குன்றத்தூர் அபிராமி வழக்கில் 200 பக்க தீர்ப்பு! கடைசியாக நீதிபதி சொன்ன அந்த கவிதை! குழந்தைகள் பாவம்!
சென்னை: குன்றத்தூர் அபிராமி, அவருடைய கள்ளக்காதலன் மீனாட்சி சுந்தரத்திற்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி செம்மல், தனது 200 பக்க தீர்ப்பில் கூறியிருந்தது என்ன என்பதை பார்க்கலாம். மேலும் குழந்தைகள் மீது அபிராமி கொலை வெறியில் இருந்ததற்கான காரணமும் இந்த தீர்ப்பில் வெளியாகியுள்ளது.
அபிராமியை தேடி வீட்டுக்கே வந்த மீனாட்சி சுந்தரத்தை இரு முறை, ஹவுஸ் ஓனர் கவிதா ராமகிருஷ்ணன் கண்டித்து அனுப்பியதாகவும் அவர் சாட்சியம் அளித்துள்ளார். அதே வேளையில் பேரன், பேத்தியை இழந்துள்ள அபிராமியின் தந்தையோ, தனது மருமகன் விஜய்யிடம் போய், "சாட்சியை மாற்றிச் சொல்லுங்கள், அப்போதுதான் அபிராமிக்கு குறைந்தபட்ச தண்டனை கிடைக்கும்" என தெரிவித்ததையும் அதற்கு விஜய், "எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் பார்த்துக் கொள்ளலாம்" என்றும் அவர் தெரிவித்துவிட்டாராம். இந்த வழக்கில் நீதிபதி செம்மல் 200 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வாசித்துள்ளார். அபிராமி குற்றவாளி என்பது எப்படி நிரூபணமானது என்பதை பார்க்கலாம்.

சென்னை குன்றத்தூர் 3ம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் விஜய். இவருடைய மனைவி அபிராமி. இவர்களுக்கு அஜய், கார்னிகா ஆகிய இரு குழந்தைகள் இருந்தனர். விஜய்யும் அபிராமியும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களாம்.
இந்த நிலையில் விஜய், அடிக்கடி தன் குடும்பத்தினரை வெளியே அழைத்துக் கொண்டு சாப்பிடுவது வழக்கமாம். அந்த வகையில் மூன்றாம் கட்டளை பகுதியில் ஒரு பிரியாணி கடையில் சாப்பிடுவார்களாம். இந்த நிலையில் விஜய் இல்லாத போதும் பிரியாணியை ஆர்டர் போட்டு அபிராமி வாங்குவது வழக்கமாம்.
அப்படி அந்த கடையில் பில் போடும் நபராக பணியாற்றியவர்தான் மீனாட்சி சுந்தரம். இவருக்கு போன் செய்து அடிக்கடி பிரியாணி ஆர்டர் செய்து வந்த நிலையில் அபிராமிக்கும் சுந்தரத்திற்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. விஜய்க்கு தெரியும் வரை இருவரும் தங்கள் கள்ளக்காதலை ஜாலியாக வளர்த்து வந்த நிலையில், ஒரு நாள் விஜய்க்கு தெரியவந்ததாம்.
இதனால் மனைவியிடம், "இது தவறு" என விஜய் சொன்னாராம். ஆனால் அபிராமி அதை கேட்காமல், கள்ளக்காதலை தொடர்ந்து கொண்டே வந்தாராம். இந்த நிலையில் ஒரு முறை விஜய், அபிராமியிடம் சண்டையிட்ட போது, திடீரென கோபித்துக் கொண்டு மாயமாகிவிட்டாராம்.
அப்போது அலுவலக பணிகள் முடிந்து வீட்டுக்கு வந்த விஜய், குழந்தைகளிடம் அம்மா எங்கே என கேட்டாராம். அதற்கு அஜய், "அம்மா அந்த அங்கிள் வீட்டில் இருக்காங்க" என்றாராம். உடனே அபிராமியின் தாய், தந்தையை அழைத்துக் கொண்டு விஜய், அங்கிருந்து அபிராமியை அழைத்து வந்தாராம்.
