பேஸ்புக் காதலால் வாழ்க்கையில் நடக்ககூடாத விபரீதம்.. கதறும் கல்பனா.. கைதான புதிய கணவன்
சென்னை :பேஸ்புக் மூலம் அறிமுகமாகி தன்னை நம்பி வந்த பெண்ணைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றவரை சென்னை போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.
தஞ்சை பகுதியைச் சேர்ந்தவர் கல்பனா (38). இவர் தஞ்சையில் தனியார் வங்கி ஒன்றில் கிரிடிட் கார்டு பிரிவில் பணியாற்றிய போது பேஸ்புக் மூலம் சென்னை ஆவடி அண்ணாநகரைச் சேர்ந்த பிரசன்ன வெங்கடேஷ் (35) என்பவர் பழக்கம் ஆகி உள்ளார். இருவரும் ஆரம்பத்தில் நட்பாகப் பழகினர். பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளார்கள்..
இதையடுத்து தனது கணவர், குழந்தைகளை விட்டு பிரிந்த இவர், தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு வந்தார். சென்னை அடையார் சாஸ்திரி நகரில் ஹாஸ்டலில் தனியாக தங்கினார். அங்கு தான் கடந்த 3 வருடங்களாக வசித்து வந்தார்..

ஒரே வீடு
கடந்த ஜனவரி மாதம் கல்பனாவை பிரசன்ன வெங்கடேஷ் திருமணம் செய்துகொண்டார். இருவரும் ஆவடி பருத்திப்பட்டு பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பிற்கு குடிபெயர்ந்தனர்.. அந்த வீட்டுக்கு பிரசன்ன வெங்டேஷ், தன்னுடைய அம்மா விஜயா (51), அப்பா ரங்கசாமி (66), தங்கை புவனேஸ்வரி (30) ஆகியோரை அழைத்து வந்தார். அதன் பிறகு அனைவரும் ஒரே வீட்டில் குடியிருந்துள்ளார்கள்.

பாலியல் தொழில
தொழில் ஈடுபட சம்மதிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் ஆபாசப் படத்தை இணையதளத்தில் பதிவு செய்துவிடுவேன் என்றும் மிரட்டியிருக்கிறார். கல்பனா சம்மதம் தெரிவிக்காததால் அவரை பிரசன்ன வெங்கடேஷ் குடும்பத்தினர் அடித்து உதைத்துள்ளார்கள். கல்பனாவிடமிருந்த ஐந்து சவரன் தங்க நகைகள், 3 லட்சம் ரூபாயையும் பிரசன்னா குடும்பத்தினர் பறித்துக்கொண்டு ரூமில் அடைத்து சித்ரவதை செய்தார்களாம்.

சிறையில் அடைப்பு
ஒரு கட்டத்தில், பிரசன்ன வெங்கடேஷ் குடும்பத்தினரிடமிருந்து தப்பிய கல்பனா, ஆவடி காவல் நிலையத்தில் தனக்கு நடந்த . கொடுமைகளை புகாராக கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து பிரசன்ன வெங்கடேஷ் மற்றும் அவரின் குடும்பத்தினரிடம் விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு பிரசன்ன வெங்கடேஷ், அவரின் அப்பா ரங்கசாமி, அம்மா விஜயா, தங்கை புவனேஸ்வரி ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிந்து, அவர்களைக் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

சுயரூபம்
மனைவி, குழந்தைகள் உள்பட குடும்பத்தை விட்டு வேறு ஒருவரை நம்பி தஞ்சையில் இருந்து சென்னைக்கு வாழ வந்த கல்பனா, புதிய கணவனின் சுயரூபம் தெரிந்து நொந்து போய் உள்ளார். திருமணம் ஆன இரு வாரங்களில் புதிய கணவனின் சுயரூபம் வெளிப்பட்டிருக்கிறது.

கைதாகிய வெங்கடேஷ்
பெண்களுடன் இருநத பழக்கத்தை தட்டிக்கேட்டதால், கல்பனாவின் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டியதோடு, பாலியல் தொழிலில் ஈடுபடுத்துப்போவதாகவும் கணவர் பிரசன்ன வெங்கடேஷ் மிரட்டி உள்ளார் என்றும் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
-
சென்னை மெரினாவிற்கு வரும் ‘ரோப் கார்'.. இனி வானில் பறந்து கொண்டே பீச்சை ரசிக்கலாம்.. குட்நியூஸ் -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
சென்னை வாடகைதாரர்கள் கவனத்திற்கு! 2026 புதிய வாடகை சட்டத்தில் மாற போகும் அந்த 5 முக்கிய விதிகள் என்ன -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
தமிழ்நாட்டில் விபச்சாரத்திற்கு அனுமதி தர வேண்டும் - மஎஜக தலைவர் காயல் அப்பாஸ் வைத்த கோரிக்கை! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
"என் கைய விடு" ஐஏஎஃப் அதிகாரி மனைவிக்கு தோழன் விரித்த வலை! வசிய மாந்திரீகம்! நாக்பூரில் யார் பாருங்க -
கும்மிடிப்பூண்டி சிறுமியின் பெற்றோரை மிரட்டினாரா தவெக எம்எல்ஏ விஜயகுமார்? மாதர் சங்கத்தினர் புகார் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications