மீண்டும் தீவிரம்.. சென்னையில் விடிய விடிய பெய்த கனமழை.. 3 மாவட்டங்களுக்கு ‛ரெட் அலர்ட்’ விடுப்பு
சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் நேற்று இரவு விடியவிடிய கனமழை பெய்தது.
மேலும் இன்றைய தினம் ராணிப்பேட்டை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் 29ம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்கியது. இதையடுத்து சில நாட்கள் சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.
அதன்பிறகு சில நாட்கள் மழையின் அளவு குறைந்தது. இந்நிலையில் வங்கக்கடலில் நேற்று முன்தினம் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.

3 நாள் கனமழை
இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோர பகுதிகளையொட்டி நிலவுகிறது. இது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி நாளைக்குள் நகரலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் நாளை மறுதினம் வரை பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையில் கனமழை
அதன்படி நேற்று மாலையில் இருந்தே தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விடியவிடிய கனமழை கொட்டித்தீர்த்தது. சென்னை வடபழனி, கிண்டி, மீனம்பாக்கம், அண்ணாசாலை, பல்லாவரம், குரோம்பேட்டை, மேடவாக்கம், தாம்பரம், கூடுவாஞ்சேரி, பம்மல், அனக்காப்புதூர், அடையாறு, மாங்காடு, அசோக் நகர், சைதாப்பேட்டை, தியாகராயநகர், நந்தம்பாக்கம், வள்ளூவர் கோட்டம், நுங்கம்பாக்கம் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. மழை பெய்தபோது சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இருப்பினும் உடனடியாக மழை நீர் வடிந்தததால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

இன்று கனமழை எச்சரிக்கை
மேலும் இன்றைய தினம் ராணிப்பேட்டை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், திருவாரூர், நாகப்பட்டினம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மதுரை-திண்டுக்கல் மாவட்டம்
இதுதவிர மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கைா, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
-
சென்னையின் மிக முக்கிய இடத்தை.. அப்படியே செதுக்க போறாங்க.. களமிறக்கப்பட்ட இரும்பு ராட்சசன்! -
கோடையில் கொட்டும் கனமழை.. அடுத்த 2 நாட்களுக்கு விடவே விடாது.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை -
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி! -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டிரான்ஸ்பரான சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியானது எப்படி? இரவில் நடந்தது என்ன? -
தென் மாவட்ட பயணிகளுக்கு ஷாக் கொடுத்த ரயில்வே! எழும்பூரில் இருந்து இந்த ரயில்கள் புறப்படாது -
Personality Test: படத்துல 3 ரூம் இருக்கு! எந்த அறை பிடிச்சிருக்குனு சொல்லுங்கள்! சர்பிரைஸ்! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
ரூ.45 லட்சம் நூதன மோசடி.. சென்னை தம்பதி மீது வழக்கு பதிவு! -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்!












Click it and Unblock the Notifications