எதிர்பார்த்தபடி கனமழைக்கு வாய்ப்பு இருக்கு... வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தமிழகத்தில் வெப்பசலனம் மற்றும் தென் மேற்கு பருவமழை காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், சென்னையில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், கூறியிருக்கிறது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தென் தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, ஒரு சில இடங்களில், மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், தென்மேற்குப் பருவமழை வலுப்பெற்று வருகிறது. இதன் காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருநெல்வேலி மாவட்டங்களில், மேற்குத் தொடர்ச்சி மலைசார்ந்த பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, கோயம்புத்தூர் மாவட்டம் சின்னக்கல்லாரில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும், வால்பாறை, சோலையாறில் தலா 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், இன்றும், நாளையும், மாலை அல்லது இரவில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications