவர்கள் இரண்டிலும் 33 மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். அதாவது எழுத்து தேர்வில் மாணவர்கள் குறைந்தது 26.4 மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும். அதேபோல, அகமதிப்பீட்டில் 20 மதிப்பெண்களுக்கு குறைந்தது 6.6 மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும். இரண்டில் எது குறைந்தாலும் அந்த மாணவர் தோல்வியடைந்ததாகவே கருதப்படுவார். ஒருவேளை எழுத்து தேர்வில் 20 மதிப்பெண்கள் பெற்று, அகமதிப்பீட்டில் 15 மதிப்பெண்களை பெற்றாலும் அவர் தோல்வியடைந்தவராகவே கருதப்படுவார்.
ஏன் இந்த மாற்றம்?
மேலே குறிப்பிட்டதை போல, முன்பெல்லாம் மாணவர்கள் எழுத்து தேர்வில் வெறும் 18 மதிப்பெண்களை பெற்றுவிட்டு, அகமதிப்பீட்டு முறையில் 15 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சியடைந்துவிடுகிறார்கள். இது அவர்களின் எழுத்து தேர்வு திறனை பாதிக்கிறது. 100க்கு 33 மதிப்பெண்கள் என்பதே மிக குறைவான மதிப்பெண். அதைகூட பெற முடியவில்லை எனில் எப்படி? வெறும் 18 மதிப்பெண்களை பெற்றவர்களை தேர்ச்சியாளர்கள் என எப்படி கணக்கில் கொள்வது? என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
இரண்டு முறை பொதுத்தேர்வு
எனவேதான் இந்த புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இந்த மாற்றம் அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும். அதாவது 2027ம் ஆண்டு ரிசல்ட் இந்த முறைப்படிதான் இருக்கும். அதேபோல, ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு தேர்வுகளில் எந்த தேர்வில் மதிப்பெண் அதிகமோ? அதை மாணவர்கள் தக்க வைத்துக்கொள்ளலாம். மேலும் இனி, டாப் 3 மார்க் எடுத்த மாணவர்கள் என்பது போன்ற பட்டியல் வெளியிடப்படாது என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications