சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பூமி இவ்வளவு அழகா இருக்குமா?.. சந்திரயான் 2 முதல்முறை வெளியிட்ட புகைப்படம்.. இதை பாருங்க!

சந்திரயான் 2 மூலம் முதல்முறை வெளியிடப்பட்ட புகைப்படம் தற்போது இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: சந்திரயான் 2 மூலம் முதல்முறை வெளியிடப்பட்ட பூமியின் புகைப்படம் தற்போது இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட்டு இரண்டு வாரம் ஆகிவிட்டது. கடந்த 22ம் தேதி மதியம் 2.49 மணிக்கு சந்திரயான் 2 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான் 2 தற்போது வெற்றிகரமாக சந்திரனை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.

Chandrayaan-2 releases its first-ever official photo from the space

சந்திரயான் 2 பூமியில் இருந்து செலுத்தப்பட்டதில் இருந்து நிலவை அடையும் வரை மொத்தம் 48 நாட்கள் பயணம் மேற்கொள்ள இருக்கிறது. தற்போது இது பூமியை சுற்றிக்கொண்டு இருக்கிறது.

அதோடு கொஞ்சம் கொஞ்சமாக சந்திரயான் நிலவை நோக்கி நகர்ந்து செல்லும். அதன்படி இதுவரை 4 முறை சந்திரயான் 2ன் சுற்றுவட்டப்பாதை மாற்றப்பட்டுள்ளது. இதோடு அது தனது 18 நாட்கள் பயணத்தை முடித்துவிட்டது.

இது பூமியை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. சந்திரயான் 2 செலுத்தப்பட்ட பின் தற்போது பூமியை 475 கிமீ தூரத்தில் இருந்து சுற்றி வருகிறது. இந்த நிலையில் சந்திரயான் 2 மூலம் முதல்முறை வெளியிடப்பட்ட புகைப்படம் இஸ்ரோ மூலம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

வட அமெரிக்கா மேலே செல்லும் நேரத்தில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டரில் இருக்கும் L14 கேமரா மூலம் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது.

பூமியை மிகவும் அழகாக சந்திரயான் புகைப்படம் எடுத்துள்ளது. இணையம் முழுக்க இந்த முதல் மூன்று புகைப்படங்கள் வைரலாகி உள்ளது. ஆனால் இதற்கு முன் சந்திரயான் 2 மூலம் வெளியிடப்பட்டதாக இணையத்தில் நிறைய பொய்யான புகைப்படங்கள் சுற்றி வந்தது. இதனால் தற்போது உண்மையான புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

English summary
Chandrayaan-2 releases its first-ever official photo from the space with the L13 Camera.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X