கோவளம் டூ மாமல்லபுரம்.. கிழக்கு கடற்கரை சாலையில் பார்த்தீங்களா.. சென்னை ஈசிஆரில் கலக்கும் வீரர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், சைக்கிளிங் போட்டிகள் இன்று காலை சிறப்பாக ஆரம்பமாகி உள்ளது.. இந்த விளையாட்டு போட்டிகளையொட்டி, ஈசிஆர் ரோட்டில் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

பொதுவாக விளையாட்டுக்கள் என்றாலே, உலக அளவில் கிரிக்கெட் முதன்மையாக திகழ்கிறது.. அடுத்து, ஹாக்கி, கால்பந்து போன்ற விளையாட்டுகள் மட்டுமே பிரபலமாகி உள்ளன. இந்தியாவிலும் இந்த நிலைமைதான்.

Chennai ECR road and khelo india games 2024 cycling competition has started in kovalam to mamallapuram

அதனால்தான், மற்ற விளையாட்டுகளையும் நம்முடைய நாட்டில் பிரபலப்படுத்த வேண்டும், அந்தந்த விளையாட்டுக்களில் ஆர்வமுடைய வீரர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகவே கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பிரதமர் மோடி: இந்த முறை, கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நம்முடைய தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வருகின்றன.. விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் முயற்சியில், இந்த பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.. கடந்த 20ம் தேதி பிரதமர் மோடி சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார். இதில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகிறார்கள்.

தேசிய அளவில் நடைபெறும் இந்த போட்டிகளில் பங்கேற்க, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான அணிகள் திரண்டுள்ளன.. குறிப்பாக, கேரளா, கர்நாடகா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், மத்திய பிரதேசம், மிசோரம், சண்டிகர், மகாராஷ்டிரா, போனற் மாநிலங்களை சேர்ந்த அணிகள், க்ரூப் A, Group B என்று தனித்தனியாக மோத உள்ளார்கள்.. ஆண்கள், பெண்கள் என 2 பிரிவுகளிலுமே இந்த போட்டிகள் ஆரம்பமாகி உள்ளன.

தங்க கோப்பை: இந்த போட்டிகளில், நம்முடைய தமிழகத்து வீரர்களும் அசத்தி கொண்டிருக்கிறார்கள்.. ஓட்டப்பந்தயத்தில் கோகுல் பாண்டியன் தங்கனும், உயரம் தாண்டுதலில் அலைஸ் தேவா பிரசன்னா உள்ளிட்டவர்கள் தங்கம் வென்று அசத்தியிருக்கிறார்கள்.. மகளிர் 1000 மீட்டர் sprintmedleyrelay போட்டி, கூடைப்பந்து போட்டி என பல்வேறு போட்டிகளில் தமிழக வீரர், வீராங்கணைகள் கலக்கி கொண்டிருக்கிறார்கள்.

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் 2024, தமிழகத்தில், சென்னை கோயம்புத்தூர், மதுரை, திருச்சி மாவட்டங்களில் நடந்து கொண்டிருக்கிறது.. இந்த விளையாட்டில் ஒருபகுதியாக, சென்னை ஈசிஆரில்,ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான சைக்கிளிங் போட்டிகள் 2 நாட்களுக்கு நடக்க போகிறது.

மாமல்லபுரம்: கோவளம் முதல் மாமல்லபுரம் வரையிலான பகுதியில் இன்று சனிக்கிழமையும், நாளை ஞாயிற்றுக்கிழமையும் சைக்கிள் போட்டிகள் நடக்கின்றன.. ஆண்கள் மற்றம் பெண்கள் பிரிவினருக்கான சைக்கிளிங் போட்டியை இன்று காலை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணை பொது மெலாளர் சுஜாதா கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார்.

இந்த விளையாட்டு போட்டிகள் காரணமாக போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. இதுதொடர்பாக போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கேலோ இந்தியா (Khelo India) விளையாட்டு போட்டிகள் 2024 தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.

கோவளம்: அதன் ஒரு பகுதியாக ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான சைக்கிளிங் போட்டியானது கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் முதல் மாமல்லபுரம் வரையிலான பகுதியில் இன்று (27.01.2024) மற்றும் நாளை (28.01.2024) நடைபெற இருக்கிறது. எனவே, கோவளம் முதல் மாமல்லபுரம் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் பயணத்திற்கு பூஞ்சேரி, திருப்போரூர், கேளம்பாக்கம் (OMR) வழியாக பயன்படுத்தி கொள்ளவும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+