ரூ 1.50 கோடி பண மோசடி புகார்.. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சிவனாண்டி மீது பாய்ந்தது வழக்கு
சென்னை: தொழிலதிபர் ஒருவரிடம் பணமோசடி செய்ததாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சிவனாண்டி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தன்னிடம் கடனாகப் பெற்ற பணத்தை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சிவானான்டி திருப்பித் தராமல் மோசடி செய்ததாக வி ஆர் கிருஷ்ணசாமி என்ற தொழிலதிபர் புகார் அளித்தார்.

அந்த புகாரில் "கடந்த 2015ஆம் ஆண்டு கடலூரில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதாகக் கூறி 24% வட்டியில் ஒரு கோடி ரூபாயை சிவனாண்டி கடன் கேட்டார். இதையடுத்து அவரது பிஸ்னஸ் பார்ட்னர் கணபதி ராம சுப்பிரமணியத்திற்குப் பணம் அனுப்பினேன்.

இது தொடர்பான கடன் ஒப்பந்தமும் எனக்கும் கணபதி ராம சுப்பிரமணியத்திற்கும் இடையே போடப்பட்டுள்ளது. மூன்று மாதத்தில் 24% வட்டியுடன் ஒரு கோடி ரூபாயைத் திருப்பி அளிப்பதாக வாக்குறுதி கொடுத்தார். இருப்பினும், தற்போது வரை அந்தத் தொகையைத் திருப்பி அளிக்கவில்லை.
முன்னதாக கடந்த 2002ஆம் ஆண்டும் நெல்லையில் கோலா பிளான்ட் அமைக்க இருவரும் என்னிடம் 50 லட்சம் கடனாகப் பெற்றனர். அந்தத் தொகையையும் என்னிடம் திருப்பி அளிக்கவில்லை" என அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
மொத்தம் 1.50 கோடி ரூபாயைக் கடனாகப் பெற்று மோசடி செய்ததாகப் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சிவனாண்டி மீது ஐபிசி பிரிவு 420 கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல அவரது பிஸ்னஸ் பார்ட்னர் கணபதி ராம சுப்பிரமணியம் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை முடக்கிய 4.24 கோடி ரூபாய் சொத்தை முறைகேடாக விற்பனை செய்தது தொடர்பாகக் கணபதி ராமசுப்பிரமணியத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சனிக்கிழமை கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications