வெளியானது சென்னை-பெங்களூர்-மைசூர் வந்தே பாரத் ரயில் கால அட்டவணை.. சதாப்தியுடன் ஏன் போட்டி போடுகிறது?
சென்னை: சென்னை டூ மைசூர் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரமும் அதே வழி தடத்தில் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரமும் வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே இடைவெளி இருப்பதால் நேரத்தை மாற்றி அமைக்க ரயில்வே பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலானது முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 100 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 1988 ஆம் ஆண்டு டெல்லி- ஜான்சி இடையே தொடங்கப்பட்டது.
இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 150 கிமீ ஆகும். இந்த ரயில் சொகுசு ரயில் எனலாம். இது முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்டது. இந்த ரயிலில் குடிநீர் பாட்டில், ஜூஸ், காபி அல்லது டீ, பயணம் செய்யும் நேரத்திற்கேற்ப உணவு ஆகியவை வழங்கப்படும்.

21 ரயில்கள்
பல்வேறு நகரங்களுக்கு செல்லக் கூடிய சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் மொத்தம் 21 உள்ளது. அதில் ரயில் எண் 12007 சென்னை டூ மைசூரு, 12008 மைசூரு- சென்னை வழித்தடத்தில் 1994 ஆம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த இரு ரயில்களும் காட்பாடி, பெங்களூர் ஆகிய இடங்களில் மட்டுமே நின்று செல்லும்.

ரயிலில் பயணிப்பது
இந்த ரயிலில் பயணிப்பது என்றாலே பயணிகள் பெருமையாக கருதுவர். இந்த ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க ரயில் கட்டணம் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் சதாப்தி ரயிலை போல் பல வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயில் தென்னிந்தியாவில் முதல் முறையாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

இரு ரயில்கள்
சென்னை - மைசூரு இடையே இயக்கப்படும் இந்த ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு காட்பாடி, பெங்களூர் ரயில் நிலையத்தில் நிற்கும். பிறகு அத்துடன் மைசூருதான். இந்த ரயில் பெரம்பூர், வேப்பம்பட்டி, காட்பாடி, குடுபள்ளி, மலூர் ஆகிய வழித்தடங்களை தாண்டி செல்கிறது. 20608 எனும் எண் கொண்ட இந்த ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்படுகிறது. மைசூருக்கு மதியம் 12.30 மணிக்கு செல்கிறது. இதில் சேர் காருக்கு ரூ 1200 , எக்ஸிகூட்டிவ் கிளாஸுக்கு ரூ 2295 வசூலிக்கப்படுகிறது.

மைசூர் - சென்னை
அது போல் மைசூர் - சென்னை இடையே இயக்கப்படும் 20607 என்ற எண் கொண்ட வந்தே பாரத் ரயில் மைசூரிலிருந்து மதியம் 1.05 மணிக்கு புறப்படுகிறது. சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தை இரவு 7.35 மணிக்கு அடைகிறது. அது போல் சேர் காருக்கு ரூ 1365 ம் எக்ஸிகூட்டிவ் கிளாஸுக்கு ரூ 2485 ம் வசூலிக்கப்படுகிறது.

சென்னை- மைசூர்
சென்னை- மைசூரு இடையே இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் காலை 6 மணிக்கு சென்ட்ரலில் இருந்து இயக்கப்படுகிறது. அது போல் புதிதாக இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் காலை 5.50 மணிக்கு புறப்படுகிறது. இதனால் இரு ரயில்களின் நேர இடைவெளி வெறும் 10 நிமிடங்கள் என்பதால் இந்த நேரத்தை மாற்றி அமைக்குமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். அது போல் வந்தே பாரத் மைசூரை மதியம் 1.05 மணிக்கு அடைகிறது. ஆனால் சதாப்தி ரயில் 2.05 மணிக்கு மைசூரை அடைகிறது.

சென்னை- மைசூர் வந்தே பாரத் ரயில் நேரம்
- சென்னை சென்ட்ரலில் இருந்து 5.50 am
- காட்பாடிக்கு வருகை- 7.21 am. இங்கு 4 நிமிடங்கள் நிற்கும்.
- காட்பாடியிலிருந்து புறப்பாடு- 7.25 am புறப்படுகிறது.
- பெங்களூருக்கு 10.20 am வருகை. 5 நிமிடங்கள் நிற்கும்.
- பெங்களூரிலிருந்து புறப்பாடு- 10.25 am
- மைசூர் வருகை- 12.20 pm

மைசூர் - சென்னை வந்தே பாரத் ரயில் நேரம்
- மைசூரிலிருந்து புறப்பாடு- 13.05
- பெங்களூரு வருகை- 14.55. இங்கு 5 நிமிடங்கள் நிற்கும்.
- பெங்களூரிலிருந்து புறப்பாடு- 15.00
- காட்பாடி வருகை- 17.36. இங்கு 4 நிமிடங்கள் நிற்கும்.
- காட்பாடியிலிருந்து புறப்பாடு- 17.40
- சென்னை சென்ட்ரல் வருகை- 19.30

சென்னை- மைசூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் நேரம்
- சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பாடு- 6 am
- காட்பாடி வருகை- 7.38 am. இங்கு 2 நிமிடங்கள் நிற்கும்.
- காட்பாடியிலிருந்து புறப்பாடு- 7.40 am
- பெங்களூர் வருகை- 10.45. இங்கு 5 நிமிடங்கள் நிற்கும்
- பெங்களூரிலிருந்து புறப்பாடு- 10.50
- மைசூர் சென்றடையும் நேரம் 13.00

மைசூர் - சென்னை சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் நேரம்
- மைசூரிலிருந்து ரயில் புறப்பாடு- 14.15 மணிக்கு
- பெங்களூர் வருகை 16.10, இங்கு 5 நிமிடங்கள் நிற்கும்.
- பெங்களூரிலிருந்து புறப்பாடு 16.15
- காட்பாடி வருகை- 19.23, இங்கு 2 நிமிடங்கள் நிற்கும்
- காட்பாடியிலிருந்து புறப்பாடு- 19.25
- சென்னை சென்ட்ரல் வந்தடையும் நேரம்- 21.30
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications