சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னை போங்க..சரியாகும்! 5454 கிமீ பயணித்த தான்சானியா சிறுமி! டாக்டர்ஸ் செய்த மாயம்! இதான் தமிழ்நாடு

Google Oneindia Tamil News

சென்னை: வினோத நோயால் பாதிக்கப்பட்ட தான்சானியா நாட்டு சிறுமியை நம்ம சென்னை மருத்துவர்கள் காப்பாற்றி இருக்கிறார்கள். அந்த பெண்ணுக்கு இதற்காக மிக முக்கியமான சில சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் மருத்துவ தலைநகரம் சென்னைதான்! உலகம் முழுக்க பல நாடுகளில் இருந்து சென்னைக்கு மருத்துவம் பெற ஆயிரக்கணக்கானோர் வருவது வழக்கம். இதனால்தான் மருத்துவ சுற்றுலாவில் தமிழ்நாடு இப்போதும் டாப்பில் இருக்கிறது.

குணப்படுத்த முடியாத நோய்களை கூட சென்னை மருத்துவர்கள் எளிதாக குணப்படுத்தி இருக்கிறார்கள்.

 சென்னை மருத்துவம்

சென்னை மருத்துவம்

சர்வதேச அளவில் பல வளர்ந்த நாடுகளை கூட சென்னை மருத்துவ துறையில் பின்னுக்கு தள்ளி டாப்பில் இருக்கிறது. இப்படிப்பட்ட சென்னையில் சிகிச்சை பெற தான்சானியாவில் இருந்து 5454 கிமீ பயணம் செய்து பெண் ஒருவர் தனது மகளுடன் வந்து இருக்கிறார். விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அந்த சிறுமியை சென்னை சிம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் சிறப்பு சிகிச்சை அளித்து காப்பாற்றி உள்ளனர். அப்படி அந்த சிறுமிக்கு என்ன பிரச்சனை?

தான்சானியா

தான்சானியா

தான்சானியாவை சேர்ந்த அந்த சிறுமிக்கு 5 வயதுதான் ஆகிறது. இவருக்கு தண்டுவடத்தில் கேன்சர் ஏற்பட்டுள்ளது. இரண்டு இடங்களில் இந்த கேன்சர் இருந்துள்ளது. அதிலும் தண்டுவடத்தில் டம்பல்ஸ் போன்ற தோற்றத்தில் கேன்சர் காணப்பட்டுள்ளது. இந்த கேன்சர் மட்டும் 1.5 கிலோ எடை இருந்துள்ளது. சிறுமியின் தண்டுவடத்தில் அவ்வளவு பெரிய கேன்சர் இருந்ததால் அந்த சிறுமியால் நடக்க கூட முடியவில்லை.

 நீக்க முடியாது

நீக்க முடியாது

ஆனால் தண்டுவடத்தில் கேன்சர் இருந்ததால் அதை நீக்க முடியாது என்று பல நாட்டு மருத்துவர்கள் அந்த சிறுமியின் பெற்றோரிடம் கூறி உள்ளனர். கேன்சர் பாதிக்கப்பட்ட இடங்கள் மிகவும் சென்சிடிவ் பகுதிகள். அதை நீக்குவது கடினம் என்று பல நாட்டு மருத்துவர்கள் கை விரித்து உள்ளனர். வெறுமனே அந்த சிறுமிக்கு கீமோதெரபி மட்டும் செய்துள்ளனர். இது மொத்தமாக கேன்சரை குணப்படுத்தாது. பல செல்கள் உள்ளே இருக்கும். அதோடு மீண்டும் கேன்சர் வளர காரணமாக இருக்கும்.

 இரண்டு செய்ய வேண்டும்

இரண்டு செய்ய வேண்டும்

கீமோதெரபி மற்றும் சர்ஜரி இரண்டும் சேர்த்து செய்ய வேண்டும். ஆனால் அந்த சிறுமியின் கேன்சர் செல்கள் தண்டுவடத்தில் மட்டுமின்றி இதய வால்வுகள் செல்லும் பகுதிக்கு அருகிலும் வளர்ந்து உள்ளது. இதனால் அந்த வால்வுகள் ரத்த ஓட்டத்தை பாதிக்க தொடங்கி உள்ளன. அவசரமாக அந்த சிறுமிக்கு சர்ஜரி செய்ய வேண்டும். ஆனால் இங்கே செய்ய முடியாது என்று தான்சானியா மருத்துவர்கள் மறுத்துள்ளனர்.

சென்னை போங்க!

சென்னை போங்க!

இதையடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தவர்களுக்கு சில மருத்துவர்கள்.. சென்னை செல்லுங்கள்.. அங்கே இதற்கு சிகிச்சை செய்வார்கள் என்று ஆலோசனை வழங்கி உள்ளனர். இதற்காக அந்த சிறுமி தனது பெற்றோருடன் 5454 கிமீ பயணம் செய்து சென்னை வந்துள்ளார். அதன்பின் சென்னையில் நடந்தது எல்லாம் மருத்துவ அதிசயம்தான்! சென்னையில் சிம்ஸ் (SIMS) மருத்துவமனையில் அந்த சிறுமி அனுமதிக்கப்பட்டார்.

 சிகிச்சை

சிகிச்சை

தண்டுவடம், கேன்சர், இதயம் அருகிலும் பாதிப்பு என்பதால் பல பிரிவை சேர்ந்த வேறு வேறு எக்ஸ்பர்ட் மருத்துவர்கள் சேர்ந்து டீமாக அந்த சிறுமிக்கு சிகிச்சை வழங்கி உள்ளனர். மொத்தம் 7 மணி நேரம் விடாமல், 2 கட்டமாக சிகிச்சை வழங்கி, அந்த சிறுமியின் கேன்சரை நீக்கி உள்ளனர். மைக்ரோஸ்கோப் உதவியுடன் அந்த சிறுமியின் கேன்சர் பகுதிகளை சர்ஜரி செய்து நீக்கி உள்ளனர்.

நீண்ட நேர சர்ஜரி

நீண்ட நேர சர்ஜரி

முழு சிகிச்சைக்கு பின் மொத்தமாக கேன்சர் செல்கள் நீக்கப்பட்டு அந்த சிறுமி குணம் அடைந்தார். அதோடு தற்போது நடக்கவும் தொடங்கி உள்ளார். அவர் உடலை சரியாக பேணும் பட்சத்தில் மீண்டும் கேன்சர் செல்கள் தோன்ற வாய்ப்பு குறைவு என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். பல நாட்டு மருத்துவர்கள் கைவிரித்த நிலையில் 5 வயது தான்சானியா சிறுமியை நம்ம தமிழ்நாட்டு மருத்துவர்கள் சிறப்பான சிகிச்சை மூலம் காப்பாற்றி உள்ளனர்!

English summary
Chennai doctors successfully treat a Tanzania girl with huge tumor in spine: How? வினோத நோயால் பாதிக்கப்பட்ட தான்சானியா நாட்டு சிறுமியை நம்ம சென்னை மருத்துவர்கள் காப்பாற்றி இருக்கிறார்கள். அந்த பெண்ணுக்கு இதற்காக மிக முக்கியமான சில சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X