டெங்குக் காய்ச்சல்.. பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் வீடுகள் தோறும் ஆய்வு செய்ய வரும் மாநகராட்சி பணியாளர்களுக்கு பொதுமக்கள் தங்கள் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்றும், கொசுப்புழு வளரிடங்கள் கண்டறியப்படும் வீடுகளுக்கு, கடைகள், ஓட்டல்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக மண்டல நல அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் மண்டல பூச்சியியல் வல்லுநர்களுடனான ஆலோசனைக் கூட்டம் அரசு முதன்மை செயலாளர் / பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, தலைமையில் இன்று (30.09.2021) ரிப்பன் கட்டட கூட்டரங்கில் நடைபெற்றது.
டெங்கு பாதிப்பு கடந்த 15 நாட்களில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 97 நபர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அடையாறு மண்டலத்தில் 27 நபர்களும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 18 நபர்களும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 15 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த மண்டலங்களில் அனைத்து கட்டடங்கள் மற்றும் வீடுகளிலும் உடனடியாக கள ஆய்வு மேற்கொண்டு கொசுப்புழு வளரிடங்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள இக்கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது. மேலும், இப்பகுதிகளிலுள்ள பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்கும் பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கொசு ஒழிப்பு பணி
கொசு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் இயந்திரங்கள் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள 2,120 சிறு வட்டங்களாக பிரிக்கப்பட்டு 1260 கொசு ஒழிப்பு நிரந்தர பணியாளர்கள், 2,359 ஒப்பந்தப் பணியாளர்கள் என மொத்தம் 3,619 பணியாளர்கள் மூலம் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,

வார்டு வாரியாக
மேலும், 258 மருந்து தெளிப்பான்கள் 87 பவர் ஸ்ப்ரேயர்கள். பேட்டரி மூலம் இயங்கும் 479 ஸ்ப்ரேயர்கள், 287 கையினால் இயங்கும் புகைப்பரப்பும் இயந்திரங்கள், 12 சிறிய புகைப்பரப்பும் இயந்திரங்கள் மற்றும் 68 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் இயந்திரங்கள் கொண்டு கொசுக்களை கட்டுப்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழைநீர் வடிகால் மற்றும் நீர்வழிக்கால்வாய்களில் கொசுப்புழு ஒழிப்பு பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் கொசுப்புழுக்களை அழிக்க ஒரு வார்டிற்கு கொசுமருந்து தெளிப்பான்களுடன் இரண்டு நபர்கள் என 200 வார்டுகளுக்கும் 400 நபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் ஒரு குழுவிற்கு 2 நபர்கள் என நாளொன்றிற்கு ஒரு கி.மீ. தூரத்திற்கு கொசு மருந்து தெளிக்க வேண்டும். ஒரு இடத்தில் வாரத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக மருந்து தெளிக்கவேண்டும். 25758 கி.மீ. நீர்வழித்தடங்களில் கொசு மருந்து தெளிக்க 128 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் ஒரு குழுவிற்கு 3 நபர்கள் என நீர்வழித்தடங்களில் நாளொன்றிற்கு ஒரு கி.மீ தூரத்திற்கு கொசு மருந்து தெளிக்க வேண்டும். ஒரு இடத்தில் வாரத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக மருந்து தெளிக்கவேண்டும்.

சாலைகள்
சாலைகள் மற்றும் தெருக்களில் கொசு ஒழிப்புபுகை பரப்புதல் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட குடிசைப் பகுதிகள், பூங்காக்கள் மற்றும்
சாலைகள் ஆகிய பகுதிகளில் புகைப்பரப்பும் இயந்திரங்கள் கொண்டு கொசுப் புழுக்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் 730 வரையிலும் புகைப்பரப்பும் இயந்திரங்கள் கொண்டு கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கிணறுகள்
மாநகராட்சி பணியாளர்களால் வீடுகள் தோறும் சென்று மேற்கொள்ளப்பட்ட களஆய்வில் 12,546 வீடுகளில் கொசுப்புழு வளரிடங்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் தண்டையார் பேட்டை இராயபுரம், திருவிக நகர், கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களில் மட்டும் சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட வீடுகளில் கொசுப்புழு வளரிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 80.584 திறந்த நிலையில் உள்ள கிணறுகளில் 99 இடங்களில் கொசுப்புழு வளரிடங்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் இராயபுரம் மண்டலத்தில் 15 கிணறுகளிலும், கோடம்பாக்கம் மண்டலத்தில் கண்டறியப்பட்டுள்ளன. 54 கிணறுகளிலும் கொசுப்புழு வளரிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

