செங்கல்பட்டு ஹாஸ்டல் வார்டனின் மனைவி.. உடைந்த தாழ்ப்பாள்.. காஞ்சிபுரம் வீட்டில் அஸ்வினி இருந்த கோலம்
சென்னை: காஞ்சிபுரம் தாலுகா திம்மசமுத்திரம் ஊராட்சி கரியன் கேட் அருகேயுள்ள காந்திநகர் பகுதியில் வசித்து வருபவர் ஜெய் சுரேஷ். செங்கல்பட்டு மாவட்டத்தில் விடுதி காப்பாளராக அங்கேயே தங்கி பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அஸ்வினி.இவர்கள் வீடு அருகே டாஸ்மாக் கடை இருக்கிறது. வீட்டில் இரண்டு குழந்தைகளுடன் இருந்துள்ளார். கடந்த 24 ம் தேதி அஸ்வினி இருந்த கோலம் உறவினர்களை ஆடிப்போக வைத்துள்ளது.
காஞ்சிபுரம் தாலுகா திம்மசமுத்திரம் ஊராட்சி கரியன் கேட் அருகேயுள்ள காந்திநகர் பகுதியில் வசித்து வரும் ஜெய் சுரேஷ் என்பவர், செங்கல்பட்டு மாவட்டத்தில் விடுதி காப்பாளராக அங்கேயே தங்கி வேலை செய்து வருகிறார். அவ்வப்போது வீட்டிற்கு வந்து செல்வாராம். இவரது மனைவி அஸ்வினிக்கு 29 வயது ஆகிறது.இவர்களுக்கு 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகளும், 2 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்.

தனிமையான வீடு
இவர்களது வீடு அருகாமையில் டாஸ்மாக் கடை இருக்கிறது. அத்துடன் அஸ்வினி ஜெய்சுரேஷ் தம்பதியின் வீடு, தனிமையான வீடாக இருக்கிறது. இதனால் வீட்டை பூட்டிவிட்டு அஸ்வினி தனது 2 குழந்தைகளுடன் வையாவூர் பகுதியிலுள்ள தனது தாய் வீட்டிலேயே வசித்து வந்தார். கடந்த 24-ந்தேதி கரியன் கேட் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றுள்ளார் அஸ்வினி, தலையில் வெட்டுக்காயங்களுடன் மயங்கி கிடந்தார். வீட்டின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்திருக்கிறது.
காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை
இது குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து காஞ்சிபுரம் பொன்னேரி கரை போலீசார் அஸ்வினியை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அஸ்வினி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பொன்னேரி கரை போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி அஸ்வினியை நகை, பணத்துக்காக யாராவது வெட்டிக்கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
டாஸ்மாக் கடை
டாஸ்மாக் கடை அருகே வீடு உள்ளதால், மது போதையில் யாராவது உள்ளே வந்து, வீடு புகுந்து நகை பணத்திற்காக தாக்கினார்களா? அல்லது வேறு ஏதேனும் சம்பவம் நடந்ததா என்பது குறித்து போலீசாரின் விசாரணையில் முடிவில் தான் தெரியவரும். காஞ்சிபுரம் பொன்னேரிக்கரையில் இளம் பெண்ணுக்கு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications