சென்னையில் அதிகாலை முதலே கனமழை.. இந்த 7 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்.. வானிலை மையம்
சென்னை: தலைநகர் சென்னையிலுள்ள பெரும்பாலான இடங்களில் இன்று அதிகாலை முதலே கனமழை பெய்து வரும் நிலையில், தமிழக உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்னரே, வெயிலின் தாக்கம் மிக மோசமாக இருந்தது. இந்தாண்டு வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் மோசமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையமும் அறிவித்திருந்தது.
தமிழகத்திலும் கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தைக் கோடை வெயிலின் தாக்கம் மோசமாக இருந்தது. இருந்தாலும்கூட கடந்த சில தினங்களாக வளிமண்டலத்தில் ஏற்பட்ட சுழற்சி காரணமாகப் பரவலாகப் பெய்து வருகிறது.

சென்னையில் கனமழை
இந்நிலையில், இன்று அதிகாலை முதலே சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கிண்டி, அடையாறு, கோட்டூர்புரம், பல்லாவரம், அனகாபுத்தூர், வடபழனி, கோடம்பாக்கம், ராமாபுரம், விருகம்பாக்கம், தி நகர், கேகே நகர் உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

சென்னை புறநகர்
அதேபோல சென்னை புறநகர் பகுதிகளான வண்டலூர், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி ஆகிய இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல சுழற்சி நீடிப்பதால் அடுத்த மூன்று முதல் நான்கு மணி நேரம் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பரவலாக மழை
வளிமண்டல சுழற்சி காரணமாகச் சென்னை மட்டுமின்றி மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் நள்ளிரவு முதலே மழை பெய்து வருகிறது. ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் உள்ளிட்ட பல இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக வேலூர், காட்பாடி ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

வானிலை ஆய்வு மையம்
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குமரிக்கடல் பகுதியில் 1.5 கிமீ உயரத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று தமிழக உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்கள், புதுவை பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருபத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications