3 நாட்கள் பள்ளிக்கு வந்தால் ஹால் டிக்கெட்.. பொதுத்தேர்வு அனுமதியில் புதிய மாற்றம்? அன்பில் மகேஷ்!

2 அல்லது 3 நாட்கள் பள்ளிகளுக்கு வந்தால் கூட ஹால் டிக்கெட் வழங்குவதாக அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளிகளுக்கு ஆண்டிற்கு 3 நாட்கள் வருகை தந்தாலும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதனால் பள்ளிகளுக்கு குறைந்தபட்ச வருகை பதிவு இருந்தால் தான் தேர்வு எழுத முடியும் என்ற விதிமுறையில் மாற்றம் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வின் போது முதல் நாள் நடைபெற்ற தமிழ்த் தேர்வை 50 ஆயிரத்து 674 மாணவர்கள் எழுதாமல் ஆப்சென்ட் ஆனது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக நேற்று நடைபெற்ற ஆங்கிலத் தேர்வையும் 50 ஆயிரம் பேர் எழுதவில்லை. இது கல்வியாளர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தேர்வு இல்லை.. கைநிறைய சம்பளம்.. 12 முடித்தாலே என்ஐஇயில் அரசு வேலை.. சென்னை, நெல்லையில் தான் பணி!'

பொதுத்தேர்வு எழுதாத 50 ஆயிரம் மாணவர்கள்

பொதுத்தேர்வு எழுதாத 50 ஆயிரம் மாணவர்கள்

இதனிடையே நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கல்வித்துறையின் உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டினார். இதில் மாணவர்கள் தேர்வு வராதது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், அரசுப்பள்ளி மாணவர்கள் 38,000 பேரும், அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 8,500 பேரும், தனியார் பள்ளி மாணவர்கள் 1,500 பேரும் முதல்நாள் தேர்வை எழுதவில்லை என்று தெரிவித்தார்.

தேர்வு எழுத வைக்க முயற்சி

தேர்வு எழுத வைக்க முயற்சி

தொடர்ந்து, தேர்வு நாளன்றே தேர்வு எழுதாத மாணவர்கள் குறித்து விசாரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மாணவர்கள் தேர்வுக்கு வராததற்கு காரணம் என்ன என்பது குறித்தும் விசாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில மாணவர்கள் பள்ளிகளுக்கு குறைந்த நாட்களே வந்திருந்தாலும், அவர்களுக்கும் ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களை தேர்வு எழுத வைக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கிறோம் என்று தெரிவித்திருந்தார்.

குறைந்தபட்ச வருகை பதிவேடு விதி

குறைந்தபட்ச வருகை பதிவேடு விதி

இந்த நிலையில் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், 50 ஆயிரம் மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதவில்லை என்பது அதிர்ச்சியாக இருந்தாலும், அனைத்து மாணவர்களையும் தேர்வு எழுத வைக்க வேண்டும் என்ற முனைப்புடன் அரசு செயல்பட்டு வருகிறது. பள்ளிகளில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் வருகை பதிவு இருந்தால் தான் தேர்வு எழுத முடியும் என்ற விதிகள் இருந்தாலும் கூட, இரண்டு நாள், மூன்று நாள் பள்ளிகளுக்கு வந்திருந்தால் கூட தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறார்கள், இனியும் அனுமதிக்கப்படுவார்கள். மாணவர்கள் தேர்வு எழுத வைக்க வேண்டும் என்று முயற்சிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

விதிமுறையில் மாற்றம் வருமா?

விதிமுறையில் மாற்றம் வருமா?

ஆனால் பள்ளிக்கல்வித்துறை மாற்றம் மாணவர்கள் மத்தியில் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஏனென்றால் 2 அல்லது 3 நாட்கள் மட்டும் பள்ளிகளுக்கு வந்தவர்களால், பொதுத்தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு எவ்வாறு பதில் அளிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் இனி வரக்கூடிய ஆண்டுகளிலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட உள்ளதாக தெரிகிறது. அதனால் குறைந்தபட்ச வருகை பதிவேடு இருந்தால்தான் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்ற விதிமுறையில் மாற்றம் கொண்டு வரப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+