மேல்நிலை நீர்தேக்க தொட்டி
81877 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் 174 இடங்களில் கொசுப்புழு வளரிடங்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் தண்டையார் பேட்டை மண்டலத்தில் 25, இராயபுரம் மண்டலத்தில் 25, அம்பத்தூர் மண்டலத்தில் 27, தேனாம்பேட்டை மண்டலத்தில் 31 மற்றும் கோடம்பாக்கம் மண்டலத்தில் 41 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் கொசுப்புழு வளரிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
7.707 கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் 113 இடங்களில் கொசுப்புழு வளரிடங்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் தண்டையார் இராயபுரம் மண்டலத்தில் 19, அம்பத்தூர் மண்டலத்தில் 17 தேனாம்பேட்டை மண்டலத்தில் 15 கோடம்பாக்கம் மண்டலத்தில் 26 மற்றும் அடையாறு மண்டலத்தில் 15 கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் கொசுப்புழு வளரிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், 30,654 காலி இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 102 இடங்களில் தண்ணீர் தேங்கி கொசுப்புழு வளரிடங்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் தண்டையார் திருவொற்றியூர் மண்டலத்தில் 13. மாதவரம் மண்டலத்தில் B, கோடம்பாக்கம் மண்டலத்தில் 37 இடங்களில் மற்றும் அடையாறு மண்டலத்தில் காலி இடங்களில் கொசுப்புழு வளரிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

கட்டுமான இடங்கள்
டெங்கு கொசு உற்பத்தியாகும் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசுப்புழு வளரிடங்கள் கண்டறியப்படும் வீடுகளுக்கு ரூ.100 முதல் ரூ 200 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.500 முதல் ரூ 15,000, குறு சிறு கடைகளுக்கு ரூ.500 முதல் ரூ 5000, 1000 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ரூ.2,000 முதல் ரூ 50,000 ஓட்டல்களுக்கு ரூ5,000 முதல் ரூ 25,000, வணிக வளாகம் அரசு கட்டங்கள் தொழிற்சாலைகளுக்கு ரூ,10,000 முதல் ரூ 1,00,000, 1000 மாணவர்களுக்கு மேல் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ரூ.10,000 முதல் ரூ1,00,000, 5,000 சதுர அடிக்கு குறைவான கட்டுமான இடங்கள் ரூ.10,000 முதல் ரூ.50,000, 50 படுக்கைகளுக்கு கீழ் உள்ள மருத்துவமனைகள் ரூ 25,000 முதல் ரூ 100,000 2 நட்சத்திர மற்றும் அதற்கு மேற்பட்ட ஓட்டல்களுக்கு ரூ.100,000 முதல் ரூ.10,00,000, 50 படுக்கைகளுக்கு மேல் உள்ள மருத்துவமணைகள் ரூ.100,000 முதல் ரூ.10,00,000, 5,000 சதுர அடிக்கு மேல் உள்ள கட்டுமான இடங்கள் ரூ.1,00,000 முதல் 10,00,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

உடைந்த குடங்கள்
01.09.2021 முதல் 29.09.2021 வரை டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கொசுப்புழு வகாரும் இடங்களை கண்டறிந்து, கட்டிடத்தின் உரிமையாளர்களுக்கு இதுவரை அபராதத் தொகையாக ரூ. 125:000/ விதிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது மழை அவ்வப்பொழுது பெய்து வருவதால், மழைநீர் தேங்கக்கூடிய இடங்களில் கொசுப்புழுக்கள் வளர வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் உபயோகமற்ற டயர், தேங்காய் சிரட்டைகள். உடைந்த குடங்கள், உடைந்த சிமெண்ட் தொட்டிகள் முதலியவற்றில் தண்ணீர் தேங்கி கொசுப்புழு உருவாகும் வாய்ப்புள்ளதால் அதனை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும் கிணறு, மேல்நிலைத் தொட்டி கீழ்நிலைத் தொட்டிட தண்ணீர் தொட்டிகள் முதலியவற்றை கொசுக்கள் மற்றும் கொசுப்புழு புகாவண்ணம் மூடி வைக்க வேண்டும். தண்ணீர் நிரப்பிய பூ ஜாடி மற்றும் கீழ்த்தட்டு குளிர்பதன பெட்டியின் கீழ்த்தட்டு மணிபிளான்ட் போன்றவற்றில் தேங்கி நிற்கும். தண்ணீரை வாரமொருமுறை அகற்றி தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும், மேலும் வீடுகளில் களஆய்வு மேற்கொள்ள மண்டல சுகாதார அலுவலரால் வழங்கப்பட்ட மாநகராட்சி அடையாள அட்டையுடன் வரும் மாநகராட்சி பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

புகார்கள்
மேலும், கொசுப்புழுக்கள் நடவடிக்கைக்காக மேற்கொள்ளப்படும் கொசு ஒழிப்பு பணிகள் குறித்த ஒரு வார காலத்திற்கான அட்டவனை பெருநகர சென்னை மாநகராட்சியின் http://httrschennaicorsormation.ow.in.forting என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அட்டவணையில் உள்ள நாட்களில் தங்கள் பகுதிகளில் கொசுஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும் இதுகுறித்த புகார்களை பொதுமக்கள் 1013 என்ற உதவி எண்ணில் தெரிவிக்கலாம்" இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications