சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"டைம் ஓவர்".. ஸ்கூல் பஸ்களில் சிசிடிவி அமைக்க அவகாசம் தேவை.. செக் வைக்கும் மெட்ரிக் பள்ளிகள் சங்கம்

தனியார் பள்ளியின் ஸ்கூல் வாகனங்களில், சிசிடிவி கேமராவை பொறுத்த நாளையுடன் கெடு முடிகிறது

Google Oneindia Tamil News

சென்னை: தனியார் பள்ளியின் ஸ்கூல் வாகனங்களில், சிசிடிவி கேமராவை பொறுத்த விதிக்கப்பட்டிருந்த காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது.. இந்நிலையில், கண்காணிப்பு கேமரா பொருத்த காலஅவகாசம் வேண்டும் என்றும் அப்படி தராவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.

தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை, பள்ளி வாகனங்களில் அந்தந்த நிர்வாகமே அழைத்து சென்று, மறுபடியும் வீடுகளுக்கு கொண்டு சென்று விடுகிறது...

ஆனால், 2012-ல் பல்லாவரம் மாணவி ஸ்ருதி, பள்ளி வேன் ஓட்டையில் இருந்து விழுந்ததில் இருந்தே, பல்வேறு விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன..

கள்ளக்குறிச்சி பள்ளி கலவர வழக்கு: கைது செய்யப்பட்டவர் மீது குண்டர் சட்டம்.. ஹைகோர்ட் புதிய உத்தரவு கள்ளக்குறிச்சி பள்ளி கலவர வழக்கு: கைது செய்யப்பட்டவர் மீது குண்டர் சட்டம்.. ஹைகோர்ட் புதிய உத்தரவு

 கை, கால்கள்

கை, கால்கள்

பள்ளிகளில் கடந்த காலங்களில் நடந்த விபத்துக்கள், அந்த விபத்துகளிலிருந்து கற்ற படிப்பினைகள் மூலம், அந்த வழிகாட்டு முறைகளை பள்ளிக்கல்வித்துறையும் ஏற்கனவே வெளியிட்டிருக்கிறது.. குறிப்பாக, வாகனங்களில் கதவு திறந்தே இருக்க வேண்டும், குழந்தைகள் வெளியே கை, தலைகளை நீட்டாமல் இருப்பதற்கு கம்பிகள் பொருத்தியிருக்க வேண்டும், வாகனத்தில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தியிருக்க வேண்டும், ரிவெர்ஸ் கேமரா கண்டிப்பாக பொருத்தியிருக்க வேண்டும், என்பது உட்பட பல்வேறு வழிகாட்டு நெறிகள் உள்ளன..

 வாகனம்

வாகனம்

இந்த பள்ளி வாகனங்களின் தரம் குறித்து மாவட்ட கல்வி அலுவலர்களும், மோட்டார் வாகன ஆய்வாளர்களும் அடிக்கடி ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, பள்ளி வாகனங்களின் முன்பக்கமும், பின்பக்கமும் தலா ஒரு சிசிடிவி கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும் என்றும், பின்புறம் எச்சரிக்கை சென்சார் கருவியை பொருத்த வேண்டும் எனவும் சில நாட்களுக்கு முன்பு அறிவுறுத்தப்பட்டிருந்தது.. தனியார் பள்ளி பேருந்துகளில் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது..

கேமரா

கேமரா

நாளைக்குள் அதாவது நவம்பர் 15ம் தேதிக்குள் இந்த கேமராக்களை பொருத்தியிருக்க வேண்டும் என்றும் கெடு வைக்கப்பட்டிருந்தது.. நாளையுடன் இந்த கெடு முடிவடையும் நிலையில், கால அவகாசத்தை தனியார் பள்ளிகள் கோரியுள்ளன.. அப்படி கேமராவை பொருத்த காலஅவகாசம் வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் சங்கம் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது..

சிசிடிவி

சிசிடிவி

இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகளின் சங்க மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் 57 ஆயிரம் பள்ளி வாகனங்கள் இருக்கின்றன.. இந்த வாகனங்களுக்கு பின்பகுதியில் நாளை செவ்வாய்க்கிழமைக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும், இல்லையென்றால் தகுதி சான்று ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.. இந்த கண்காணிப்பு கேமராக்களை இவ்வளவு குறுகிய நேரத்துக்குள் பொருத்திவிட முடியாது.. அதனால்தான், இன்னும் ஒரு மாதம் கால அவகாசம் கேட்டிருக்கிறோம்..

 டேமேஜ்

டேமேஜ்

ஒருவேளை காலஅவகாசம் வழங்காவிட்டால், இதற்காக சென்னையில் போராட்டம் நடத்தப்படும். கள்ளக்குறிச்சியில் ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் 3,500 மாணவர்கள், சிபிஎஸ்இ மாணவர்கள் 500 பேர் படித்து வந்தனர்... ஆனால், மாணவி தற்கொலையை காரணம் காட்டி, அந்த பள்ளி சேதப்படுத்தப்பட்டது... அங்கு நடந்த கலவரத்தில் பலர் கைது செய்யப்பட்டனர்.. பிறகு, கோர்ட்டு அறிவுறுத்தலின்படி, பள்ளி முழுமையாக சீரமைக்கப்பட்டு விட்டது என்றாலும், அந்த பள்ளியை இன்னும் திறக்க அனுமதிக்கவில்லை...

 நந்தகுமார் அதிரடி

நந்தகுமார் அதிரடி

இதனால் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலைமை உள்ளது.. இதனால் வருகிற 16-ந் தேதிக்குள் தனியார் மெட்ரிக் பள்ளியை திறக்க அனுமதிக்காவிட்டால், பள்ளி மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், ஊழியர்கள் என 10 ஆயிரம் பேர் பள்ளியை திறக்க அனுமதி வழங்க கோரி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என்றார். பள்ளி வாகனங்களில் கேமராக்களை பொருத்த நாளையுடன் கெடு முடிவடையும் நிலையில், தனியார் பள்ளிகள் அவகாசம் கேட்டு, போராட்டத்தை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

English summary
CCTV Issue and protest will be held if no time is given to install, says TN Matriculation Schools Association
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X