மதுரை விமான நிலையம்.. முக்கிய கோரிக்கை வைத்த தமிழக எம்.பி.க்கள்.. வெளிப்படையாக மறுத்த மத்திய அரசு!
சென்னை: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவில் நகரம் என்று அழைக்கப்படும் மதுரை மிக முக்கியமான நகரமாகும். பெரிய நகரமான மதுரையில் விமான நிலையம் உள்ளது. சென்னைக்கு அடுத்து உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் முக்கியத்துவம் பெற்ற விமானநிலையமாக இது உள்ளது.
ஆனால் மதுரை விமானநிலையம் இதுவரையிலும் சர்வதேச விமான நிலையமாக அங்கீகரிப்படவில்லை. சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கு என வெளிநாடுகளுக்கு மதுரையில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டாலும் சர்வதேச அங்கீகாரம் கிடைக்கவில்லை.

ஒப்பந்தம்
மதுரை விமான நிலையத்துக்கு சர்வதேச விமான நிலையங்களுடன் விமானப் போக்குவரத்து தொடர்பாக மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். இதன்படி மதுரை விமான நிலையம் 24 மணி நேரம் செயல்பட்டால் மட்டுமே வெளிநாட்டு விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களை மதுரைக்கு இயக்க முடியும். ஆனால் இந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை.

தமிழக எம்.பி.க்கள் குரல்
மதுரை விமானநிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கு தமிழக எம்.பி.க்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், ''மதுரை விமான நிலையம் 1956 இல் உருவாக்கப்பட்டது. 2010 -இல் யூ.பி.ஏ. அரசாங்கத்தில் புதிய முனையம் கிடைத்தது. ஆனால், இன்னும் சர்வதேச அந்தஸ்துக்காக காத்திருக்கிறோம். கோரக்பூர்,திருப்பதி விமான நிலையம் விரைவாக சர்வதேச விமான நிலைமான நிலையில் மதுரை விமான நிலையத்தையும் இதுபோன்று ஆக்க வேண்டும்' என்று அவர் பேசினார்.

கடிதம் கொடுத்தனர்
மேலும், மதுரை விமானநிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றக்கோரி மதுரை எம்பி சு.வெங்கடேசன், விருதுநகர் எம்பி மாணிக்கம்தாகூர் ஆகியோர் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா எம்.சிந்தியாவிடம் கடிதம் அளித்தனர். தமிழக எம்பிக்கள் கார்த்தி பி.சிதம்பரம், விஜய் வசந்த் உள்ளிட்ட பலரும் இதில் கையெழுத்திட்டனர். இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.

என்ன நியாயம்?
அந்த கடிதத்துக்கு பதிலளித்த ஜோதிராதித்யா சிந்தியா ''பல வட மாநிலங்களில் ஒரு சர்வதேச விமான நிலையம் தான் இருக்கிறது. தமிழகத்திற்கு நான்காவதாக மதுரைக்கு கேட்பது என்ன நியாயம்? தர முடியாது. ஏற்கெனவே ஏராளமான விமான நிலையங் களை இணைத்து விட்டோம். எனவே மதுரையை இணைக்க முடியாது. மது ரையில் இருந்து இயக்கப்படும் இந்திய விமானங்களை அபுதாபி, மஸ்கட், சிங்கப்பூர், கோலாலம்பூருக்கு இயக்குவதற்கான ஏற் பாடுகளுக்கு முன்னுரிமை தருகிறோம்'' என்று கூறினார், இந்த தகவலை சு.வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications