சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

CBSE Exams : சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது? வெளியானது அட்டவணை.. முழு விபரம்!

Google Oneindia Tamil News

சென்னை : சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2023 பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி மார்ச் 21ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2023 பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி மார்ச் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான 2023ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்வு நடைபெறும் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக, சிபிஎஸ்இ 10 மற்றும் 1ஆ2ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் ஜனவரி 2ஆம் தேதி தொடங்கும் என்று சிபிஎஸ்இ அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தேசிய கல்வி கொள்கையில் இணையும் புதுச்சேரி..சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு மாற கல்வித்துறை உத்தரவு தேசிய கல்வி கொள்கையில் இணையும் புதுச்சேரி..சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு மாற கல்வித்துறை உத்தரவு

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாக பொதுத் தேர்வுகள் இரண்டு கட்டமாக நடத்தப்பட்டன. இந்நிலையில், தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் ஒரே கட்டமாக நடத்தப்பட உள்ளது. சிபிஎஸ்இ 10 மற்றும் 1ஆ2ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ தேர்வு அட்டவணை

சிபிஎஸ்இ தேர்வு அட்டவணை

2022-2023ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு மாணவ மாணவிகளிடம் நிலவி வந்தது. இந்நிலையில், தேர்வு அட்டவணை குறித்த அறிவிப்பு சிபிஎஸ்இ தேர்வாணையத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புகளுக்கான தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி மார்ச் 21 அன்று முடிவடையும். அதேபோல், 12ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 12ஆம் தேதி முடிவடைகிறது.

நேரம்

நேரம்

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஓவியம், ராய், குருங், தமாங், ஷெர்பா மற்றும் தாய் தாள்களுடன் தொடங்கி, கணித அடிப்படைத் தாள்களுடன் முடிவடையும். அதேபோல், சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொழில்முனைவோர் தாளில் தொடங்கி உளவியல் தாளுடன் முடிவடைகிறது. இந்த தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்முறைத் தேர்வுகள்

செய்முறைத் தேர்வுகள்

முன்னதாக, செய்முறைத் தேர்வுகள் ஜனவரி 2ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது. அதன்படி 2023 ஜனவரி 2ஆம் தேதி முதல் 14ஆம் தேதிக்குள் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்றும், அதே தேதிகளில் மாணவர்களுக்கான செயல்திட்டங்கள், அகமதிப்பீடுகள், ஆகியவற்றுக்கான மதிப்பெண்களையும் பள்ளிகள் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது.

முழு விவரம்

முழு விவரம்

செய்முறைத் தேர்வுகள் தொடர்பான தேதிகளை cbse.gov.in, cbse.nic.in ஆகிய இணையதளங்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்தது. சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் மே மாத இறுதியில் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு தேதிகள் குறித்த அறிவிப்பை cbse.nic.in என்ற இணையதளத்தில் முழுமையாக பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

English summary
CBSE exam date sheet released today. CBSE class 10 exams will begin on February 15 and will end on March 21, 2023. The Class 12 examination will begin on February 15 and will end on April 5, 2023. The examinations will begin at 10.30 AM and will end at 1.30 PM.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X