ஒரு பகல், ஒரு இரவு, சுந்தரம் வீட்டில் இருந்த நிலையில் தனது மகன் தன்னை காட்டிக் கொடுத்ததால் அவர் மீது அபிராமிக்கு ஆத்திரம் இருந்து வந்ததாம். இதனால் சீக்கிரமே குழந்தைகளை கொன்றுவிட்டு சுந்தரத்துடன் தப்பியோட வேண்டும் என அபிராமி திட்டமிட்டிருந்தார்.
இந்த நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி குழந்தைகளுக்கு பாலில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து அவர்களை சாகடித்துவிட்டு நாகர்கோவிலுக்கு அபிராமி தப்பியோடியுள்ளார். குழந்தைகள் இறப்பு குறித்து விஜய் போலீஸில் புகார் அளித்தாராம். அந்த புகாரின் பேரில் நாகர்கோவிலில் அபிராமியை பிடித்த போது அவர், "குழந்தைகளை விஜய்யே கொன்றுவிட்டு என் மீது பழி போடுகிறார்" என அபிராமி தெரிவித்தாராம்.
இதையடுத்து குழந்தைகளின் பிரேதப் பரிதோதனை அறிக்கையில், பாலில் கலந்த தூக்க மாத்திரைகளே நஞ்சாகி குழந்தைகள் உயிரிழக்க காரணமாகிவிட்டது என குறிப்பிடப்பட்டிருந்ததாம். இந்த வழக்கில் ஹவுஸ் ஓனர் கவிதா ராமகிருஷ்ணன், அபிராமி கணவர் விஜய் என 23 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதாம்.
அதில் "குழந்தைகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கொன்றுவிடு" என அபிராமியிடம், சுந்தரம் கூறியதை தன் காதால் கேட்டதாக ஹவுஸ் ஓனர் கவிதா சாட்சி அளித்துள்ளார். மேலும் அபிராமியின் பைக்கை சுந்தரம் ஓட்டிக் கொண்டு, பின்னால் அபிராமி சென்றதையும் தான் பார்த்ததாக தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் அபிராமியின் தந்தை, சகோதரர் ஆகியோரை தவிர மற்றவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில் சுந்தரமும் சிக்கிய போது, எனக்கும் குழந்தைகள் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாராம். ஆனால் குழந்தைகளை கொன்றது அபிராமியும் சுந்தரமும்தான் என்பது தடயவியல் சோதனை, செல்போன் ஆடியோ, உரையாடல்கள் மூலம் தெள்ளத் தெளிவாக நிரூபணமானது.
இதையடுத்துதான் அபிராமியும் சுந்தரமும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிபதி செம்மல், சராசரி பெண்மணி குழந்தைகளை கொல்லும் படுபாதக செயல்களை செய்ய மாட்டார் என கூறி ஒரு குழந்தை, தன் தாயிடம் சொல்வது போல் ஒரு கவிதையை கூறினார். அவர் கூறுகையில் "நான் குழந்தை என் தலைவிதி உங்கள் கையில் உள்ளது.
நான் வெல்வேனா, தோற்றுப்போய் விடுவேனா என்பதைப் பெரிதும் நிர்ணயிப்பது நீங்கள்தான், உங்களை கையெடுத்துக் கும்பிடுகிறேன். மகிழிச்சியுடன் இருக்க என்ன தேவையோ அவற்றை எனக்கு தாருங்கள். உங்களை கெஞ்சிக் கேட்கிறேன். நான் இந்த உலகின் நற்பேறு எனப்பிறர் கூறுமளவிற்கு என்னை ஆளாக்குங்கள்" என அந்த கவிதையை நீதிபதி செம்மல் சொன்னார். மேலும் தகவல்களுக்கு வீடியோவை பாருங்கள்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications