கிரைய பத்திரம்.. சென்னை ஈசிஆரில் ரூ.300 கோடி? போலி நில ஆவணத்துடன் வந்த தாசில்தார்.. பதிவுத்துறை மாஸ்
சென்னை: சென்னை ஈசிஆரில் உள்ள 300 கோடி ரூபாய் நிலம் தொடர்பான விவகாரம் ஒன்று பதிவுத்துறையில் பற்றிக்கொண்டு எரிகிறது. என்ன நடந்தது?
சென்னையில் செஞ்சுரி என்ற பெயரில் காலணி தயாரிக்கும் நிறுவனத்திற்கு சொந்தமாக 5.5 ஏக்கர் நிலம், திருப்போரூரில் ஈசிஆர் சாலையில் உள்ளது.. ரூ.300 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மும்பையில் உள்ளது.

இந்த நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்வதற்காக பல கும்பல்கள் முயற்சிகளை முன்னெடுத்தன. ஆனால், இது தலைமை நிறுவனத்துக்கு தெரியவந்ததையடுத்து, திருப்போரூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் தடை மனு தந்திருந்தனர்.
டிரான்ஸ்பர்: இப்படிப்பட்ட சூழலில், சார்பதிவாளர் நவீன் என்பவரிடம் போலி ஆவணம் தயார் செய்து தரும்படி ஒரு கும்பல் முயன்றுள்ளது.. ஆனால், நவீன் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்பதால், உடனடியாக அவர் மாற்றம் செய்யப்பட்டுவிட்டார்..
நவீனுக்கு பிறகு திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு, மதுராந்தகத்தில் சார்பதிவாளராக உள்ள கணேசனை பொறுப்பு சார்பதிவாளராக நியமிக்கப்பட்டார்.
போலி ஆவணம்: இப்போது, போலி ஆவணங்களை கொண்டு, ஒரு கும்பல் "செஞ்சுரி" நிறுவனத்தை, வேறு ஒரு நிறுவனத்துக்கு விற்பனை செய்ததுபோல விற்பனை செய்துள்ளது.. சார்பதிவாளர் கணேசனும் இதற்கு உடந்தையாக இருந்து, அந்த நிலத்தை பதிவு செய்தார்.. ஆனால், நிலத்துக்கான ஆவணத்தை தராமல், பதிவை நிறுத்தி வைத்து விட்டு விடுமுறையில் சென்றிருந்தார்.. இதற்கிடையில், இந்த பதிவை ரத்து செய்யும்படி சென்னை மண்டல டிஐஜி உத்தரவிட்டார்.
ஆனால், திடீரென பணிக்கு வந்த சார் பதிவாளர் கணேசன், ஜூனியர் உதவியாளரான சதீஷ்குமாரிடம் பொறுப்பை ஒப்படைக்கவும், அவரோ, நிறுத்தி வைத்திருந்த ஆவணங்களை விடுவித்து உத்தரவிட்டார்.
பதிவுத்துறை: ஆக, சார்பதிவாளர் கணேசன், உதவியாளர்கள் சதீஷ்குமார், சக்திபிரகாஷ் ஆகியோர் கூட்டாக சேர்ந்து இப்படியொரு மோசடி காரியத்தை செய்திருக்கிறார்கள்.. இறுதியில், இந்த விவகாரம் அமைச்சர் மூர்த்திவரை சென்றுவிட்டது.. அவரது உத்தரவின்பேரில், பதிவுத்துறை ஐஜி ஆலிவர் பொன்ராஜ் இந்த விவகாரத்தில் நேரடியாகவே களமிறங்கி விசாரணையை மேற்கொண்டார்.
அப்போது சார்பதிவாளர் கணேசன், சதீஷ்குமார், சக்திபிரகாஷ் 3 பேருமே முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானது.. இதையடுத்து, 3 பேரையுமே பதிவுத்துறை ஐஜி ஆலிவர் பொன்ராஜ் அதிரடியாக நீக்கி உத்தரவிட்டார்... இதுபோலவே வேலூர் மண்டலம் குடியாத்தம் பதிவுத்துறையில் பணியாற்றிய உதவியாளர் சிவக்குமார் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்ததால், அவரையும் சஸ்பெண்ட் செய்து பதிவுத்துறை ஐஜி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications