சென்னை: சொத்து வரி பாக்கி? உங்களை தேடி நோட்டீஸ் வரலாம்.. ஆக்சனில் இறங்கிய அதிகாரிகள்
சென்னை : கடந்த சில ஆண்டுகளாக சொத்து வரி பாக்கி செலுத்தாத வணிக வளாகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி வரி கேட்டு நோட்டீஸ் அனுப்ப வாய்ப்பு உள்ளது.
சென்னை மாநகராட்சியில் மண்டல அளவிலான வருவாய் அதிகாரிகள் ரூ 50,000 மற்றும் ரூ 1 லட்சத்துக்கு மேல் வரி பாக்கி வைத்துள்ளவர்கள், அல்லது அதற்கு மேல் அதிக வரி பாக்கி வைத்துள்ளவர்களிடம் வரி நிலுவைத் தொகையை வசூலிக்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளனர்.

நோட்டீஸ்
இந்நிலையில் வரியை வசூலிக்கு முயற்சியில் அதிகாரிகள் இறங்கி உள்ளனர். சனிக்கிழமையன்று, அண்ணா சாலையில் உள்ள ஒரு அலுவலக வளாகத்திற்கு ரூ .34.7 லட்சம் வரை வரி நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதேபோல், தி நகரில் உள்ள ஒரு உணவகத்திற்கும் பல லட்சம் நிலுவைத் தொகையை செலுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டது. அந்த கடைக்கு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது.

வணிக வளாகம்
திரு-வி-க- நகர் மண்டலத்தில், ஒரு மாலுக்கு சில நாட்களுக்கு முன்பு ரூ.1.2 கோடி கொடுக்க வேண்டும் என நோட்டீஸ் வழங்கப்பட்டது. அந்தமாலுக்குள் உள்ள 10 வெவ்வேறு வணிக நிறுவனங்களுக்கு வரி செலுத்த வேண்டி இருந்ததால் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

மின் இணைப்பு துண்டிப்பு
வரி செலுத்தாமல் ஏமாற்றும் நிறுவனங்கள், வரி நிலுவை தொகை செலுத்த மறுக்கும் கட்டிடங்களுக்கு நீர் மற்றும் மின் இணைப்புகளை துண்டிக்குமாறு சென்னை பெருமாநகராட்சி குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் மற்றும் மின்சாரி வாரியம் ஆகியவற்று அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளனர்.

அரசு உத்தரவு
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் வட்டாரம் இதுபற்றி கூறுகையில், குறைந்தது 500-600 பேர் பல லட்சங்கள் தராமல் பாக்கி வைத்துள்ளனர். 2018 வரையிலான நிலுவைத் தொகையை வசூலிக்கும்படி எங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது ஒரு நிதியாண்டின் முதல் ஆறுமாதத்தில் வரி வசூலை உயர்த்துவதற்காக நாங்கள் மேற்கொள்ளும் வழக்கமான செயல்முறை தான்.
Recommended Video

அரசு அதிரடி
இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதத்தில் வசூலிக்க வேண்டிய வரி மற்றும் நிலுவை தொகைகளாக ரூ. 650 கோடியாக இலக்கு நிர்ணயித்துள்ளோம். கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த ஆண்டு வரி வசூல் மிகவும் மோசமாக இருந்ததால் அப்போது வரி வசூலிக்கப்படவில்லை . 2020-21 நிதியாண்டில், சென்னை மாநகராட்சியால் சுமார் 470 கோடி ரூபாய் மட்டுமே வசூலிக்க முடிந்தது. அதை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு சென்னை மாநகராட்சி ஏற்கனவே சுமார் 300 கோடி வசூலித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications