ஜோசப் விஜய் பெரம்பூரில் கால் வெச்சதுமே? புகையுது தவெக? ரூ.100 கோடி பிராமிஸ் தந்த அந்த விஐபி யார்
சென்னை: தமிழ்நாட்டில் இன்னும் கொஞ்ச நாளில் தேர்தல் நடக்க போகிறது.. கட்சிகள் அனைத்துமே பிஸியாக செயல்பட்டு வருகின்றன.. அந்தவகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பெரம்பூர் தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்து, 'விசில்' சின்னத்திற்காகத் தீவிரப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். இருந்தாலும், அக்கட்சியின் வேட்பாளர் தேர்வு முறைகள் பெரும் அரசியல் விவாதங்களையும். தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
சேலம் மேற்கு தொகுதியில் தவெக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் லட்சுமணன்.. இவர் ஒரு முன்னாள் காவல் ஆய்வாளர். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பல்வேறு வழக்குகளில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டவரும்கூட..

ரூ.100 கோடி ரூபாய் செலவு
பிறகு ரியல் எஸ்டேட் தொழிலில் நல்ல வருமானம் ஈட்டியதாக தெரிகிறது.. தற்போது அதிமுகவில் இணைய முயன்று தோல்வியுற்றார். அதிமுக தலைமையிடம் "சீட் கொடுத்தால் 100 கோடி ரூபாய் வரை செலவு செய்யத் தயார்" என்று அவர் அளித்த வாக்குறுதி எடப்பாடி பழனிசாமி தரப்பில் எடுபடவில்லையாம்..
ஆனால் அதிமுகவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே, நடிகர் விஜய்யின் தவெகவில் இணைந்த லட்சுமணனுக்கு உடனடியாக சேலம் மேற்குத் தொகுதி வழங்கப்பட்டுள்ளது. "பல கோடி ரூபாய் செலவு செய்யத் தயார்" என்ற ஒற்றைக் காரணத்திற்காகவே இவருக்கு கதவுகள் திறக்கப்பட்டதாக அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் வேதனையுடன் கூறுகிறார்களாம்.
தவெக நிர்வாகிகளுக்கு பிரியாணி
இப்போது தவெக நிர்வாகிகளுக்கு பிரியாணி விருந்து மற்றும் பணத்தை வாரி இறைத்து லட்சுமணன் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாகவும் தகவல்கள் பரபரக்கின்றன.
இப்படி சேலம் மட்டுமல்லாது, தென் மாவட்டங்களிலும் தவெகவின் வேட்பாளர் தேர்வு கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது... அதாவது தூத்துக்குடி தொகுதியில் விஜய்யின் நீண்ட கால நண்பரான ஸ்ரீநாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியின் தொடக்கக் காலத்தில் இருந்து உழைத்த விசுவாசமான தொண்டர்களையும், உள்ளூர் நிர்வாகிகளையும் புறக்கணித்துவிட்டு, சினிமாவின் நட்பின் அடிப்படையில் சீட் வழங்கப்பட்டதாகக் கூறி தவெகவினர் சாலை மறியலில் ஈடுபடும் அளவுக்கு சென்றுள்ளனர்..
திருவள்ளூர் தொகுதி
திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதிக்கு சேலத்தை சேர்ந்த ஒருவரை வேட்பாளராக அறிவித்ததும் தொண்டர்களைக் கொந்தளிக்க செய்துள்ளது. "மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை" என்ற அடிப்படை அரசியல் நாகரிகம் கூட இல்லாமல் வெளியூர்க்காரர்களைத் திணிப்பது தவெகவின் அரசியல் முதிர்ச்சியற்ற தன்மையையே காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
அனைத்துக்கும் மேலாக, வேட்புமனுத் தாக்கலை முடித்துவிட்டு பெரம்பூரில் பிரச்சாரத்தை தொடங்கிய விஜய்க்கு, முதல் நாளே காவல்துறையினருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. பெரவள்ளூர் பகுதியில் பிரச்சாரம் செய்ய அனுமதி பெற்றுவிட்டு, அனுமதி பெறாத கொளத்தூர் பகுதிக்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு நிலவியது. பிறகு செம்பியம் போலீசாருடன் நடந்த நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகே ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.
சி.ஜோசப் விஜய்
பணபலம் கொண்ட மாஜிக்கள் ஒருபுறம், நட்புக்காக வழங்கப்படும் வாய்ப்புகள் மறுபுறம் என தவெகவின் வேட்பாளர் பட்டியல் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது.
"பெரம்பூர் - சி.ஜோசப் விஜய்" என்று வேட்பாளராக பெயரை சொல்லி பிரச்சார முழக்கத்தை விஜய் துவக்கியுள்ளார்.. கொள்கை சார்ந்த அரசியலை முன்னெடுப்பதாகக் கூறிக்கொண்டு, வழக்கமான திராவிடக் கட்சிகளின் பாணியிலேயே பணத்தையும் செல்வாக்கையும் நம்பி களம் காண்பது விஜய்க்கு எத்தகைய வெற்றியைத் தேடித்தரும் என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
“சாக்கு போக்கு சொல்லக்கூடாது”.. விஜய் பிறந்தநாளையொட்டி தவெக தொண்டர்களுக்கு அமைச்சர் ஆனந்த் அட்வைஸ்! -
பிரசாதங்களை கோவில்களிலேயே தயாரிக்க வேண்டும்.. 3 மாதம் கெடு.. அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு! -
விஜயதரணியின் அடுத்த "ஜம்ப்".. விளவங்கோடு டூ தவெக மாஸ்டர் ஸ்கெட்ச்! காங்கிரஸ் எப்படி ஹேண்டில் பண்ணும் -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
ஆல் ஏரியாலயும் அய்யா கில்லி.. கர்நாடகாவை அதிர வைத்த விஜய் பயணம்! தேசிய அரசியலுக்கு தொடக்கப் புள்ளி? -
எம்ஜிஆர் பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வெள்ளி வாள் வழங்கி தரிசனம் -
717 டாஸ்மாக் கடைகள் மூடியாச்சா இல்லையா? RTI பதிலால் அதிர்ச்சி.. உடனே பாய்ந்து வந்த பாஜக! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
அரசு மருத்துவமனைகளில் புரட்சி.. இனி மொபைல் ஆப் மூலம் டோக்கன் முன்பதிவு.. விஜய் அரசின் புதிய முடிவு! -
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு! -
திருச்சி, கோவை, சென்னை.. அடியோடு மாறப்போகுது.. விஜய்யின் 5 மாஸ்டர்பிளான்.. டெல்லியில் பேசியது என்ன? -
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்!












Click it and Unblock the Notifications