சினிமா பாணியில் டிஜிட்டல் எடை மெஷினில் வைத்து கஞ்சா, போதை மாத்திரை கடத்தல் - சென்னையில் 2 பேர் கைது

சென்னையில் இருந்து கத்தாருக்கு டிஜிட்டல் எடை மெஷினில் கடத்த முயன்ற போதைப் பொருட்களை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிஜிட்டல் எடை மெஷினுக்குள் கஞ்சா, போதை மாத்திரைகளை வைத்து கடத்த முயன்ற 2 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னையில் இருந்து கத்தார் தலைநகர் தோகாவுக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் விமான சரக்கு ஏற்றுமதி தளத்தில் இருந்த 55 டிஜிட்டல் எடை கருவிகளை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

Chennai: Drugs worth Rs.5.1cr hidden in cargo bound for Doha seized - 2 arrested

கருவிகளின் எடை வழக்கத்தை விட கூடுதலாக இருந்ததால் அவற்றை பிரித்து சோதனையிட்டனர். அப்போது, 44 எடை கருவிகளுக்குள் தலா ஒரு கிலோ வீதம் 44 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

மற்ற கருவிகளில் இருந்து 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான மெத்தபிடமைன் போதை மாத்திரைகள் மற்றும் தடை செய்யப்பட்ட பிரிகாபாலின் மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தனியார் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் மற்றும் அவருக்கு உதவிய சுங்க அதிகாரியையும் கைது செய்தனர்.

திரைப்படங்களில் போதை பொருட்களை கடத்த மாத்திரைகளை விழுங்கியும் உடம்பில் மறைத்து வைத்தும் லாவகமாக கடத்துவார்கள். விநாயகர் சிலை போல செய்து பெயிண்ட் அடித்தும் கூட கடத்தியுள்ளனர். அதே பாணியில் டிஜிட்டல் எடை மெஷினுக்குள் வைத்து போதைப்பொருள்களை கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+