இந்த நிலையை அடைய.. 23 நாள் காத்திருந்த சென்னை.. பேக்கடித்த பாசிட்டிவ் ரேட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கடந்த மே 12ம் தேதி 7564 என்ற உச்சத்தில் இருந்த கொரோனா, 23 நாட்களில் 2 ஆயிரத்திற்கு கீழ் என்ற நிலையை அடைந்துள்ளது. இதற்கு முன்பு ஏப்ரல் 10ம் தேதி தான் 1971 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை தான், மாநிலத்திலேயே அதிக கொரோனா நோயாளிகள் உள்ள மாவட்டமாக திகழ்ந்தது. உயிரிழப்பும் இன்றுவரை சென்னையில் தான் அதிகமாக உள்ளது.

ஆனால் அரசின் ஊரடங்கு நடவடிக்கை காரணமாக சென்னையில் கொரோனா பரவல் குறைய தொடங்கியது. இன்னொரு முக்கிய காரணமும் சொல்லப்படுகிறது சென்னையில் இருந்து பலரும் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டதால் கொரோனா பரவல் சென்னையில் குறைந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

 கொரோனா சரிவு

கொரோனா சரிவு

சென்னையில் உச்சத்தை தொட்ட கொரோனா பரவல் கடந்த இரண்டு வாரங்களாக வேகமாக குறைந்து வருகிறது. 7 ஆயிரம் என்கிற நிலையில் இருந்து 4 ஆயிரம் ஆகவும் அதன் பின்னர் தற்போது 2 ஆயிரத்திற்கு கீழ் என்ற நிலையையும் அடைந்துள்ளது.

 குறையவில்லை

குறையவில்லை

சென்னையில் இன்று ஒரு நாளில் மட்டும் 1971 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக நேற்று இந்த எண்ணிக்கை 2062 ஆக இருந்தது. சென்னையில் கொரோனாவால் உயிரிழப்பு நேற்று 68 ஆகஇருந்தது. அந்த எண்ணிக்கை இன்று 71 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் தொற்று பாதிப்பு குறைந்தாலும் உயிரிழப்பு இன்று வரை குறையவே இல்லை.

 குணம் அடைந்தவர்கள்

குணம் அடைந்தவர்கள்

ஆனால் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. நேற்று 28186 ஆக இருந்த எண்ணிக்கை இன்று 26722 ஆக சரிந்துள்ளது. மேலும் நோய் தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையும் பெரியஅளவில் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 3364 பேர் குணம் அடைந்துள்ளனர். சென்னையில் இதுவரை 479145 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.

 விஜயானந்த் கருத்து

விஜயானந்த் கருத்து

சென்னை கோவிட் பாதிப்பு குறித்து கோவிட் டேட்டா அனலிஸ்ட் விஜயானந்த் கூறுகையில், "சென்னையில் தினசரி புதிய தொற்று பாதிப்பு இன்று 2000 க்கு கீழே 1,971 ஆக (10 ஏப்ரல் போன்றவை) குறைந்துள்ளது. அதாவது ஏப்ரல் 10ம் தேதி என்ற அளவிற்கு பாதிப்பு சென்றுள்ளது. மே 12 அன்று ஒரு நாளைக்கு 7564 லிருந்து 1971 என்ற நிலையில 23 நாட்களில் சென்னை எட்டியுள்ளது. இந்த 23 நாளில் குறிப்பிட்டதக்க அளவு தொற்று சரிந்துள்ளது. பாசிட்டிவ் ரேட் 6% ஆக குறைந்துள்ளது. ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை 26,722 ஆக குறைந்துள்ளது. சென்னையில் தற்போது 30000 முதல் 32,000 வரை தினசரி சோதனை செய்யப்படுகிறது" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+